Wednesday, January 30, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜின் தொடர்ச்சி_1

                                               ப்ரிட்ஜ் உள்ளே நடந்து செல்வோம்.


                                              இப்போ முதல் டவரைத் தாண்டியாச்சு.
                    .


                    ப்ரிட்ஜிலிருந்து பார்க்கும்போது கீழே தெரியும் ஹைவே.


                         ப்ரிட்ஜைவிட்டு வெளியே வரும்போது தெரியும் ரோடு.


இவ்வளவு நேரம்தான் கஷ்டப்பட்டு வந்தோம்.இனி கடகடவென இறங்கிவிட வேண்டியதுதான்.


இந்தப் பாதை முடியும் இடம்வரை போய் திரும்புவோம்.அங்கே நமக்கு ஏற்கனவே அறிமுகமாகி,பழக்கமான ஒரு குடும்பம் நமக்காக‌ வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.வாங்க போய் அவங்களை மீட் பண்ணுவோம்.


ஹலோ!கொஞ்சம் திரும்புங்க.உங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்,.


 இவை  quail  பறவைகளின் சிலைகள்.கலிஃபோர்னியா மாநிலத்தின் பறவை. முதலில் பார்த்தபோது குண்டுகாகம் என நினைத்தேன்.அருகில் போய்ப் பார்த்து கோழியோ என ஒரு முடிவுக்கு வருவதற்குள்,தலையில் சிறு தோகையுடன் மயில் மாதிரியும் தெரிந்த‌து.காடை மாதிரி இருப்பதாக 'மகி' சொன்னாங்க. கலிஃபோர்னியா காடை.இந்தப் பெயரும் நல்லாருக்கு.குடும்பமாக இருக்கும் இவர்களை மேலிருந்து பார்த்து ரசித்துக்(!!!) கொண்டிருக்கும் கழுகு.


                                                                    Profile please.


                          நேரமாச்சு,வாங்க,வந்த வழியேத் திரும்பிப்போகலாம்.


              டவரின்மேல் சூரிய ஒளிபட்டு,பார்க்கவே அழகா இருக்கு இல்ல!

               அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய்ப் பார்ப்போம்.  
        


Monday, January 28, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜ்

எந்நேரமும் லேப்டாப்பையே பிடித்துக்கொண்டிருந்தால் எப்படி?வாங்க,எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு overbridge / மேம்பாலத்துக்குப் பொடிநடையாகப் போய்வரலாம்.எனக்கு முதன்முதலில் இந்தப் ப்ரிட்ஜைப் பார்த்ததும் பிரம்மாண்டமாகத் தெரிந்தது.இன்றும் அப்படியேதான்.

ஒரு Hiway/ஹைவே_யின் மேல் தெற்குவடக்காகக் கட்டப்பட்டுள்ளது.இதை சைக்கிளில் செல்வோரும்,நடந்து செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.450 அடி நீளமுடையது."This beautiful bridge is the longest cable-stayed bridge in California"னு ஒரு article_ல் படித்தேன்.இரண்டு டவர்கள்/Towers இரும்புக் கம்பிகளால் ப்ரிட்ஜுடன் இணைத்துக் கட்ட‌ப்பட்டுள்ளன.டவர்களின் உயரம் 90 அடி.சில்வர் நிறத்தில் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். 9 வருட திட்டமிடலில்  15 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது.


போகும்வழி கொஞ்சம் மேடாக இருக்கும்.உடல் இளைக்க விரும்புபவர்கள் தினமும் இங்கே வந்து நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.


                                                          வாங்க,போகலாம்...
                                         


                                             இன்னும் கொஞ்சம் தூரம்தான்....
                                   

                                                          
                                       இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தூரம்தான்....
                   


                     ப்ரிட்ஜுக்குப் போக வழியிலேயே இரண்டு பாதைகளாகப் பிரியும்.
                      

இடது பக்க பாதை கொஞ்சம் நேரானது.
வலது பக்கத்தில் உள்ளது வளைந்து, நெளிந்து செல்லும்.நடந்து செல்வோர் இந்த பாதையில் செல்லலாம். இல்லையென்றால் பின்னால் சைக்ளிஸ்ட்/cyclist வர்ராங்களா, இல்லையா என அடிக்கடித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நட‌க்க வேண்டும். நம்ம‌ ஊர் மாதிரி 'க்ளிங்' சத்தமெல்லாம் கொடுக்கமாட்டாங்க. இது வளைந்துவளைந்து செல்லும் வலதுபக்க பாதை.உட்கார வழியில் ஒரு மரபென்ச்/wooden bench உண்டு. 


 இது கொஞ்சம் நேராக செல்லும் பாதை.அதோ தூரத்தில் தெரிகிறதே ஒரு டவர்/tower அங்குதான் போகவேண்டும்.


 ஒருவழியாக ப்ரிட்ஜுக்கு வந்தாச்சு.அடுத்தப் பதிவில் ப்ரிட்ஜின் அந்தப் பக்கம் போவோம்.

சூரியஒளி எதிர்திசையில் இருந்து வருவ‌தால் வெளிச்சம் குறைவாக இருக்கிறது.அந்தப் பக்கம் போனபிறகு 'பளிச்' tower / டவரைப் பார்க்கலாம்.

Saturday, January 26, 2013

வாங்க!வாங்க!!!இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களுடன் வணக்கம்!

இவ்வளவு தூரம் தேடிவந்து விழாவில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி!விழா முடியும்வரையிருந்து,விருந்துண்டு மகிழ்ந்து,அப்படியே மொய்யையும் எழுதிவிட்டு (இது கட்டாயம்) ,சிலபல‌ நாட்கள் இங்கேயேத் தங்கியிருந்து, மனமகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 நிறைகள்,முக்கியமாகக் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டத் தவற வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 சமையலை http://chitrasundar5.wordpress.com/ லும்,சில‌அனுபவங்களை  இங்கேயும் பகிர்ந்துகொள்ள விருப்பமாக உள்ளேன்.அங்கு அளித்த ஆதரவை இங்கேயும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.நன்றி!