Tuesday, July 30, 2013

ஆதரவுக்கரம் !!

நீங்க

கவலையேபடாதீங்க,

உங்களுக்கு

உதவ, ( ஹி ஹி...போஸ் கொடுக்கத்தான்  )

நாங்கள்

இருக்கிறோம் !!


ஒரு உயரமான டவரை புகைப்படம் எடுக்க முனைந்தபோது, இரண்டு குட்டீஸ் வந்து, தங்களை ஒரு ஸ்டில் எடுக்குமாறும், "கண்டிப்பாக நீங்க இதை ஃபேஸ்புக்கில் போடுவீங்க‌, என்னக்காச்சும் அதை நாங்க பார்த்துக்கொள்ளுகிறோம்", என்றும் கூறி, கொடுத்த போஸ்தான் இது.

எப்படியெல்லாம் வலிய வந்து மாட்றாங்க பாருங்க !

ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா என யோசிக்க வைத்துவிட்டனர்.

9 comments:

  1. :) இந்த ஊரிலதான் இதெல்லாம் பாஸிபிள்!! கேமராவோட நாம நின்னா வெயிட் பண்ணுவாங்க, அல்லது இப்படி ஆர்வமா போஸ் குடுப்பாங்க! :)

    //இரண்டு குட்டீஸ் வந்து, தங்களை ஒரு ஸ்டில் எடுக்குமாறும்,// என்ன்ன்ன்ன்னது, இவங்க "குட்டீஸ்"-ஆ??!! ஆஆஆஆஆ! மீ ஸ்பீச்லெஸ்!! ;))))

    பசங்களுக்கு உங்க ப்ளாக் யுஆரெல் குடுத்திருக்கலாமே!! ;))))

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பிள்ளைங்க எல்லோருமே எனக்கு குட்டீஸாத்தான் தெரியுறாங்க. எதிர்ப்புக்குரல் பலமாக வரவே (2/3) எடுத்துவிடும் தீர்மானத்தில் இருக்கிறேன்.

      "பசங்களுக்கு உங்க ப்ளாக் யுஆரெல் குடுத்திருக்கலாமே!"__________இதை போடுவேன் என‌ படம் எடுக்கும்போது ஒரு ஐடியாவும் இல்லை.காலையில் பதிவு போடும்போதுதான் நினைத்துக்கொண்டேன்.

      Delete
  2. இவங்களையா குட்டீஸ் என்று சொல்கிறீர்கள்.
    மஹி சொல்வது போல் ப்ளாக் URL கொடுக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. மூன்றில் இரண்டு பங்கு எதிரணியில் இருப்பதால் கூடிய சீக்கிரம் குட்டீஸை எடுத்துவிடுகிறேன்.மீண்டும் சந்திக்க நேர்ந்தால் ப்ளாக் URL கொடுக்க முயற்சிக்கிறேன். அதுவரை இந்தப்பதிவு இருக்க வேண்டும்.இவர் பார்த்தால் எடுத்துவிட சொல்லுவார்.

      Delete
  3. ரசித்தேன்...

    ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாதது ஆச்சரியம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. "ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாதது ஆச்சரியம் தான்..."____அப்படியா சொல்றீங்க!! வேண்டாம் என்றுதான் நான் விட்டுவிட்டேன்.

      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
    2. எனக்கு(ம்) ஃபேஸ்புக்கில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் விட்டுட்டேன்! ;) பெயருக்கு ஒரு அக்கவுண்ட் இருக்கிறது. ஆனால் ப்ரெண்ட் ரிக்வஸ்ட்ஸ் எதையும் ஏற்கவில்லை, ஏன் அங்கே போவதே அரிது! ;) என்னவரின் அக்கவுண்ட் இருப்பதால் நான் ஃபேஸ்புக்-ல இருந்து விலகியிருக்கேன் எனவும் சொல்ல முடியாது, அங்கே ஆக்டிவ்-ஆக இருக்கிறேன் எனவும் சொல்ல முடியாது. கழுவுற மீன்ல நழுவுற மீனாக ஃபேஸ்புக்குடன் உறவாடிகிட்டிருக்கேனாக்கும்! ஹஹஹா!! ;))))

      Delete
  4. உங்க ஊரு குட்டீஸ் நல்லாருக்காங்க!
    சில சமயம் வெளிநாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இப்படித்தான் - வயது 19, 20 என்பார்கள். ஆள் பார்த்தால் முழு வளர்த்தியில்!

    முதல்ல உங்கள இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க வச்சாங்களா? இப்ப பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிக்கத் தூண்டுறாங்க!(நானும் இதில் உண்டு!) உஷார்!

    ReplyDelete
    Replies
    1. குட்டீஸ்னு நீங்களும் ஒத்துக்கிறீங்களா!சொன்னமாதிரி வளர்த்தியில் அப்படி தெரியுறாங்க.

      சும்மா சொன்னேன், ஃபேஸ்புக் பக்கமெல்லாம் போகிற ஐடியா எதுவும் இல்லைங்க.

      "முதல்ல உங்கள இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க வச்சாங்களா?"_____ அவங்களத்தான் வலபோட்டு தேடிட்டிருக்கேன், பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்க.

      Delete