Monday, November 25, 2013

நாமக் கோழி / Coots


எனக்கு உண்மையிலேயே coots னு ஒரு பறவை இருப்பதே இதுநாள்வரை தெரியாது. இமா அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.  அவருக்காகத்தான் இந்த பதிவு.

"அவ்வ்!! மேல அத்தனை coot ஒரே இடத்துல!! ஆசையா இருக்கு பார்க்க"_________ இப்படியெல்லாம் சொன்ன பிறகு நான் எடுத்து வைத்துள்ள coots ன் படங்களைப் போடாமல் இருந்தால் என் கௌரவம் என்னாவது !! இல்லாத அந்த கௌரவத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இந்தப் பதிவு.

Coot ஐத் தமிழ்ப்படுத்தி பார்த்தபோது 'நாமக் கோழி' என்ற அழகான தமிழ் பெயர் கிடைத்தது. முகத்தில் வெள்ளை நிறத்தில் 'நாமம்' மாதிரி இருப்பதால் இந்தப் பெயராக இருக்கலாம்போல் தெரிகிறது.


எங்கள் ஊர் பூங்காவில் உள்ள குளத்தில்  coots ஐப் பார்த்தபோது குட்டிவாத்துகள் என்றே நினைத்தேன். ஆனால் அங்கே உள்ள ducklings களுக்கும் இவைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இவை கோழி & வாத்து மாதிரியும் தெரிந்தது.சரி, இது ஒரு வித்தியாசமான வாத்தாக்கும் என 'க்ளிக்'கிக்கொண்டு வந்துவிட்டேன்.


தண்ணீரில் இருக்கும்போது, சாம்பல் நிறம், வில்லன் கணக்கில் சிவந்த கண்கள் & வெண்ணிற அலகு என பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் கருமையாக, நம்ம ஊர் அப்பாவி கோழி மாதிரியே இருக்கிறது.


நீந்துவதற்கு தெம்பு வேண்டுமே, தண்ணீரில் உள்ள புழுபூச்சிகள் போதாமல், மேலே ஏறிவந்து எதையோ தேடித்தேடி கொத்திக்கிளறி சாப்பிட்டுவிட்டு, கூடவே சூரிய ஒளியில் கொஞ்சம் குளிரையும் காய்ந்துவிட்டு, மீண்டும் தண்ணீருக்குள் செல்வதைப் பார்க்கப் பார்க்க.....அது ஒரு அழகு.(அவருக்கு) வளர்ப்புப் பிராணிகள் மேலுள்ள பாசத்தால் இந்தப் படத்தையும் இணைக்காமல் இருக்க முடியவில்லை.

படத்தில் ஆமையின் ஓடு பெயர்ந்துள்ளது. அது அடிபட்டதாலா அல்லது தோல் உரிந்திருக்கிறதா தெரியவில்லை !!

Saturday, November 23, 2013

Duckகுனு நீச்சல கத்துக்கிட்டோமில்ல !!


இங்கு வாத்து எப்படி பDuckகுனு நீச்சல் கத்துக்கிச்சி பாருங்க !!!.இப்படி, அப்படி திரும்பிப் பார்க்காம நேரா போகணும் !


முக்கியமா பக்கத்துல பாத்து காப்பி குடிக்கவே ஸாரி அடிக்கவே கூடாது.


அப்படியே ஒரு U turn போட்டு வலைப்பதிவின் பெயரை பாத்துட்டே திரும்பி வாங்க பாக்கலாம் !


வாவ், அப்படியேதான் !!


பலத்த கைத் தட்டல்களுக்கிடையே.......


வெற்றிகரமா நீச்சல் பயிற்சியை முடிச்சாச்சு !!!!!


பயிற்சியை முடித்த களிப்பில்  நம்ம 'Duck'கு !


Wednesday, November 20, 2013

காலையில் உலா வந்த‌ நிலா !!!ஏறக்குறைய ஒரு வருடமாகிறது மழையைப் பார்த்து. செப்டம்பரில் ஒரு நாள் மழை வந்தது. ஆனால் அன்று பார்த்து வெளியூர் போயாச்சு. அவ்வ்வ்வ்வ்.....

இங்கு நவம்பர் ஆரம்பித்ததுமே குளிரும் ஆரம்பித்துவிட்டது. ஒன்றிரண்டு வாரமாகவே மழை இதோவருது, அதோவருது என கண்ணாமூச்சு காட்டியது.

நேற்று காலையில் இருந்தே எதிர்பார்த்து, எதிர்பார்த்து ..... அது north bay, east bay  என சுற்றிக்கொண்டு கடைசியாக எங்க bay க்கு (ஹி  ஹி south bay) வருவதற்குள் இரவு மணி 7:00 ஆகிவிட்டது.

இரவு நேரமானதால் மழையைப் பார்த்து ரசிக்க முடியவில்லை. இருக்கும் ஒன்றிரண்டு தொட்டிச் செடிகளை மழையில் நனைய வைத்து 9:00 மணிக்கெல்லாம் வீட்டுக் கூரையின் கீழ் எடுத்து வைத்துவிட்டு வந்து படுத்தாச்சு.

காலை 7:30 மணிக்கு வந்து பார்த்தால் மழையைக் காணவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான். நேற்றிரவு பெய்த மழையில் குளிரும் சேர்ந்து காணாமல் போய்விட்டது.

ஆனால் வானம் அழகான நிறத்தில் காட்சியளித்தது. கூட்டம்கூட்டமாக பறவைகள் மேலே பறந்துகொண்டிருந்தன. அவற்றை (காமிராவில்) பிடிக்கத்தான் முடியவில்லை.

தேய்பிறையாக இருந்தாலும் மேகத் தோழிகளின் உதவியுடன் நிலா ஒளிந்துஒளிந்து, எட்டிஎட்டிப் பார்த்து விளையாடியது கொள்ளை அழகாக இருந்தது.

அதன் பிறகு லேசான அழகான வெளிச்சம் வரத்தொடங்கியது. இதெல்லாம் ஒரு அரை மணி நேரத்திற்குள்தான். அதற்குமேல் வானம் மேகம் சூழ்ந்து மதியம் 1:30 மணி மழைக்குத் தயாராகிக்கொண்டிருந்தது.

நானும் என் வேலையைப் பார்க்கத் தயாரானேன்.

Tuesday, November 19, 2013

நிழலும், நிஜமும் !!


அட‌, இத்தனை சூரியன்களா !!
அதுவும் செவ்வக வடிவில் ?.....!!!!!!


புகைப்படம் எடுத்ததும், (வானத்தில்) டியூப்லைட் செட் பண்ணி வெளிச்சத்தை உண்டாக்கியதும் சுந்தர் !!....ஹி...ஹி...!!

சமயங்களில் காமிராவில் நாம் ஒன்றை நினைத்து புகைப்படம் எடுக்க, விளைவு வேரொன்றாய் வந்து சேரும். அப்படி வந்ததுதான் மேலேயுள்ள புகைப்படங்கள் இரண்டும்.

"கண்ணாடி வழியாக‌ எடுத்தால் இப்படித்தான் வரும், வேறெப்படி வரும்?" என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

Saturday, November 16, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........உளுந்து செடி


இட்லிக்கு ஊறவைத்த உளுந்தைக் கழுவிய தண்ணீர் & உளுந்து தோல் இவற்றை செடிகளுக்குப் போடுவேன். ஒருசமயம் அதில் ஊறாத முழு உளுந்து ஒன்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். மண் + தண்ணீருடன் சூரிய ஒளியும் சேர்ந்துகொண்டதால் முளைத்து வந்த தப்புச்செடிதான் இந்த உளுந்து செடி.
                                                         

ஊரில் எங்கள் வீட்டில் உளுந்து பயிர் செய்வார்கள் என்பதால் இது உளுந்து செடிதான் என அது முளைத்து வரும்போதே கண்டுபிடிச்சாச்சு..


பிடுங்காமல்..... வளருகிறதா எனப் பார்த்துக்கொண்டே வந்தேன். அழகாக துளிர்விட்டு வளர்ந்தது.


இதேபோல்தான் தப்பி முளைத்த தக்காளி செடிகள், மணத்தக்காளி செடிகள் எல்லாம் இடப் பற்றாக்குறையால் இதைப் போட்டு நெருக்கியதில் கொஞ்சம் பாவமாகத்தான் வளர்ந்தது.


மற்ற செடிகள் எல்லாம் வேறிடங்களுக்கு இடம் மாறியதால் உளுந்து செடிக்கு ஓரளவு நிம்மதி.


பிறகு பூக்கள் பூத்து.........


காய்களும் வந்தன.


நல்ல விதையாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வளர்ந்து, நிறைய காய்த்திருக்கும்.


காய்கள் முற்றி ஒன்றிரண்டு காய்கள் கருப்பானதும்..........செடியைப் பிடுங்கிவிட்டேன்.

பிறகு காய்களைப் பறித்து ஒரு மண்கிண்ணத்தில் போட்டு காயவைத்தேன்.


முற்றியவை வெடித்துவிட்டன. பச்சையாக இருந்ததை..........ஹி   ஹி   நானே வெடிக்க (உரித்து) வைத்து  சாப்பிட்டுவிட்டேன். கொஞ்சம் கொழகொழப்பு இருக்கும். இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். எல்லாம் சிறு வயதில் சாப்பிட்ட பழக்கம்தான்.


கருப்பா இருக்கற உளுந்தை என்ன செய்தேன்னு பாக்குறீங்களா !! பத்திரமா எடுத்து வச்சிருக்கேன். நீங்க யாராவது நல்ல விலைக்குக் கேட்டால், பெரிய மனசு பண்ணி, எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு அனுப்பி வைக்கிறேன் !!!

Wednesday, November 13, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........வெந்தயக் கீரை


ஒரு ம‌ண்தொட்டியில் பாதியளவிற்கு மண் நிரப்பி இட்லிக்கு ஊறவைத்த வெந்தயம் (ஊறி இருப்பதால் சீக்கிரமே முளைத்துவிடும்) அல்லது அஞ்சறைப் பெட்டியில் உள்ள வெந்தயத்தில் சிறிது எடுத்து மண்ணின் மேல் தூவிவிட்டு, விதை மண்ணால் மூடும் அளவிற்கு லேசாக மண்ணைக் கிளறிவிட்டு சிறிது தண்ணீர் தெளித்துவிடவும்.

       """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


சில‌ நட்களிலேயே முளைத்து வெளியே வர ஆரம்பிக்கும்.

   '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

படிப்படியாக வளர்ந்து......


அறுவடைக்குத் தயார் நிலையில் !

 '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அறுவடைக்கு ஆள் தேடித் தேடிப் பார்த்துவிட்டு 1_800_Harvest Machine க்கு ஃபோன் செய்து.......... அறுவடை நல்லவிதமாக முடிந்தது. ஹி    ஹி !!

 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வெந்தயக்கீரை புலாவும் கிண்டியாயிற்று.


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அறுவடைக்குப் பின் மீண்டும் துளிர்த்து வருமா என விட்டுப் பிடித்தால்....


வாவ்.......மீண்டும் அழகாகத் துளிர்த்து வந்தது !


மண்தொட்டி தேவைப்பட்டதால் அதற்குமேல் விட முடியவில்லை.