இது இல்லாமல்....... கோடை நிறைவடையுமா சொல்லுங்க !!
இந்த வருடம் கோடை ஆரம்பித்த இரண்டாவது நாளே மேகமூட்டம், அடுத்த நாளே மழை....ஆஹா என்றிருந்தது.
சாதாரண மழை நாட்களிலேயே மழையை விட்டு வைக்க மாட்டேன்.
கோடையில் மழை!, அடுத்தாற்போல் பிசுபிசுக்கும் தூறல் என்றால் சொல்லவா வேண்டும்!
அப்போது எடுத்த கோடை மழைத்துளிதான் இது!
வீட்டு வாசலில், மழையில் குளித்து முடித்து துவட்டிக்கொள்ள அடம்பிடித்த பூக்கள் !!
ஒண்ணுமே புரியலே.........
ReplyDeleteகழுத்தை எல்லாம் திருப்பி திருப்பி பார்த்து விட்டேன்.வலி கண்டது தான் மிச்சம்.
ஒரு க்ளு ப்ளீஸ்........(Just for joke)
உண்மையாகவே என் மண்டைக்கு விளங்கவில்லை . எனக்கு மட்டும் தானா? பொறுத்திருந்துபார்க்க வேணும்.
அப்பாடி, உங்க பதிலைப் பார்த்துதான் (ஒண்ணுமே புரியலே) நிம்மதியாச்சு! தலைப்பை மாத்தினதால தப்பிச்சேன்.'கோடை'தான் க்ளு.
Deleteபடங்களை எடுக்கும்போது எடுத்துட்டேன். கம்ப்யூட்டரில் ஏத்தின பிறகு பார்த்தால் என்ன எடுத்தேன்னு எனக்கே புரியல.
பதிலுடன் பிறகு வருகிறேன், நன்றிங்க.
//உங்க பதிலைப் பார்த்துதான் (ஒண்ணுமே புரியலே) நிம்மதியாச்சு! தலைப்பை மாத்தினதால தப்பிச்சேன்.'// இல்லை, இன்னும் கொஞ்சம் லூஸ் எண்ட் விட்டிருக்கீங்க! ;)))) நான் போட்டோவை க்ளிக் பண்ணி பார்ததுமே அது என்னன்னு கண்டுபுடிச்சிட்டேனே! :))))))
Deleteபதிவின் தலைப்பை "மட்டும்" மாத்தினா எப்படி சித்ராக்கா? போட்டோ...போட்டோ...அதையும் கவனிங்க! ;)
பதிலைச் சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பலை, பார்க்கலாம் இன்னும் யாராவது கண்டுபுடிக்கறாங்களான்னு! :)
என்னால சஸ்பென்ஸை ரொம்ப நேரம் கீப் பண்ண முடியல ஹி ஹி (முடியாது என்பதுதான் உண்மை)
Deleteமழையா...?
ReplyDeleteஆமாங்க ஆமாம்.கோடை மழைதான்.
Deleteஇங்கே "இதை" பார்ப்பதே அரிது!..அவ்வ்வ்வ்வ்!
ReplyDeleteமகி,
Delete"நான் போட்டோவை க்ளிக் பண்ணி பார்ததுமே அது என்னன்னு கண்டுபுடிச்சிட்டேனே!" ___மகி சொல்லிடுங்க.
"இங்கே "இதை" பார்ப்பதே அரிது!..அவ்வ்வ்வ்வ்!"___இதைப் பார்த்தால் வேறு ஏதோபோல் தெரிகிறதே.
சதர்ன் கலிஃபோர்னியால மழையைக் காண்பதே அரிதா இருக்கு சித்ராக்கா! எப்பவாவது புயல் வந்து மழை கொத்தினாத்தான் உண்டு! :)
Deleteபோட்டோவுக்கு அழகா "ரெய்ன் ட்ராப்"-நு பேர் வைச்சிருக்கீங்களே, அத சொன்னேன்! ;)
இங்கும் ஒரே நாள்தான் மழை வந்தது.திரும்பவும் எப்போதுடா வரும் என இருக்கிறது.
Deleteபதிவை முழுமையாக்க வேண்டும்.அப்போது மழைத்துளியை ஆசைதீர பாருங்கோ.
என்னன்னு தெரியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறதே!
ReplyDeleteமஹி வேறு பில்ட் அப் செய்கிறார்கள்.
என்னவாயிருக்கும்........
கோடை மழைதாங்க."என்னன்னு தெரியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறதே"_____இதைப் பார்த்து பயந்துதான் சொல்லிட்டேன்.
Deleteகோடை க்ளூ என்றால்... கண்டுபிடிச்சிட்டேன். //இங்கே "இதை" பார்ப்பதே அரிது!.// ம். இங்க வந்துதே இந்த வருஷம். ;((
ReplyDeleteகோடை ஆரம்பித்ததுமே எங்களுக்கும் வந்ததுங்க.
Deleteஎன்னங்க இது? உலகத்தின் மறுகோடில உட்கார்ந்து மாத்தி மாத்தி புதிர் மாதிரி பேசறீங்க?
ReplyDeleteகோடை மழைத்துளி புகைப்படம் எடுத்துப் போட்டிருக்கீங்க, அவ்வளவுதானே?
இன்னும் ஏதாவது உண்டா?
பூக்களின் மேல இருக்கும் பனி(மழைத்துளி)துளியைப் பார்த்தவுடன், 'பனித்துளி பனித்துளி' பாடல் நினைவுக்கு வருது.
மழைத்துளிகள் உட்கார்ந்திருக்கும் பூக்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் caption' மழையில் குளித்து முடித்து துவட்டிக்கொள்ள அடம்பிடித்த பூக்கள்' அருமை! ஒரு ஹைக்கூ கவிதை போல இருந்தது.
பதிவின் முதல் படம் & முதல் வரியை மட்டும் போட்டுவிட்டு விட்டுவிட்டேன். ராஜலக்ஷ்மியின் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு அடித்துப்பிடித்து சஸ்பென்ஸை உடைத்துவிட்டேன். அடுத்த தடவையாவது கடைசிவரை சொல்லாமல்(லே) இருக்க முயற்சிக்கிறேன்.
Deleteஉங்களைக் குழப்பாமல் விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான். பூவுக்கான வரியை ரசித்துப் படித்ததிற்கு மகிழ்ச்சிங்க.