Saturday, February 11, 2017

இன்ப நினைவு !

                          Image result for siblings fighting clip art

சும்மா சொல்லக்கூடாது, சின்ன வயசுல, வீட்டில், ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் வைத்து விளையாடுவதில்தான்(உண்மையில் வெறுப்பேற்றுவதில்) என்ன ஒரு ஆனந்தம் !

அதை வைத்துக் கூப்பிடும்போது எதிராளிக்கு (வேறு யார் ? உடன்பிறப்புகள்தான்) கோபம் தலைக்கேற வேண்டும், முக்கியமா நம்மை அடிக்க ஓடி வரவேண்டும் :))))  அதுல இருக்குற சந்தோஷம் இருக்கேஏஏ :)))))

இதுக்காகவே பெயர்களைத் தேடித்தேடிக் கண்டுபிடிப்பேன் ! அவங்களும் அப்பாவி எல்லாம் கிடையாது. ஒல்லியா இருக்குறவங்களுக்கு என்னென்ன பட்டப் பெயர்கள் உண்டோ அவை அத்தனையையும் எனக்கு வைப்பாங்க.  என்ன நம்பலையா ? சரி, நம்பாட்டி போங்க !

புதுசா ஒரு பேரு வைக்கும்போது ஆரம்பத்துல கொஞ்ச நாட்கள் கடுப்பா இருக்கும். ரெண்டுமூனு நாள் ஆச்சுன்னா பழகிடும். அடுத்து வேற ஒரு 'பேர' தேடணும்.

ஒருமுறை என் தம்பி திடீரென என்னை ovs என கூப்பிட்டுவிட்டு அங்கே நிற்கவில்லை, ஓடியே போய்விட்டான்.

எனக்கோ அர்த்தம் புரியவில்லை. 'வரட்டும்' எனக் காத்திருந்தேன்.

வீட்டுக்கு வந்தபோது "என்ன ?" எனக் கேட்டு அவனிடமிருந்து பதில் வராததால் செம அடி வாங்கினான்.

எனக்குக் கோபம் வருவதைப் பார்த்து மீண்டும்மீண்டும் கூப்பிட ஆரம்பித்தான்.

ஒருநாள் வாங்கிய அடியில் o ம் v ம் ஒல்லி & வென என்பனவற்றிற்கான முதல் எழுத்துக்கள் என்று சொன்னான்.

இவை பழகிய வார்த்தைகள்தான். ஆனால் எவ்வளவு கேட்டும் கடைசி எழுத்துக்கான வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை.

கொஞ்ச நாட்கள் ஆனதும் வழக்கம்போல் எனக்கும் இந்த வார்த்தை பழகிப்போய்விட்டது.

ஒருநாள் என்மேல் உள்ள கோபத்தில் அந்த எழுத்துக்கான வார்த்தையை உளறிக்கொட்டிவிட்டான்.

அவ்வளவுதான், அன்று முழுவதும் அவன் என் பக்கமே வரவில்லை.

இந்தப் பிரச்சினையைப்  பெரியவர்களிடமும் கொண்டுபோக முடியாது. அப்புறம் நம்ம வண்டவாளம் தெரிய வரும். நான் வைத்த பெயர்கள் எல்லாம் வரிசைகட்டி வரும்.  அதனால் இந்த அட்டகாசங்கள் எல்லாம் எங்களுடனேயே முடிந்துவிடும்.

"இனிமே நானும் சொல்லமாட்டேன், நீயும் சொல்லக் கூடாது" என  சமாதான உடன்படிக்கை எல்லாம் நடத்திப் பார்த்தேன் .....  ம்ஹூம்.

இதனால் இருவருக்கும் எவ்வ்வ்வளவு சண்டை, அடி, உதை, கோபம், வெறுப்பு !

இதெல்லாம் 93 ஆம் வருடம் டிசம்பரோடு ஒரு முடிவுக்கு வந்தது.

தெரிந்தோ, தெரியாமலோ, அவன் வாய் முகூர்த்தம் பலித்து,  பிந்நாளில் அந்த எழுத்தே என் பெயருடன் வந்து சேர்ந்துகொண்டது 'சித்ராசுந்தரமூர்த்தி'யென :)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி & தை மாதம் வந்தாலே இந்த இன்பமான நினைவு வந்து போகும் ! இப்போதும் அப்படித்தான் :)

9 comments:

 1. அது ஒரு அழகிய கனாக்காலம்...?!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தனபாலன், நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய அழகிய கனாக்காலம்தான் !

   Delete
 2. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :)

   உங்களிடம்லாம் பேசி ரொம்ப நாள் ஆச்சுனு நெனச்சுப்பேன், இப்போ சந்தோஷமாயாச்சு !

   Delete
 3. ஹஹஹஹஹ...எங்களுக்கும் எங்கள் சிறு வயது நினைவுகள் தொற்றிக் கொண்டன...

  துளசி: என் நண்பர்கள் மத்தியில் வைத்து விளையாடி வெறுப்பேத்தியதுண்டு. கடுப்பானதும் உண்டு...

  கீதா: ஐயோ நாங்கள் எங்கள் வீட்டில் கூட்டுக குடும்பம் என்பதால் அடித்த லூட்டி நிறைய. கிள்ளினால் நழுவும் கசினின் பெயர் சக்கைக கொட்டை, தைரியமா நடந்தா ஜவான், சிலது இப்போ பொது வெளியில் சொல்ல முடியாது..ஹிஹிஹி...ரொம்ப ரசித்தோம்...சித்ரா...அருமை

  ReplyDelete
  Replies
  1. சகோ துளசி,

   நாம் அவர்களை வெறுப்பேற்றியதும், பதிலுக்கு அவர்கள் நம்மை ஓடஓட விரட்டியதும் சுகமான நினைவுகளாச்சே ! உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி !

   கீதா,

   சக்கைக்கொட்டை __ வித்தியாசமான பேரா இருக்கே ! கூட்டாக இருக்கும்போது இன்னும் களைகட்டி இருக்கும். உங்க வீட்டு லூட்டியைத்தான் உங்களின் ஒரு பதிவில் பார்த்தேனே :))) நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம் கீதா !

   Delete
 4. Haiyo I wrote a very long comment! ..kaanom inge ..,!! I read this post soon after seeing in my dashboard. ..irunga drafts la thedi kondaren. .

  ReplyDelete
 5. அன்னிக்கே படிச்சேன்ப்பா பெரிய கமெண்ட் எழுதி போஸ்ட் பண்ணேன் அது வரலை போலிருக்கு ..டேப்லட்டில் அடிக்கடி நடக்குது இப்படி ..

  ..ஹா ஆஹா :) இந்த நிக் நேம் அடைமொழி எல்லாம் நாங்க கசின்ஸ் எல்லாரும் எங்களுக்குள்ள வைக்காத ஆளுங்களேயில்லை ..
  HMT ,நெத்திலி ,கஞ்சா கருப்பு ,பந்தா முருகன் ,புல்தடுக்கி நாணா ..பல்லி ஓணான் குதிரை ராமராஜன் இப்பிடி நிறைய :)
  அதெல்லாம் சின்ன வயசு மறக்க முடியா நினைவுகள் ..எனக்கு ஒரு பெயர் இருக்கு ..சொல்ல மாட்டேனே ..
  ஹாஹா சமாதான உடன்படிக்கைலாம் நடந்ததா :)
  எங்க வீட்ல நான்தான் எல்லாத்தையும் சொல்லி மாட்டிப்பேன் என் தங்கை என்னை மிரட்டியே காரியம் சாதிப்பா :)

  இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சித்ரா :) ..  ReplyDelete
  Replies
  1. "டேப்லட்டில் அடிக்கடி நடக்குது இப்படி" ____ புதுசா ஒண்ணு வாங்கிடுங்க :) இதுவாவது பரவால்ல அஞ்சு, எதையோ க்ளிக் பண்ணப் போயி என்னோட டேஷ்போர்டே மாறிப்போச்சு :(( ப்ளாக் பக்கம் வரவே பிடிக்கல !

   உங்க வீட்டு பட்டப் பெயர்களும் தெரிஞ்சு போச்சு ! அந்த வயசுல இப்படிலாம் வச்சு விளையாடாட்டி நல்லாவே இருந்திருக்காது, இல்ல !

   வாழ்த்துக்களுக்கு நன்றி ஏஞ்சல் !

   Delete