Thursday, June 23, 2016

குருவிக் கூடு !


எண்ணிச் சொல்லுங்க, இந்த மரத்தில் சுமார் எத்தனை குருவிகள் கூடு கட்டியிருக்குமென !



சரியா எண்ணியிருக்கீங்களா என நாளை வந்து சரி பார்க்கிறேன் :)

   /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// 

ஹி ஹி !! வாங்க எண்ணலாம், 1, 2, 3, ....

குளிர்காலத்தில்தான் தெரியும் ஒவ்வொரு மரத்திலும் எவ்வளவு கூடுகள் உள்ளன என்பது.  ஒரு மரத்தில் ஒன்றிரண்டு கூடுகளைப் பார்ப்பது உண்டு, ஆனால் இந்த மரத்தில் மட்டும் இவ்வளவு கூடுகள் !! 

வருடந்தோறும் பார்ப்பதுதான் என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் (எனக்கு) ஆச்சர்யம்தான் !



மேலேயுள்ள படம் இப்போது எடுத்தது. கீழேயுள்ளது குளிர்காலத்தில் எடுத்தது.

17 comments:

  1. ஏங்க ...ஏங்க ..இப்படி ...

    மரம் மட்டும் தான் தெரியுது ....குருவி கூடா ...அது எங்க ...

    ReplyDelete
    Replies
    1. அனுவோட பொறுமைய ரொம்பத்தான் சோதிச்சிட்டேனோ !!

      Delete
    2. இங்கையும் ஏரியில் இப்படித்தான் ஒரே மரத்தில் பல கூடுகள் இருக்கும் ...ஆன அது எல்லாம் குருவி இல்ல ...ரொம்ப பெரிய பறவைகள் ...குய குய னு சத்தமா இருக்கும் ...

      Delete
  2. ஓகே நீங்க சரி பார்த்துச்சொல்லுங்க. ஏன்னா நான் எண்ணியிருக்கவில்லை. ஹா..ஹா..ஹா....

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரியும் ப்ரியாவால எண்ண முடியாதுன்னு, அதான் இப்போ தெளிவான படத்தோட வந்திருக்கேன், இப்பவும் எண்ணாட்டி ? ....... அப்புறம் மார்க் ? ..... (குருவி)முட்டைதான் :)))

      Delete
    2. இது செல்லாது..செல்லாது.. போங்கு ஆட்டம். படத்தை மாத்தி காட்டி ஏமாத்திட்டீங்க. முதல் படத்தில்தான் எண்ணச்சொன்னனீங்க.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

      Delete
    3. இந்த போங்கு ஆட்டம்தானே புடிக்கிது :))

      Delete
  3. குருவியா ? எப்படி இருக்கும் ?
    நாங்கள் தான் தொலைத்து விட்டு நிற்கிறோமே!
    உங்கள் படங்கள் மிகவும் அருமை சித்ரா. நான் என் ஆதங்கத்தை கொட்டினேன்.அவ்வளவே.
    சிட்டுக் குருவியை நினைவுபடுத்தும் அருமையானப் பதிவிற்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதங்கம் புரியுது.

      இப்போது இருப்பதைவிட முன்பு இருந்த வீட்டில் நாள் முழுவதும் குருவிகளின் விதவிதமான குரல்களைக் கேட்கலாம். அதிகாலை நான்கு மணிக்கே ஆரம்பிச்சிடுவாங்க. நாங்களும் விடாமல் 'ஸ்கூலுக்குக் கெளம்பிட்டாங்க, வேலைக்குப் போறாங்களாம்' என்று கமெண்ட்ஸ் பண்ணிக்கொண்டிருப்போம் :)))

      Delete
  4. vநான் பார்த்தவரையில் இரண்டு,மூன்று மரத்தில் இரண்டு மூன்று கூடுகள்தான் பார்த்திருக்கிறேன். ஒரே மரத்தில் இவ்வளவு பார்த்ததில்லே. சித்ராவின் பார்வைக்காக கு.கட்டுப்பாடு இல்லாமல் அதிகம் கட்ட நேர்ந்து விட்டதாம். பறவைகள்தானே! அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      ஆமாம், இவ்வளவையும் ஒரே மரத்தில் பார்த்தது ஆச்சரியமாதான் இருந்தது.

      உங்கள் பின்னூட்டமும் பறவைக்கூடு போலவே சூப்பரா இருக்கே ! அன்புடன் சித்ரா.

      Delete
  5. லேட்டா வரதுல ஒரு சௌகரியம்... :)

    இரண்டுமே அழகான படங்கள்.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போ முடிவு பண்ணியாச்சு, அடுத்த தடவை எல்லோரின் வருகையும் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் பதிலைச் சொல்ல வேண்டும்னு :)

      Delete
  6. சித்ரா/சகோ, 10 எங்கள் கண்ணிற்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதாங்க இரண்டாவது படத்துல. முதல் படத்துல ஹிஹிஹி எப்படிங்க எண்ண முடியும்...அருமையான படங்கள்.....

    கீதா: இங்கு இது போன்று காக்காய்கள் ஒரு மரத்தில் 10 கூடுகள் கட்டிப் பார்த்திருக்கிறேன் இது போன்று பெரிய மரத்தில். சிறிய மரம் என்றால் 3, 4. சென்ற முறை இப்படிப் பார்த்த போது ஃபோட்டோ எடுக்க முடியாமல் போனது...

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      ஹி ஹி அது சும்மா கேட்டதுங்க :)))

      மீண்டும் போக நேர்ந்தால் எடுத்துட்டு வாங்க !

      Delete
  7. அழகு. நானும் குளிர் காலத்தில் இலையுதிர்ந்த மரங்களில் கூடுகளை கண்டதுண்டு. இணையத்தில் வாசித்த போது, அவை அணில் கூடுகள் என்றறிந்தேன்.இயற்கை எப்போதும் அழகானது.

    பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. ஓ, அணில் மர பொந்துக்குள்ள இருக்கும்னு நெனச்சேன்.

      இவை பெரிய பறவைகளின் கூடுகளாக இருக்கும் என நினைத்தேன். நன்றி முகில்.

      Delete