வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சூரிய அஸ்தமனம்/Sun setting

சென்ற வாரம் ஒருநாள் மாலை,சூரியனின் அஸ்தமன‌க்காட்சி.அடுத்தடுத்து நிறம் மாறிக்கொண்டே இருந்ததால் ஆர்வமாகி எடுத்த காட்சிகள்தான் இவை. எதிரில் இருந்த வீடு மறைத்துக்கொண்டதால் முழுமையான காட்சி கிடைக்கவில்லை.வெளியில் போய் எடுக்கலாம் என்றாலும் நல்ல குளிர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரஞ்சுசிவப்பும்,purple நிறமும் மாறிமாறி வந்ததுதான்.ஒரு கட்டத்தில் அதாவது கடைசியில் purple நிறமே ஆட்கொண்டுவிட்டது.
.
எங்க வீட்டு patio வும்,எதிர் வீட்டுக் கூரையும் போட்டி போட்டுக்கொண்டு காட்சியை மறைத்ததால் மேற்கொண்டு எடுக்க முடியவில்லை.அவ்வ்வ்.ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு மலையின்மேல் ஏஏஏறி!!!நின்று காட்சிகளை பதிவு செய்து வர‌ வேண்டும்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மகி.

   நீக்கு
  2. //Gorgeous orange..wow! // ;))
   அசிஸ்டண்ட்டோட எஃபெக்ட் ஃபோட்டோஸ்ல தெரியுது என்று சொல்ல வந்தா, இங்க கமண்ட் இருக்கு. ;)

   சிம்ப்ளி சூப்பர்ப் ஃபோட்டோஸ்.

   நீக்கு
  3. ம்ம்..அப்படியா,எனக்குத் தெரியாதே அவங்களுக்கு ஆரஞ்சு கலர் பிடிக்கும்னு!

   "சிம்ப்ளி சூப்பர்ப் ஃபோட்டோஸ்"___நன்றி இமா.

   நீக்கு
 2. அந்தக். கடைசி இரண்டு போட்டோவும் கொள்ளை அழகு.
  போட்டோ எடுத்துப் பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
  பாராட்டுக்கள் .
  Sent from http://bit.ly/itamil

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு போட்டோவும் அழகு!என்னவொரு வர்ணஜாலம்!

  சூரிய உதயத்தை மலை மேல் ஏஏஏறி புகைப்படம் எடுத்து போடவும்! ஏதோ ஒரு பழமொழி (கூரை.....) நினைவுக்கு வருகிறது!உங்கள் வீரத்திற்கு சவாலாக இந்த எனது வேண்டுகோளை ஏற்கவும்!

  உண்மையிலேயே ரொம்ப அழகாக சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "உங்கள் வீரத்திற்கு சவாலாக இந்த எனது வேண்டுகோளை ஏற்கவும்!"_____உங்க வேண்டுகோள் எனக்குமே பிடிக்குது,பார்க்கலாம்.எனக்கு வீரமா?ஒரு தடவ ஏறப்போய் காமெடியா போச்சு.இருந்தாலும் திரும்பவும் போகனும்னு ஆசை.

   உங்க பழமொழியை முடிக்கத் தெரியலயே.நேரமிருந்தா வந்து முடிச்சு வையுங்க.

   நீக்கு
 4. 'ஒரு தடவ ஏறப்போய் காமெடியா போச்சு' - அப்படியும் இந்தப் பழமொழியை கேட்கணுமா?
  கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போறேன்னானாம்!'

  முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதியிருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி!ஹி!ரொம்பா நாள் ஆச்சா பழமொழியெல்லாம் கேட்டு அதான் மறந்துட்டேன்.இனிமே குறைந்தது இரண்டு வார்த்தைகளாவது எழுதுங்க. அப்புறம் கண்டுபிடிக்கலன்னா பாருங்க.

   நீக்கு
 5. வாவ்...சூப்பர் சித்ரா. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கலர். அழகோ அழகு சூரியஅஸ்தமனம்..!!! எங்க வீட்டிலிருந்து தள்ளிப்போனால் நானும் எடுக்கலாம்.பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ப்ரியா, சூரியன் மறையும் நேரம் சில நாட்களில் மட்டும் கலர்கலரா இருக்கும். ஆனால் மறைவதைப் பார்க்க முடியாது, வீடுகள் மறைத்துவிடும்.

   ஒரு நாளைக்கு மெனக்கெட்டு போய் எடுத்து வந்து போடுங்கோ !

   நீக்கு