இவ்வளவு தூரம் தேடிவந்து விழாவில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி!விழா முடியும்வரையிருந்து,விருந்துண்டு மகிழ்ந்து,அப்படியே மொய்யையும் எழுதிவிட்டு (இது கட்டாயம்) ,சிலபல நாட்கள் இங்கேயேத் தங்கியிருந்து, மனமகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிறைகள்,முக்கியமாகக் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டத் தவற வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சமையலை http://chitrasundar5.wordpress.com/ லும்,சிலஅனுபவங்களை இங்கேயும் பகிர்ந்துகொள்ள விருப்பமாக உள்ளேன்.அங்கு அளித்த ஆதரவை இங்கேயும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.நன்றி!
:) Welcome! :)
ReplyDeleteLooking forward for your posts..happy blogging Chitra Akka!
Will come back again with "Tamil" later! ;)
போய்ட்டு மெதுவா வாங்க!நானும் அப்படியே கிளம்பி மார்க்கெட், காஸ்ட்கோ,அடுத்து சரவணபவன் போய்ட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்துவிட்டு வருகிறேன்.முதன்முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மகி.
ReplyDeleteFollowers gadget-ல உங்களை பாலோ பண்ண முடிலயே??! இஸ் எவ்ரிதிங் ஓக்கே? செக் பண்ணுங்க சித்ராக்கா!
ReplyDeleteஅப்புறம் அப்படியே கமென்ட் பாக்ஸ்ல வர word verification-ஐ நீக்கிருங்க. கமென்ட் போடும்போதெல்லாம் வெரிஃபை பண்ண கஷ்டமாயிருக்குது! ;)
நானும் கடை-கண்ணிக்கெல்லாம் போயிட்டு வந்தாச்! இங்க சரவணபவன்-லாம் இல்ல, சப்வே லன்ச் தான் இன்னிக்கு! ;)
word verification_ஐ நீக்கிட்டேன் மகி.கொஞ்சம் சுயவிவரம் கேட்பதால் Followers gadget_ஐ எடுத்திட்டேன்.இப்போதான் கொஞ்சம்கொஞ்சமா பார்த்திட்டு வரேன்.வேறு ஏதேனும் மாற்ற வேண்டுமான்னு பாருங்க.இன்று சப்வே லன்சா! in-n-out போயிருக்கீங்களா?
ReplyDeleteஎன்னது சுயவிவரம் கேக்குதா? ஹ்ம்ம்...என்ன விவரமெல்லாம் கேக்கும்னு மறந்தே போச்சு போங்க! :)
Deleteப்ளாக்ஸ்பாட்டுக்குள்ள வந்திட்டீங்கள்ல, இனி என்ன தயக்கம்..விவரங்களைக் கொடுத்து பாலோயர்ஸ் gadget-ஐச் சேருங்க! ;)
/in-n-out போயிருக்கீங்களா?/ அங்க சைவம் ஏதும் கிடைக்குது?! ஐ டோன்ட் திங்க் ஸோ..போனதில்லீங்கோ! :)))
வேறென்ன பர்த் டேட்தான்.நம்ம ஜாதகம்தான் ஊர் முழுக்க இருக்குன்னு சொல்றீங்களா!சரி சேர்த்துவிடுகிறேன்.
ReplyDeletein-n-out_ல பர்கர் ஆர்டர் பண்ணும்போது வெஜ் பர்கர் வேணும்னு சொல்லிட்டு (கண்டிப்பா முழிப்பாங்க),everything except meat னு சொல்லுங்க.டேஸ்ட் பண்ணபிறகு அடிக்கடி அந்தப் பக்கம் போக ஆரம்பிச்சிடுவீங்க.அப்படியே french fries ம் வாங்கிக்கோங்க. ஃப்ரெஷ்ஷா போடுவாங்க.உப்பும் கம்மியா சூப்பரா இருக்கும்.இந்தக் கடையில் மட்டும் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம்.நாளைக்கே போய்ட்டு வந்து சொல்லுங்க.
எனக்கும் இது தெரியாது.உங்க ஊர் பக்கம் இருந்தபோது என் மகள் க்ளாஸ் டீச்சர் (ஸ்கூலில் அவங்களும்,என் மகளும்தான் இண்டியன்ஸ்) சொல்லித்தான் எனக்கும் தெரியும்.
வந்துட்டேம்மா. ஆரம்பம் அழகாயிருக்கு. தொடர்ந்து பார்க்கலாம்.
ReplyDeleteஅன்புடன் ஆசிகள்.
காமாஷிமா,
Deleteஉங்க வேலைகளுக்கிடையே வந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கும் நன்றிமா. அன்புடன் சித்ரா.
சித்ரா,
ReplyDeleteநன்றாகவே இருக்கிறது உங்கள் முன்னுரை.
தொடர்ந்து உங்கள் அமெரிக்க அனுபவங்களை எழுதுங்கள் .
உங்களைத் தொடர்கிறேன்.
ராஜி
ராஜலஷ்மி,
Deleteவாங்க!நீங்க சொன்னதுபோல் முயற்சிக்கிறேன்.வருகைக்கும், தொடர்வதற்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.
vazhlthukal..muthal comment nan than panirupen...comment gadgets apo illai..ipo partha 10 comments vilunthuruku..huh its ok..reactions la first comment nan than panine
ReplyDeleteim gnanaguru..:) this is my blog..en blog posts la unga comments kudunga nu ketukolkiren..nandri :)
Deleteஞானகுரு,
Deleteஉங்க ப்ளாக் இருப்பது தெரியாது.இப்போதான் தெரியும்.அதனாலென்ன, வந்துட்டாப்போச்சு. வாழ்த்துக்களுக்கு நன்றி.
இனிய வாழ்த்துகள்...
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி,
Deleteஇனிய வாழ்த்துக்களுக்கு நன்றி!
கண்டிப்பாக..... சுவையா இருக்கும் உங்க சமையல் குறிப்புகளை அங்கேயும் சுவாரஸ்யமான அனுபவங்களை இங்கேயும் பார்க்க கண்டிப்பா வருகிறேன் ...
ReplyDeleteசௌம்யா,
Deleteவாங்க,உங்க முதல் வருகைக்கு நன்றி.டாக்குமென்ட்ஸ் மாதிரி இல்லாமல் சுவையாக எழுத முயற்சிக்கிறேன்.
புதிதாக இன்னொரு ப்ளாக் ஆரம்பித்ததற்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஒவ்வொரு முறையும் உங்கள் ப்ளாகிற்கு வந்து நீங்கள் என்னவெல்லாம் சேர்த்திருக்கிறீர்கள் என்று பார்த்து, என்னுடையா ப்ளாகில் எல்லாவற்றையும் மாற்றி,மாற்றி அமைத்து...இன்று காலைதான் உரைத்தது: உங்களுக்கு வாழ்த்துச் சொல்லாமலேயே வந்துவிட்டேன் என்று!
நீங்களும், மகியும் பேசுவதே ஒரு சுவாரஸ்யமான பதிவு போலத்தான் இருக்கிறது.
உங்கள் இந்த வலைபதிவு மேலும் மேலும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துகள்!
ரஞ்சனி,
Deleteபாராட்டுக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.டெம்ப்ளேட் நல்லா இருக்குன்னு நீங்கதானே சொன்னீங்க.அப்போ அது மெயிலாக இருக்க வேண்டும். இப்போ மாத்திட்டேன். இருந்தாலும் படங்கள் விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை.எல்லாமே டல்லா இருக்கு.
சிலேட்டு & பலப்பத்துடன் ஆட்டோ பிடித்துவிட்டேன்,ரஞ்சனி டீச்சர் வீட்டு டியூஷனுக்கு.வேலை சரியாக இருக்கிறது.உட்கார்ந்து பொறுமையாகப் பார்க்கவேண்டும்.
//படங்கள் விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை.எல்லாமே டல்லா இருக்கு.// ஏன் அப்படிச் சொல்றீங்க? படங்கள் எல்லாமே நல்லாதானே இருக்கு சித்ராக்கா? wordpress-க்கும் blogspot-க்கும் படங்களில் கூட வித்யாசம் வருதா என்ன? எனக்கு படங்கள் தெளிவாகத் தெரியுதே?!
ReplyDeletefollowers gadget ஏன் சேர்க்கலை இன்னும்? மறுபடி ட்ரை பண்ணுங்க..எதாச்சும் டவுட்டுன்னா சொல்லுங்க, நான் (விம் பார் போட்டு;)) நல்லாவே விளக்குவேன். ஜோக் இல்லே, ரியலி! ;) :) என் மெயில் ஐடி கூட உங்கள்ட்ட இருக்கு, மெய்ல் வேணாலும் அனுப்புங்கோ. புதுசா ப்ளாக் ஆரம்பிச்ச நிறைய பேரை தெளிவாக்கியிருக்கேன் யு நோ? ;)
~~
//நீங்களும், மகியும் பேசுவதே ஒரு சுவாரஸ்யமான பதிவு போலத்தான் இருக்கிறது.// ரஞ்சனி மேடம், ரொம்ப நன்றி! :)
~~
BTW, in & out Burgers இங்கே வீட்டுப் பக்கத்திலயே ஒண்ணு இருக்குது, இன்னும் போகலை, போயிட்டு வந்து சொல்றேன் சித்ராக்கா! :)
~~
Delete"போன முயல் பெரிய முயல்" கதைதான்.'வேர்ட்ப்ரஸ்'ல படத்தை இன்னும் பெரிதாக்கி க்ளியரா பார்க்கலாம்.டெம்ப்ளேட் மாத்தினபிறகு பரவாயில்லை. followers gadget__ஐ க்ளிக் பண்ணவே முடியல. Experimental னு வருது.
in & out_ போய்ட்டு வாங்க.வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தும் இவ்ளோ நாள் டேஸ்ட் பண்ணாம விட்டுட்டீங்களே.'வெஜ் பர்கர்'னு சொன்னா சமயங்களில் சீஸையும் வைக்க மாட்டாங்க.அதனால அங்கயே செக் பண்ணிடுங்க.
"நீங்களும்,மகியும் பேசுவதே ஒரு சுவாரஸ்யமான பதிவு போலத்தான் இருக்கிறது"___இப்படித்தான் புது ப்ளாக்கையே ஓபன் பண்ண வச்சிட்டாங்க.
ஓ...எக்ஸ்பெரிமென்டல்??! ஏன்னு தெரியலையே..ஒருவேளை நீங்க செலக்ட் பண்ணி இருக்கும் டெம்ப்ளேட்டில் பாலோயர்ஸ் காட்ஜட் இல்லையோ??! ப்ளாகர்ல புது இன்டர்ஃபேஸ் வந்தப்புறம் நான் ரொம்ப ஆராய்ச்சி பண்ணலை சித்ராக்கா! இன்னிக்கு ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
Deleteவால்மார்ட் பக்கத்தில தான் இன் & அவுட் இருக்கு, போக வர பாத்திருக்கேன், எப்பவுமே ட்ரைவ் த்ரூ-ல வண்டிங்க கியூவோ கியூ! ஒபாமாவுக்குப் புடிச்ச கடையில கியூ இல்லாம எப்படி-ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சுட்டு வந்துருவேன். ஒருமுறை போகணும், என்னவர் கம்பெனி தரமாட்டேன்றார்..தனியாப் போகணுமான்னு திங்கிங்..போய்ட்டு வந்து கண்டிப்பா தகவல் தாரேன் உங்களுக்கு!
More gadgets க்ளிக் பண்ணினாத்தான் followers gadget வருது.எல்லா ப்ளாக்குக்கும் available கிடையாது.Check back soon! னு வருது.டெம்ப்ளேட் தான் மாத்திப்பாக்கணும்.
Deleteஆமாம்,இந்தக் கடையில் மட்டும் உள்ளேயும் கூட்டம் வழியும்.கடையில் இருப்பவர்களின் யூனிஃபார்ம் கூட அழகாய் இருக்கும்.'ஒருமுறை போகணும்'___நடக்கற தூரம்னா நீங்களே போய்ட்டு வந்துருங்க.இல்லாட்டி நாளைக்கு லன்ச் டைம் இல்லாத நேரமா போய் பாருங்க.இவ்வளவு 'பில்டப்'பெல்லாம் கொடுத்திருக்கேன்,பார்க்கலாம்,எப்படியிருக்குன்னு.
Senthamarai Gopal
ReplyDeleteஎனது முழு சுயவிவரத்தைக் காண்க
/////// who is thissssssssssss????? :)))
ஆமாம்,அது யாரு!!!
Deleteஐ...இந்தக் கதை நல்லார்க்கே! :)))) இப்ப அவிங்களைக் காணம்! ஒளிஞ்சுகிட்டாங்க போலிருக்குது, யாரு என்னன்னு கேட்டுச் சொல்லுங்க. சித்ராசுந்தருக்கும் அவிங்களுக்கும் எதாச்சும் தொடர்பு இருக்குதா இல்லையா என்று தெரிஞ்சாப் போதும். அதுக்கு மேல விவரமெல்லாம் நான் கேக்கவேஏஏஏஏஏஏஏ மாட்டேன். ஹஹஹ! :D
Delete'சித்ராசுந்தருக்கும் அவிங்களுக்கும் எதாச்சும் தொடர்பு இருக்குதா இல்லையா என்று தெரிஞ்சாப் போதும்'____உங்களை மாதிரியே இன்னொருத்தருக்கும் இந்தக் கேள்வி.தொடர்பு இருக்கு.இந்தத் தொடர்பையே ஒரு பதிவாக்கிட்டா என்ன.ஹை,ஒரு பதிவுக்குக் கரு கெடச்சாச்சு!
ReplyDeleteFollowers gadget தான் வரல,சரினு google+ followers க்ளிக் பண்ணிப்பார்த்தபோது அவிங்க வந்துட்டாங்க.அவிங்க வந்ததை நான் கவனிக்கல. உங்க மெயிலைப் பார்த்த பிறகுதான் ரிமூவ் பண்ணினேன்.
;))) நல்ல அசிஸ்டண்ட் புடிச்சிருக்கீங்க சித்ரா. ;D வாழ்த்துக்கள்.
ReplyDelete'சித்ராக்கா சித்ராக்கா' னு அடிக்கடி சொல்லி இளைய சகோதரி இல்லாத குறையை போக்கியிருக்காங்க. இப்படி புசுக்குன்னு அஸிஸ்டண்ட் னு சொல்லிட்டீங்களே! தங்கையை விட்டுக் கொடுக்கறதா ஐடியாவெல்லாம் இல்லை.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க.
ஆரம்பமே அசத்தலா இருக்கு. மிக தாமதமான...........................வாழ்த்துக்கள் சித்ரா.
ReplyDeleteசித்ரா-மகி உரையாடல் சூப்ப்ப்பர்.!!!!
வாங்கோ ப்ரியா, வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி & நன்றி ! பின்னூட்டத்தையும் ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ப்ரியா.
Delete