புதன், 13 ஜூலை, 2016

Pokémon Go !

என் பெண்ணிற்கு விடுமுறை என்றால் அது விடுமுறைதான். அவசியம் என்றால் தவிர வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.

அதெல்லாம் அப்போ ! அப்படின்னா இப்போ ???

கடந்த சில தினங்களாக காலையில் நானே மறந்தாலும் நினைவுபடுத்தி என்னை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு வழியாக.

இந்த வார இறுதியில் அதிசயமாக எங்களுடன் பூங்காவிற்கு வந்தாள். கடைகளுக்கும் விஜயம் த‌ந்தாள்.

மாதத்தில் ஓரிரண்டு முறை சந்தித்துக்கொள்ளவே சிரமப்படும் என் பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டுமுறை சந்தித்துக்கொண்டார்கள்.

இன்று 'நூலகம் செல்லலாம்' என்றாள்.

'அடடே புத்தகங்களின் மேல் என்ன ஒரு ஈர்ப்பு' என வியந்து(போனேன்) போனேன். நூலகத்தை அலசு அலசு என அலசிவிட்டு,  'நூலகத்தின் பின்னால் இருக்கும் பூங்காவுக்குப் போகலாம்' என சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.

வழக்கத்துக்கு மாறாக அங்கோ ஏகத்துக்கும் கூட்டம். 'பின்னே இருக்காதா ? பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் !! ஹா ஹா ஹா :))))

எல்லாம் இவளைப் போலவே மேனிலை & கல்லூரிப் பிள்ளைகள் தனித்தனியாகவும், குழுகுழுவாகவும் தங்கள் அலைபேசியுடன் சுற்றித் திரிந்தனர்.

வேறெதெற்கு ? Pokémonகளை  catch பண்ணத்தான்.

எங்கெங்கோ வெளி மாநிலங்களில் இருக்கும் தோழிகளுக்குள், " நீ எவ்வளவு போக்கிமான்களைப் பிடிச்சிருக்க, எந்த நிற டீம்ல நீ இருக்க ? "என்றெல்லாம் கேள்விகள் பறக்கினறன.

வீட்டிலே இருந்தாலும் Couch Potatoவாக இல்லாமல் இங்கும் அங்குமாக‌ நடந்துகொண்டே இருப்பதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வந்தது ஆரோக்கியமானதே என்றபோதிலும், எங்கெல்லாம் போவது பாதுகாப்பு, எங்கெல்லாம் போகக் கூடாது என்ற அறிவுரைகளுடன்  உள்ளூர் & உலக செய்திகளில் தினமும் இந்த விளையாட்டை விளையாடுபவர்களைப் பற்றிய செய்தி தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

என் அலைபேசியை நான் தொட்டாலே "நீயும் ஆரம்பிச்சிட்டியா, இன்னிக்கு நீ எத்தனை Pokémonகளைப் பிடிச்ச‌ " என்ற கேள்வி என் வீட்டிலிருந்தே என்னை நோக்கி வருகிறது.

இதனால் சாதாரணமாகத் தெரிந்த அலைபேசி, இப்போது அதை யார் நடந்துகொண்டே பயன்படுத்தினாலும் 'போக்கிமான் கேம் விளையாடுறாங்களோ" என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஹலோஓஓ !! அலைபேசியோட எங்க கெளம்பிட்டீங்க ??

ஹா ஹா .....இப்போ உங்களுக்கும் 'Pokémon Go' fever வந்துடுச்சா :))))

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ம்ம் ...இப்பவே தூக்கிப் போட்டாச்சு மகி, அடுத்த கேம் வந்தா இதுவுமே காணாமப் போயிடும்.

   நீக்கு
 2. :) எனக்கு இந்த ஃபீவர் வராது! அலைபேசியில் எந்த கேமும் விளையாடுவதில்லை!

  பதிலளிநீக்கு
 3. போக்மொன்? அட போங்கப்பா...போகாத ஊருக்கு வழி கேக்கறா மாதிரி....இதெல்லாம் யாருக்குப்பா தெரியுது..

  நாங்கல்லாம் போக்மொன் இல்ல வெறும் வாக்மொன் தான்...அச்சச்சோ இப்படிச் சொல்லக் கூடாதோ..சொன்னா வயசாயிடுச்சுனு அர்த்தமாகிடுமோ....ஹஹஹஹ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ துளசி & கீதா,

   எனக்கும்தான் தெரியாது, நான் ஏதாவது சொன்னேனா, இப்படி சொல்லி நீங்களே மாட்டிக்கிட்டீங்க பாருங்க‌, அப்புறம் இவங்க ஆட்டத்துல நம்மள சேர்த்துக்க மாட்டாங்க :))) இனி தெரிஞ்ச மாதிரியே மெயின்டெய்ன் பண்ணுவோம் :)

   தொலைக்காட்சியில போட்டுபோட்டு ரொம்பவே ஃபேமஸ் ஆகிடுச்சு.

   நீக்கு