Saturday, February 18, 2017

தப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் !போனதடவ போட்ட இரண்டுமூன்று பாவக்கா விதைகளில் ஒரு விதை அப்படியே மண்ணில் இருந்து தப்பிப் பிழைத்து சென்ற கோடையில் முளைத்து வரவும் ஆச்சரியமாகிப் போனேன்.


இவ்வளவு நாளும்  இந்த விதை தொட்டியிலேயே  இருந்திருக்கிறதே, நேரம் வந்ததும் முளைத்துவிட்டதே என சந்தோஷம்.


இந்த வீட்டு பேட்டியோவில் வெயில் வரப்போவதில்லை. இருந்தாலும்  தொட்டியை நகர்த்திநகர்த்தி வைத்து பத்திரமா பார்த்துக்கொண்டேன்.


தப்புச்செடி என்றாலே நிறைய காய்க்குமாமே :) 


ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. பூக்கள்கூட பூத்தன. ஆனால் வருடக் கடைசியில எங்க ஊர்ல அடிச்ச மழை & குளிர்ல அப்படியே வாடிவதங்கிக் காணாமல் போய்விட்டது !

காய்க்காட்டியும் பரவால்ல, முளைத்ததே என ஒரு சந்தோஷம் !

                        &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பதிவு சோகமாக வேண்டாமே என ஒரு சிறு சேர்ப்பு !

ஒருதடவ சின்ன வெங்காயம் நட்டு வச்சு, அதன் தாள்களைப் பயன்படுத்திக்கொண்டே வரும்போதே, தானாக செடி காய்வதுபோல் இருக்கவும், பிடுங்கிப் பார்த்தேன். வாவ் , குட்டிக்குட்டி வெங்காயங்கள் !


சாம்பார் வைத்தேன், நெஜமாவே சூப்பர் வாசனையில் சாம்பார் கமகமத்தது :)

14 comments:

 1. வீட்டில் வளரும் எல்லாமே சுவைதான்ப்பா ..வெங்காயத்தை நட்டு விதை எடுத்து வச்சி மீண்டும் விதைகளை நட்டு பெரிய வெங்காயங்களை அறுவடை செய்தென் .எங்களுக்கு பிரச்சினையே குறைந்த நாட்கள் மட்டுமே சூர்யா சிங்கமா எட்டிப்பார்ப்பார் :) எனக்கும் இந்த பாகல் செடி வளர்ந்து மலரும் நேரம் குளிரில் போயிடிச்சு ..
  மணத்தக்காளி மட்டும் தாராளமா வளர்ந்து செழிக்குது ..அப்புறம் உருளை காரட் ,,
  நேத்துதான் பாகல் பழுத்த விதைகளை காயவெச்சி எடுத்தேன் விண்டோ சிலில் நட நினைச்சா ஜெசி பயமுறுத்துது :)
  பாப்போம் அது என்ன உரு எடுக்குதுன்னு

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு,

   வெங்காயம் வெத எடுத்து வச்சேன், ஆனா வீடு மாறினதுல எங்க போச்சுன்னு தெரியல . எங்க ஊர்ல வருஷத்தின் எல்லா நாளிலும் நீங்க சொன்ன சிங்கம் வந்துட்டுதான் இருக்கார். ஆனா எங்க வீட்டு பேடியோவை சுத்தி இருக்குற உயரமான பெரியபெரிய மரங்களைத் தாண்டி உள்ள வர பயப்படுறார் :)

   பரவால்ல, கொஞ்சமே இருக்கும் கோடையிலும் செடி வளர்க்குறீங்களே ! வீட்டிலேயே வெங்காயம் என்றால் சூப்பர்தான்! மணத்தக்காளி செடி முளைக்குதோ இல்லையோ, அது கூடவே பூச்சியும் வந்திடுது, அதனால நானே பிடுங்கிப்போட்டுட்டேன்.

   ஜெசிக்கு விளையாட குட்டி ஜெசிய கூட்டிட்டு வாங்க, அப்புறம் செடிய கண்டுக்காது.

   Delete
 2. ஆகா...! இதுவல்லவோ இன்பம்...!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ! வீட்டில் வளர்த்து பார்க்கும்போது இன்பம்தான் !

   Delete
 3. பாகற்காய் கொடுத்த வருத்தத்தை வெங்காய மகசூல் களைத்து விட்டது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் சித்ரா.

  ReplyDelete
 4. வாவ். சித்ரா கலக்கல்....நாநும் போட்டுருக்கேன் பால்கனி தோட்டம்....வரட்டும்...போட்டொ போடறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பால்கனி தோட்டமாஆஆஆ !! கலக்குங்க ! மூன்றாவது கண்ணுடன் உஷாரா இருங்க. விதை முளைப்பது, துளிர் விடுவது என எடுத்து போடுங்க !

   Delete
 5. ஜெஸிக்கு துணை வந்தாச்சு சித்ரா
  இங்கே வாசிங்க http://engalblog.blogspot.com/2016/12/blog-post_20.html

  அது என்னதான் ஆள் கிடைச்சாலும் என்னை மட்டுமே சுற்றி சீண்டும் :)

  ReplyDelete
 6. வெங்காய அறுவடை...ம்ம் ..சூப்பர்

  ReplyDelete
 7. ம்ம்... உங்க பதிவுகளைப் பார்க்கும்போது தோட்ட ஆசை அளவுமீறிக்கொண்டே போகுது.. இங்கு இன்னும் மண்ணைப் பக்குவம் பண்ணவில்லை... ஃபென்சிங் போடவில்லை.. காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீதா,

   தோட்டம் பக்குவமானதும் உங்கள் வீட்டு விளைச்சலையும் புகைப்படம் மூலம் எங்களுக்குக் கொண்டுவந்து குடுங்க :)

   Delete
 8. பாவல் கொடி காய்க்காவிட்டாலும் தோட்டத்திற்கு அழகு இல்லையா!

  சின்ன வெங்காயம் - இங்கு அடியோடு கிடைப்பதே இல்லை.

  ReplyDelete