வெள்ளி, 10 ஜூன், 2016

ஏப்ரிகாட் / Apricot


நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள ஏப்ரிகாட் தோட்டம். வார இறுதி நாட்களில் இங்குதான் வாக் போவோம். பருவ நிலைக்கேற்ப அது மாறும் அழகே தனிதான்.

ஊரின் நடுவில் இருக்கும் இத்தோட்டம் இதுவே நம் ஊரில் என்றால் யாரோ ஒரு பெரிய ஆளின் கண்ணில் பட்டு நம் கண்களில் இருந்து காணாமலே போயிருக்கும் என நினைக்கத் தோன்றும்.

இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து, .......


வசந்தத்தில் பூத்து,.........

பின் இலைகள் தழைத்து


காய்த்து

கோடையில் பழுத்து சாப்பிடத் தயாரான நிலையில் ....


இப்போது sales போய்க்கொண்டிருக்கிறது.

சரி வாங்கலாம் என போனால் $ 3, $ 5 என விலை குறித்த பெட்டிகளில் இருந்த பழங்களில் ஒன்றுகூட‌ நன்றாக இல்லை. எல்லா பழங்களும் அடி பட்ட மாதிரியே இருந்தன. பொறுக்கி எடுக்க அனுமதியில்லை.

ஆனால் $ 25 பெட்டியில் இருந்தவை மட்டும் நல்லநல்ல‌ பழங்களாக இருந்தன. வாங்கினாலும் நான் மட்டுமே சாப்பிட வேண்டும். அவ்வளவு விலை போட்டு வாங்க வேண்டுமா என வந்துவிட்டேன்.

எனவே இப்போதைக்கு "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" என வந்திருக்கிறேன். (உண்மையில் அவர்கள் free sample குக் கொடுத்த (நாவல் பழம் சைஸில்) இந்த பழத்தின் இனிப்பு இன்னமும் நாவில் இரு(னி)க்கிறது)

ஒருவேளை நாளையே இனிக்கவும் செய்யலாம், அப்போது கட்டாயம் வாங்கி வந்துவிடுவேன்.

16 கருத்துகள்:

 1. எனக்கும் இது பிடிக்கும் சித்ரா. சின்னது டேஸ்ட் போல. முன்பு இருந்த இடத்தில் மரம் இருந்தது. அதில் பழம் பெரிதாக வரவிட்டதே இல்லை...!! வீட்டிலும் மரம் வைத்திருக்கிறாங்க இங்கு.
  பூ பூத்தபின் இலை வருதா..ஹி..ஹி. ஒரு சந்தேகம்.
  சாம்பிளுக்கு கொடுப்பதை நல்லதா கொடுப்பாங்க. அப்பதானே நாங்க வாங்குவம்..ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, உங்க ஊர்ல இப்படி கிடையாதா ? இங்க எல்லாமே தலைகீழ்தான். பூக்கள் பூத்து கொட்டி முடித்த பிறகுதான் இலைகள் வரும்.

   எனக்கும் இந்தப் பழம் ரொம்பவெ பிடிக்கும். அதனால அறுவடை பண்ணினா அனுப்பிவிடுங்க :)

   நீக்கு
 2. படங்கள் எல்லாமே அழகு. முதல் 5 படங்கள் ரெம்ப அழகு. (with out flower,with flower)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளிர் நாள்ல இம்மரத்தைப் பார்த்தால் பேய் ஆட்டம் போடுற மாதிரியே இருக்கும். பகலே இருட்டா இருக்கும்போது அப்படித்தான் தோணும். ரொம்பவே பிடிக்கும்.

   நீக்கு
 3. ஊருக்குள்ளயே தோட்டம்!! :) பொறுமையா எல்லா காலங்களிலும் படமெடுத்து கரெக்ட்டா கண்டுபுடிச்சு பகிர்ந்தும் இருக்கீங்க...நானும் இப்படி படமெடுப்பேன், ஆனா கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துபோயிரும். ஹிஹி...!!
  ஏப்ரிகாட் பாத்ததோட சரி, ரொம்ப விரும்பியெல்லாம் சாப்பிட்டதில்லை. நீங்க என்ஸொய் பண்ணுங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க், தோட்டம் என இந்த இடமே அழகா இருக்கும் மகி. இலை இல்லாத & பூ பூத்திருக்கும் சமயத்தில் மட்டும் படம் எடுத்து வைப்பேன். இந்த தடவ பழத்தையும் சேர்த்து எடுத்தாச்சு.

   இந்தப் பழம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சீஸன் சமயத்தில் வாங்கிடுவேன்.

   நீக்கு
 4. இதன் பூக்கள் வெகு அழகு. இந்தியாவிலும் குளிர் பிரதேசங்களில் இவை உண்டு. இப்பழத்தினை ஹிந்தியில் “ஆடூ” எனச் சொல்வார்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வெங்கட், பூக்கள் செர்ரி ப்ளாஸம் மாதிரியே அழகாத்தான் இருக்கும்.

   ஒரு ஹிந்தி வார்த்தை கற்றுக்கொண்டாகிவிட்டது :)

   நீக்கு
 5. இது வரை நான் சுவைத்துப் பார்த்ததில்லை சித்ரா. அடுத்த முறை அமெரிக்கப் போகும் போது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். ஒரு வேளை ஏப்ரிகாட் சீசன் இல்லாத போது தான் ஒவ்வொரு முறையும் அமெரிக்கப் போகிறேனோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, நீங்க வரும்போது கிடைக்காட்டி, உலர் பழம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்க. இங்கு இப்போதான் சீஸன்.

   நீக்கு
 6. பழத்தோட்டம் வெகு அழகு. ஒவ்வொரு பருவத்திலும் அழகாக படம் பிடித்து போட்டுள்ளீர்கள். பழங்களுடன் இருக்கும் படங்கள், பார்க்கையிலேயே ஆவலை தூண்டுகின்றன.

  பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாராவாரம் இங்கு போவதுண்டு. அப்போது எடுத்தவைதான் இந்தப் படங்கள்.

   நன்றி முகில்.

   நீக்கு
 7. எல்லா ஸீஸனிலும் படமெடுத்து,கோர்வையாக தொகுத்து ஆஹா அழகு. இந்தப்பழத்தை நேபாலில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன். ஆரூ என்று பெயர்.ஹிந்திக்கும் ,இதற்கும் பெயர் சிறிது வித்தியாஸம். நன்றாக இருக்கும்.
  சுவையான பதிவு. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, ஒரு எழுத்துதான் வித்தியாசமா இருக்கு ! போகிற போக்கில் ஒரு நேபாள வார்த்தையையும் கற்றுக்கொண்டாகிவிட்டது. வருகைக்கு நன்றிமா !

   நீக்கு
 8. ஆப்ரிகாட்டின் பூக்கள் அழகுதான் மரமும் அழகு. உங்கள் புகைப்படங்கள் அழகோ அழகு! எல்லா பருவத்திலும் எடுத்திருக்கின்றீர்களே சூப்பர். சரி இனி விதை விதைப்பதிலிருந்து எடுத்து ஒரு மரம் உருவாகிறது என்று ஒரு படமே எடுத்துவிடுங்கள்! ரொம்பப் பிடிக்கும்...உடம்பிற்கு மிகவும் நல்லதும் கூட..குறிப்பாகக் கண் பார்வைக்கு. இது இங்கு உலர்வடிவத்தில் கிடைக்கிறது. அஃப்கோர்ஸ் அங்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ துளசி & கீதா,

   வார இறுதி நாட்களில் இங்குதான் வாக் போவோம். வருடந்தோறும் குளிர் & வசந்தத்தில் மட்டுமே எடுத்து வைப்பேன். இந்தமுறை எல்லாவற்றையும் எடுத்தாச்சு !

   இவ்வளவு பயன்கள் இருக்கும்போது .... உழவர் சந்தையில் வாங்கியாச்சு :)

   நீக்கு