விமானப் பறவையின் பார்வையில் பூமி !!
சமீபத்தில் மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது மேலேயிருந்து எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை.
ஹை, இந்த முறை எனக்கு ஜன்னலோர இருக்கை! உள்ளூரில் ஒருமணி நேர பயணம் என்பதால் சோர்வாகாமல் படங்கள் எடுத்தாச்சு.நான் ரசித்த காட்சிகளில் சில, இதோ உங்களின் பார்வைக்கு ...
வழி நெடுக மலைகள்தான். மலையில் ஆங்காங்கே குளம்,ஏரி போன்று நீர்நிலைகள் தெரிந்தன.
சில படங்களில் உள்ள சதுரம், செவ்வகம், வட்ட வடிவிலான பசுமையான நிறங்கள் விவசாயம் செய்யும் நிலங்களாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பறவைப் பார்வை அழகாய் இருக்கிறது. குறிப்பாக அந்த நீர்நிலையும், விளைநிலங்களும் அட்ராக்டிவ்!! :)
ReplyDeleteஎன்னவருக்கும் இப்படி பறவைப்பார்வயில் பூமியை சிறைப்பிடிப்பது விருப்பம். நான் வானில் மேகங்களை ரசிப்பது வழக்கம்! ;)
ஒரு மணி நேரப் பயணத்தில்...எங்கூருக்கு வந்தீங்களா என்ன?! ;))))
ஓ,உங்களவருக்கும் பிடிக்குமா! இந்தியா போகும்போது சூரிய உதயம்,அஸ்தமனம், வெண்,கருமை,பொன்னிற மேகங்கள் என அழகழகாய் வரும்.எனக்குன்னு நடுவுல ஒரு சீட்டு,அதனால பார்த்து ரசிப்பதோடு சரி.
Deleteஎனக்கு மேகத்தை எடுக்கத்தான் விருப்பம். அந்த நேரம் பார்த்து ஒரு மேகத்தையும் காணோம்.
ஆமாம்,உங்கூரு பக்கம்தான்.எப்படித்தான் கண்டுபிடிப்பிங்களோ!எஃப் பி ஐ___ல சேர ஏதாவது ரெகமண்டேஷன் லெட்டர் வேணும்னா சொல்லுங்க மகி, பக்கம் பக்கமா எழுதித்தரேன்.
//எப்படித்தான் கண்டுபிடிப்பிங்களோ!// :)))) உங்க படங்களில் இருக்க மலைத்தொடர்கள், கேன்யன்ஸ் எல்லாமே எங்க பக்கம்தானே இருக்கு! என்னவரும் இதையெல்லாஆஆஆம் படமெடுத்துவைச்சிருக்காரே! கூடவே ஒன் அவர் ஜர்னி-நு சொல்லிருக்கீங்க..அதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாருங்க...சிம்பிள் ஆன்ஸர்! ;))))
Delete//எஃப் பி ஐ___ல சேர ஏதாவது ரெகமண்டேஷன் லெட்டர் வேணும்னா சொல்லுங்க மகி, பக்கம் பக்கமா எழுதித்தரேன்.// ஐ!! தாங்க் யூ! சீக்கிரமா சொல்றேன் சித்ராக்கா! :)))))
"உங்க படங்களில் இருக்க மலைத்தொடர்கள், கேன்யன்ஸ் எல்லாமே எங்க பக்கம்தானே இருக்கு!"_______அப்படியா! இதுவரை எட்டிஎட்டியேப் பார்த்து வந்த எனக்கு இது புதிது. அதனால்தான் குழம்பிட்டேன்.
Delete"கூட்டிக் கழிச்சுப் பாருங்க...சிம்பிள் ஆன்ஸர்! ;)))) "______ அப்போ நானாதான் உளறிட்டேனா?அவ்வ்வ்வ்வ்வ்.
அழகு... ரசனைக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்,
Deleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க.
மிகவும் அழகாய் படம் பிடித்து இருக்கிறீர்கள்.விமானத்தில் போகும் போது வானவில் தோன்றினால் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஒரு முறை பார்த்தேன். ஆனால் போட்டோ எடுக்க வில்லை.
ReplyDeleteஉங்களால் முடிந்தால் எடுங்கள் வான வில் முழு வட்டமாக இருக்கிறது.
அழகிய பதிவு. வாழ்த்துக்கள்.......
நான் இதுவரை வானவில்லை பார்த்ததில்லை.பார்த்தால் எடுக்கிறேன். பரவாயில்ல,நீங்க பாத்துட்டீங்க.மேலேயிருந்து பார்த்தால் முழுவட்டமாக இருக்கும் என்றுதான் சொல்கிறார்கள்.
Deleteமேகங்கள்கூட சூரிய ஒளி பட்டு அழகழகாய் இருக்கும். பலவருட இட(window seat) ஒதுக்கீட்டு போராட்டத்திற்கு பிறகு இப்போதானே சன்னலோர சீட் கெடச்சிருக்கு, இனிதான் எடுக்கவேண்டும்.வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
விமானத்தில் ஏறியதிலிருந்து இறங்கும்வரை எடுத்த புகைப்படங்கள் என்று ஒரு வரிசைக் கிரமம் தெரிகிறது, சித்ரா!
ReplyDeleteஎனக்குக்கூட வானவில்லை முழுமையா வட்டமா பார்க்கணும்னு ஆசை! சீக்கிரமாக வெளியூர் மறுபடி போய் படம் எடுத்துப் போடுங்க.
கருத்தம்மா படத்தில் 'தென்மேற்கு பருவகாற்று' பாட்டில் வானவில்லை முழு வட்டமாக காண்பிப்பார்கள். அதற்காகவே அந்தப் பாடல் தொலைக்காட்சியில் வந்தால் நிச்சயம் ஓடி வந்து பார்ப்பேன்.
ஆமாங்க,திரும்பி வரும்போது தொடர்ந்து எடுத்தேன்.
Delete"சீக்கிரமாக வெளியூர் மறுபடி போய்"_______ நீங்க சொன்னதாய் அவரிடம் சொல்கிறேன்.
"'தென்மேற்கு பருவகாற்று'"____ இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும். வீடியோ பார்த்தேன், ஆனால் வானவில்லின் ஒரு பகுதிதானே இருக்கு. போனதடவ ஊருக்குப் போயிருந்தபோது மகள் வானவில்லை படம் எடுத்தாள், அதைத் தேடிப்பார்க்க வேண்டும்.
அழகு.
ReplyDeleteஇயற்கையின் அழகே தனிதான்.
Delete