Monday, July 15, 2013

அரளிப் பூ / பட்டிப் பூ


வெள்ளை அரளி...


பிங்க் அரளி...


லைட் பிங்க் அரளி...


செவ்வரளி (அ) சிவப்பரளி


கோடையைக் குளிர்விக்கும் விதமாக கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில், இந்த அரளிப் பூக்கள் இப்போது எங்கும் பூத்துக் குலுங்குகின்றன.

சுவாமிக்கான மாலையில் இந்தப் பூவையும் சேர்த்துவைத்துக் கட்டுவார்கள்.

எங்கள் ஊர் பக்கம் இதை அரளிப் பூ என்றும் பட்டிப் பூ என்றும் சொல்லுவோம். வாசனை இருக்காது. தனி பூவாக‌ தலையில் வைத்துக் கொள்ளமாட்டோம். ஆனால் கதம்பத்தில் வைத்துக்கட்டி விற்கப்படும்போது வாங்கி வைத்துக் கொள்வோம். (இதென்ன லாஜிக்?)

                                   <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்றைக்கு ( 11/16/2013) ......

பூக்களின் எண்ணிக்கை குறைந்து காய்கள் அதிகமாகிவிட்டது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்று (01/31/2014) பார்த்தால்....... செடியில் உள்ள காய்கள் எல்லாம் முற்றிக் காய்ந்து, வெடித்து, உள்ளேயுள்ள விதைகள் எல்லாம் பாராசூட் மாதிரி எங்கும் பறந்துகொண்டிருக்கிறது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

04 / 20 / 14

கடந்த ஒரு வாரமாகவே இங்கே அரளிச் செடியில் மொட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

இன்று இதேபோல் செடி முழுவதும் கொத்துகொத்தாக, கொள்ளை அழகாக‌ பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன.

26 comments:

  1. Replies
    1. இந்தப் பூவுக்கு இப்போதுதான் சீஸன்போல, எங்கும் இந்தப் பூவின் ஆதிக்கம்தான்.

      Delete
  2. அம்மனுக்கு உகந்த அரளிபுஷ்பம். அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக போட்டோ எடுத்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. எல்லா இடங்களிலும் இப்போது இந்தப் பூதான் தெரிகிறது.நீங்க இருக்கும் ஊரிலும் நிறைய பூக்கள் பூத்திருக்கும்.சும்மா எடுத்து ப்ளாக்ல போடுங்களேன்.

      Delete
  3. கலிஃபோர்னியா வந்த உடனே நான் கவனித்தது இந்த அரளிப் பூக்களைத்தான்! :) ஹைவேயின் நடுவில் முதற்கொண்டு சாலையோரங்களில் எல்லாம் செவ்வரளி, வெள்ளை அரளி, அடுக்கு அரளி என பலவகை அரளிகளைக் காணமுடிகிறது. நல்ல படங்கள் சித்ராக்கா!

    ReplyDelete
    Replies

    1. ஆமாம் மகி, எல்லா இடங்களிலும் இருக்கிறது. சிலர் வேலி மாதிரியே வச்சிருக்காங்க. எங்க‌ லாண்டரிக்கு பக்கத்திலுள்ள செடிகளில் பூத்தவைதான் இந்தப் பூக்கள். செவ்வரளிகூட சில வீட்ல வச்சிருக்காங்க.வருகைக்கு நன்றி மகி.

      Delete
  4. ஹை! அழகு அழகு அழகு. சூப்பர் படங்கள்.
    நானும் இரண்டு நிறங்கள் வளர்க்கிறேன். வெள்ளை வரவில்லை. ;(
    இரண்டு இலைகளைச் சேர்த்துப் பிடித்து அடிக்க டிக்டிக் கேட்குமே, அது பிடிக்கும். ;)

    நாங்க பட்டிப்பூ என்று வின்கா ரோசியாவைத்தான் சொல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. 'ஹை! அழகு அழகு அழகு'___உங்க உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது."இரண்டு இலைகளைச் சேர்த்துப் பிடித்து அடிக்க டிக்டிக் கேட்குமே"______இது எங்க ஊர் விளையாட்டுனுல்ல நெனச்சிட்டேன்! நாங்க தென்னை ஓலையை இரண்டாகக் கிழித்து அதிலும் இந்த விளையாட்டு விளையாடுவோமே.

      வின்கா ரோசியா___எங்க அப்பார்ட்மெண்ட்ல இதுகூட கலர்கலரா நிறைய இருக்குங்க. முன்னமே தெரிஞ்சிருந்தா அதையும் சேர்த்திருக்கலாம்.

      Delete
  5. மொட்டாக இருந்து மலராகும் போது நம் மனசும் மலர்வதைபோல ஒரு உணர்வு, இல்லை?
    'பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும்' என்பது போல இந்த வாசனை இல்லாத பூ மற்ற பூக்களோடு சேர்ந்து வாசம் பெறும்போது நாம் தலையில் வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. விளக்கம் சரியா என்று தெரியவில்லை. சும்மா மனசுக்குத் தோன்றியதை எழுதினேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, மொட்டு உருண்டு,திரண்டு வரும்போது அடுத்த நாள் எப்போ வரும் என்றுதான் நினைக்கத்தோன்றும்.

      மனசுக்கு தோன்றியது என்றாலும் உங்க விளக்கம் சூப்பரா இருக்கு. ஒருவேளை நான்தான் வேறொரு பூவை அரளிப்பூன்னு சொல்றேனா, தெரியவில்லை.

      Delete
  6. //தனி பூவாக‌ தலையில் வைத்துக் கொள்ளமாட்டோம். ஆனால் கதம்பத்தில் வைத்துக்கட்டி விற்கப்படும்போது வாங்கி வைத்துக் கொள்வோம். (இதென்ன லாஜிக்?)// எங்க ஊர் கதம்பத்தில் அரளி இருக்காது! :) சாமி பூ-என சொல்லப்படும் சரத்தில் [துளசி அல்லது மருகு + அரளி + செவ்வந்தி இப்படியான பூக்கள் சேர்த்து கட்டப்பட்டிருக்கும், ஸ்பெஷலாக கோயில் விக்ரஹங்கள் மற்றும் வீட்டிலுள்ள சாமி படங்களுக்கு மட்டுமே இந்தப் பூச்சரம் விற்கப்படும்.] மட்டும் அரளி இடம் பெற்றிருக்கும். கோயிலில் தரிசனத்துக்குப் போகையில் பிரசாதமாக சாமி பூ கிடைத்தால் அதை தலையில் சூடுவோம், மற்றபடி வைக்கும் வழக்கம் இல்லை சித்ராக்கா! :)

    அரளி பொதுவாக விஷச் செடி என்று சொல்லுவாங்க, அதனால்தான் தலையில் வைக்கக் கூடாது என தடா போட்டிருப்பாங்களோ!! நோ ஐடியா!!! ;) :)

    ReplyDelete
    Replies
    1. விஷச் செடியாகத்தான் இருக்க வேண்டும் மகி, இப்போதான் நினைவுக்கு வருது.சிலர் கோபத்தில் அரளி விதையை..... சொல்லக் கேட்டிருக்கேன்.

      அப்படின்னா கதம்பத்தில் இருப்பதுன்னு நான் சொன்னது வேறு பூவாக இருக்குமோ.ஒருவேளை இருக்கலாம்.ஊருக்கு போனால் செக் பண்ணிட வேண்டியதுதான்.

      Delete
  7. //அரளி விதையை// அரைச்சா!! அது வேற. மஞ்சள் பூ, சின்ன மெல்லிய இலை. சடைச்சு வளரும். மொட்டங்காய் என்பாங்க சிலர்.

    ReplyDelete
    Replies
    1. அரைச்சுதாங்க.அப்போ அது வேறயா.இந்த விஷ(செடி)யத்தைப் பற்றி இவ்ளோ சீரியஸா நாங்க பேசும்போது இப்படி ஒன்னுமில்லாம பண்ணிட்டீங்களே.இனி இந்த அரளி இலையையெல்லாம் தொடக் கூடாதுன்னு நேற்று சபதம்வேறு எடுத்துவிட்டேன்.

      Delete
    2. //அது வேற. மஞ்சள் பூ, சின்ன மெல்லிய இலை. சடைச்சு வளரும். மொட்டங்காய் என்பாங்க சிலர்.// சித்ராக்கா, இமா சொல்வது கரெக்ட்தான்! :) அந்த மஞ்சள் பூவை "பொன்னரளி" எனச் சொல்லுவோம் எங்கூர்ல! மஞ்சள் நிறத்தில நம்ம ஆள்காட்டி விரல் நீளத்துக்கு இருக்கும் பொன்னரளிப் பூ! போனவருஷம் ஊருக்கு போனப்ப பெங்களூர் பன்னர்கட்டா ஜோ-ல வெள்ளை நிறப் பொன்னரளி கூடப் பாத்தேன், படமெல்லாம் எடுத்துவந்தேன், போஸ்ட் போட! நாளாக ஆக அது அப்படியே மறந்துபோச்! :)

      //இனி இந்த அரளி இலையையெல்லாம் தொடக் கூடாதுன்னு நேற்று சபதம்வேறு எடுத்துவிட்டேன்.// :) நல்லதுதான்..இது பொன்னரளி அளவுக்கு விஷமிருக்காது, ஆனால் தொடாமலே இருங்களேன், எதுக்கு வம்பு! அரளிப்பால் சிலருக்கு ஒத்துக்காமல் கொப்புளம் வரும்! ;) [அப்பாடீ...முடிந்தளவுக்கு சித்ராக்காவ பயமுறுத்தியாச்சு! இனிமே அரளி பக்கம் தல வச்சு கூட படுக்கமாட்டாங்க! ;)))))]

      Delete
    3. //பன்னர்கட்டா ஜோ-ல// டைப்போ!! அது பன்னர்கட்டா ஜூ!! :)))))

      Delete
    4. மகி, போனதடவ ஊருக்குப் போயிருந்தப்ப ஊரெங்கும் மஞ்சள் நிற பூ கொத்துகொத்தா பூத்திருந்த செடிகள் பார்த்தேன். எங்க அக்கா வீட்டிலும் இருந்தது. 'அரளி செடி இது, வெட்டிப்போட்டுடுங்க'னு எங்கம்மா சொன்னாங்க. படத்தைகூட‌ தேடி எடுத்திட்டேன். க்ளியரா இருக்காது, இருந்தாலும் போட்டு விடுகிறேன், இதுவான்னு பாருங்க. இதுதான்னு தெரிஞ்சாச்சுன்னா இங்கிருந்தும் வெட்டிடலாம்.

      வாய்ப்பு கிடைத்தால் 'பன்னர்கட்டா ஜோ'வுக்கு ஸாரி ஜூவுக்கு போய் பார்க்கிறேன்.

      Delete
  8. // 'அரளி செடி இது, வெட்டிப்போட்டுடுங்க'னு எங்கம்மா சொன்னாங்க. படத்தைகூட‌ தேடி எடுத்திட்டேன். க்ளியரா இருக்காது, இருந்தாலும் போட்டு விடுகிறேன், இதுவான்னு பாருங்க. இதுதான்னு தெரிஞ்சாச்சுன்னா இங்கிருந்தும் வெட்டிடலாம்.// இந்தப் பூ வேறு சித்ராக்கா! "இது"- "அது" இல்லை! :)))))

    இதன் பெயர் "தங்க அரளி", விஷமிருப்பதாகத் தெரியலை, ஆனால் இந்தப் பூவும் தலையில் சூடப்படுவதில்லை. சாமிகளுக்குதான் வைப்போம். இந்த மரத்தின் இலை, மஞ்சள் பூ இரண்டையுமே சரமாகக் கட்டி கோயிலில், வீட்டில் ஸ்வாமி விக்ரஹங்களுக்குச் சாத்துவதுண்டு. பச்சை-மஞ்சள் காம்பினேஷனில் ரொம்ப அழகாக இருக்கும். இந்த மரத்தின் காய் குச்சி குச்சியா பீன்ஸ் போலதான் இருக்கும், பொன்னரளி-யின் காய் வேறு! :)

    உங்களுக்காகவே பொன்னரளியைத் தேடிப் பிடிச்சு அடுத்த பதிவில் போடுகிறேன், வெயிட்டீஸ்! :)))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி, இது வேறுதான். செடியின் இலைகளைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன். ம்...எல்லா அரளியும் அத்துபடிபோல.

      தேடுங்க தேடுங்க,வெயிட் பன்றேன். பொன்னரளியைத் தேடப்போய் எத்தனை ஊர்ப் பதிவுகள் ரெடியாகுதுன்னு பார்ப்போம்.

      Delete
  9. அரளி அல்லது அரளி விதை என கூகுள் இமேஜஸில் தேடிப் பாருங்க. முதலில் வரும் படங்களில் இருப்பதுவே பொன்னரளி!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்!! இந்த உரையாடல் இன்னும் முடியலயா!! ;))
      //உங்களுக்காகவே பொன்னரளியைத் தேடிப் பிடிச்சு அடுத்த பதிவில் போடுகிறேன், வெயிட்டீஸ்! :)))// ஹ்ம்! நானும் என் பங்குக்கு எதையாச்சும் தேடிப் பிடிச்சு போடாட்டா எப்புடி! தேடிப் பிடிச்சு அடுத்த பதிவில் போடுகிறேன், வெயிட்டீஸ்! :)))

      Delete
    2. பாத்துட்டேன் மகி, பொன்னரளி, தங்க அரளி____ பொருள் ஒன்றுபோல இருந்தாலும் உருவத்தில் வித்தியாசம்போல.

      இமா, ஒரு பதிவைப் போட்டு,(இங்க)வாயை அடைச்சிருங்க.நாங்க அங்கு வந்து மீதியை பேசிக்கொள்கிறோம்.

      Delete
    3. வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.... ;))
      போட்டாச்சு
      http://imaasworld.blogspot.co.nz/2013/07/blog-post_18.html

      Delete
  10. ஹையா! மேலே டேட் போட்டு போட்டு அட்பேட்!
    சூ...ப்பர்.
    இங்கு அடுத்த சீசன் காய் வந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இமா, நீங்க சொன்ன பிறகுதான் அரளியின் காய்கள் காய்ப்ப‌தை கவனித்துக்கொண்டே வந்தேன். இன்னும் காய்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நினைவுக்காக பதிந்து வைத்திருக்கிறேன்.

      ஆனாலும் மீண்டும் வந்து செக் பண்ணிட்டு கருத்தும் பதிந்ததில் மகிழ்ச்சிங்க.

      Delete