எனக்கு உண்மையிலேயே coots னு ஒரு பறவை இருப்பதே இதுநாள்வரை தெரியாது. இமா அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அவருக்காகத்தான் இந்த பதிவு.
"அவ்வ்!! மேல அத்தனை coot ஒரே இடத்துல!! ஆசையா இருக்கு பார்க்க"_________ இப்படியெல்லாம் சொன்ன பிறகு நான் எடுத்து வைத்துள்ள coots ன் படங்களைப் போடாமல் இருந்தால் என் கௌரவம் என்னாவது !! இல்லாத அந்த கௌரவத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இந்தப் பதிவு.
Coot ஐத் தமிழ்ப்படுத்தி பார்த்தபோது 'நாமக் கோழி' என்ற அழகான தமிழ் பெயர் கிடைத்தது. முகத்தில் வெள்ளை நிறத்தில் 'நாமம்' மாதிரி இருப்பதால் இந்தப் பெயராக இருக்கலாம்போல் தெரிகிறது.
எங்கள் ஊர் பூங்காவில் உள்ள குளத்தில் coots ஐப் பார்த்தபோது குட்டிவாத்துகள் என்றே நினைத்தேன். ஆனால் அங்கே உள்ள ducklings களுக்கும் இவைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இவை கோழி & வாத்து மாதிரியும் தெரிந்தது.சரி, இது ஒரு வித்தியாசமான வாத்தாக்கும் என 'க்ளிக்'கிக்கொண்டு வந்துவிட்டேன்.
தண்ணீரில் இருக்கும்போது, சாம்பல் நிறம், வில்லன் கணக்கில் சிவந்த கண்கள் & வெண்ணிற அலகு என பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் கருமையாக, நம்ம ஊர் அப்பாவி கோழி மாதிரியே இருக்கிறது.
நீந்துவதற்கு தெம்பு வேண்டுமே, தண்ணீரில் உள்ள புழுபூச்சிகள் போதாமல், மேலே ஏறிவந்து எதையோ தேடித்தேடி கொத்திக்கிளறி சாப்பிட்டுவிட்டு, கூடவே சூரிய ஒளியில் கொஞ்சம் குளிரையும் காய்ந்துவிட்டு, மீண்டும் தண்ணீருக்குள் செல்வதைப் பார்க்கப் பார்க்க.....அது ஒரு அழகு.
(அவருக்கு) வளர்ப்புப் பிராணிகள் மேலுள்ள பாசத்தால் இந்தப் படத்தையும் இணைக்காமல் இருக்க முடியவில்லை.
படத்தில் ஆமையின் ஓடு பெயர்ந்துள்ளது. அது அடிபட்டதாலா அல்லது தோல் உரிந்திருக்கிறதா தெரியவில்லை !!
'நாமக் கோழி' அழகாக இருக்குங்க...
ReplyDeleteஆமாங்க, அவைகளின் அழகுக்கு எவ்வளவு நேரம் நின்று பார்த்தாலும் நேரம் போனதே தெரியவில்லை. வருகைக்கு நன்றிங்க.
Delete//என் கௌரவம் என்னாவது !!// அதுதானே! ;)
ReplyDeleteநாமவாத்துக்கு யார் நாமக்கோழி என்று பெயர் வைத்தது!
சூப்பர் சித்ரா. எனகே எனக்கு என்று ஒரு போஸ்ட்டா! சந்தோஷமா இருக்கு. இவ்வளவு அதிகம் ஒரே இடத்தில் கண்டதில்லை. நன்றி! நன்றி! @}->--
ஆமை - தோல் உரிந்திருக்கலாம். அப்படியே கழற்றி விட்டுருவாங்க. உடைஞ்சு இருந்தால் கூட சரியாகிரும்.
"நாமவாத்துக்கு யார் நாமக்கோழி என்று பெயர் வைத்தது!"_________ அவ்வ்வ்வ் !
Deleteஇவையெல்லாம் கூட்டம்கூட்டமாக நீந்துவதும், மேலே ஏறி வருவதும், மீண்டும் நீரில் இறங்குவதும்.... அழகோ அழகு !
சென்ற வாரம் உங்க 'ப்ளாக்'கை அக்குவேறு ஆணிவேறாக கலைத்துப்போட்டு பார்த்தபோது ( நல்ல பிள்ளையா எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வச்சிட்டேங்க) உங்களுக்கு வளர்ப்பு பிராணிகளின் மேலுள்ள பாசத்தைப் பார்த்து (முக்கியமாக ஆமை) திகைத்துவிட்டேன். அந்த நேரம் பார்த்து உங்கள் பின்னூட்டமும் சேர்ந்து இந்தப் பதிவைப் போடத்தூண்டியது.
"உடைஞ்சு இருந்தால் கூட சரியாகிரும்"_______ இது மாதிரி நல்ல வார்த்தை வரும்னுதான் படத்தைப் போட்டேன். இனி நிம்மதி. நன்றிங்க.
உங்கள் நாமக் கோழி அழகு. நம் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்!
ReplyDelete'துறுதுறு'ன்னு இங்குமங்கும் போவது அழகாகவே இருந்தது. மேலும் கொஞ்சம் படங்கள் இருந்ததால் சந்தோஷமாக போடமுடிந்தது. நன்றிங்க.
Deleteநாமக்கோழிகள் நீரில் நீந்துவது, வெளியே வந்து கொத்தி தின்னுவதும் - உங்களைப் போலவே நாங்களும் ரசித்தோம். இவற்றின் அழகை ரசிக்க இரண்டு காணொளிகளை கொடுத்ததற்கும் நன்றி!
ReplyDeleteஆமையின் ஓடு மறுபடியும் சரியாகிவிடும் என்பது ஆறுதலைக் கொடுத்தது. உங்களது முகப்பு படமும் அழகு.
இவற்றைப் பார்த்துக்கொண்டு ரொம்ப நேரம் அங்கேயே இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.
Deleteஆமையைப் பற்றிய சந்தேகம் தீர்ந்ததில் எனக்கும் மகிழ்ழ்சி. நேரமிருக்கும்போது 'பார்க்'கின் படங்களைப் போடுகிறேன். இன்னும் நன்றாக இருக்கும்.
அழகாயிருக்கு நாம வாத்துகள்
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteமுதன் முறையா இப்போதான் பார்த்தேன். உங்களைப் போலவே எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
நாம வாத்துகள். நாமம் யார் போட்டிருப்பா?
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteவாங்கமா, ஆராய்ச்சியைத் தொடங்கிடலாம் !! வருகைக்கு நன்றிமா.