Friday, July 5, 2013

Calla lily


அழகான இந்த வெள்ளைப் பூவிற்கு ஆப்பிரிக்கா தாயகமாம். அங்கு Varkoor என்ற பெயரில் அழைக்கப்படுகிற‌தாம். பன்றியின் காதுபோல் இருப்பதால் இந்தப் பெயராம்.

ஐ! ஆப்பிரிக்க மொழியில் இரண்டு வார்த்தைகள் தெரிந்துவிட்டது. Vark  என்றால் அம்மொழியில் பன்றியாம், அப்படின்னா Oor என்பது காதாகத்தான் இருக்க வேண்டும்!

இந்த பூச்செடி எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ளது. நல்ல பச்சை நிறப் பிண்ணனியில் வெள்ளை நிறப் பூக்கள் கொள்ளை அழகு!

சென்ற மாதம்வரை நிறைய பூக்களுடன் இச்செடி மிகமிக அழகாக இருந்தது. இப்போது செடி முழுவதும் வதங்கி, துவண்டு, தரையோடு தரையாகக் காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.

காய்ந்துதான் போய்விட்டதே, பிடுங்கிவிடுவார்களோ என்ற கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் வழக்கம்போல் அதே இடத்தில் புது செடி நன்கு துளிர்த்து, வளர ஆரம்பித்துவிடும். அதுவரை 'ப்ளாக்'கில் பார்த்துக் கொள்வோமே!!

இந்தச் செடியின் இன்றைய (08/12/13) நிலை.......


மீண்டும் துளிர்விட்டு பசுமையாக வளர ஆரம்பித்துவிட்டது. பார்க்கவே அழகா இருக்கில்ல !!!

12 comments:

  1. அழகான லில்லி! :)

    உங்க புண்ணியத்தில நாங்களும் 2 ஆஃப்ரிக்க வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டோம்! :)))

    ReplyDelete
    Replies
    1. புண்ணியமெல்லாம் இல்லை மகி,மறந்திட்டேன் என்பதுதான் உண்மை. டியூஷன் ஃபீஸை என்னோட அக்கவுண்ட்ல போடச்சொல்லி நெம்பரை கொடுக்காமல் விட்டதால தப்பிச்சிட்டீங்க.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  3. வெள்ளைவெளேரென்று எத்தனை அழகு இந்தப் பூ!
    இயற்கை அன்னையின் ரசனையை என்னவென்று சொல்ல?
    பச்சை நிறப்பின்னணியில் வெள்ளை வெளேரென்ற பூக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதன் இலைகள்கூட அழகுதான்.அவைகளும் பூக்களுடன் போட்டி போடுவது போலவே இருக்கிறது.வருகைக்கும்,கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.

      Delete
  4. உங்கள் போட்டோ எடுக்கும் திறமை அழகாய் இருக்கிறது. மிகவும் அழகாய் வெள்ளைப் பூ
    மனத்தைக் கொள்ளை கொள்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பளிச் வெண்மையில் அழகான பெரியபெரிய‌ பூக்கள் எனும்போது ஈர்க்கத்தானே செய்கிறது. வெயிலுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் குடிச்ச மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம்.வருகைக்கு நன்றிங்க.

      Delete
  5. படங்கள் அனைத்தும் அழகு சித்ரா.
    பின்வீட்டு அங்கிளிடம் பேச்சுக் கொடுத்து நானும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். பூக்களைப் பிடுங்காமல் விட்டால் காய்களும் நிறைய வருகிறது.

    //Vark என்றால் அம்மொழியில் பன்றியாம்// வராகம். சுவாரசியம்தான். 'ஆபிரிக்க மொழியில் தமிழ் சொற்கள்' என்பது பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். இப்படி நிறைய இருக்கும் போல இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு செடி வளர்ந்து பூக்கும்போது படம் எடுத்து போடுங்கோ. செடியில் காய்கள் ஏதும் இருக்கான்னு ஒரு எட்டுபோய் பார்த்துவிட்டு வருகிறேன்.

      நீங்க சொன்ன பிறகுதான் 'வராகம்' என்ற சொல்லே நினைவுக்கு வருகிறது. மில்லியன்மில்லியன் ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி (இன்றைய இந்தியா) பிரிந்துபோய் ஆசியாவுடன் சேர்ந்ததாக இங்கு பப்ளிக் சானலில் ஒரு டாக்குமெண்டரி பார்த்ததாக‌ ஞாபகம்.

      அப்படின்னா நிறைய வார்த்தைகள் இருக்க வாய்ப்பு உண்டுபோல் தெரிகிறது.

      Delete
    2. //உங்க வீட்டு செடி வளர்ந்து பூக்கும்போது படம் எடுத்து போடுங்கோ.// காய்களும் காணலாம். http://imaasworld.blogspot.co.nz/2013/10/blog-post.html

      Delete
    3. நினைவில் வைத்து பதிவிட்டமைக்கு நன்றி இமா.

      Delete