Thursday, February 4, 2016

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ____ மிளகாய் அறுவடை !நீண்ட நாட்களாகவே மிளகாய் அறுவடையைப் பதிவிட நினைத்து, நினைத்து நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். இனியும் தாமதம் கூடாதுனு முடிவெடுத்து இன்று செயலில் இறங்கியாச்சு :)

                                                       நிறைய காய்த்துவிட்டன !

                   இப்படித்தான், அழகழகாக அடுக்கி வைத்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

                      செடியிலேயே பழுக்க ஆரம்பித்ததால் காயாகவே பறிக்க வேண்டியதாயிற்று.
               
                                         ஒரு செடியில் மட்டும் குண்டுகுண்டாக காய்த்தது.

பச்சை மிளகாய்க்கு பதிலாக பழ மிளகாய் வைத்து தேங்காய் சட்னி அரைத்துப் பார்த்தேன், சூப்பராவே இருந்துச்சு.

பழங்களைப் பறித்து, கழுவி, காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். ஏற்கனவே விதைக்கான ஆர்டர் குவிந்துவிட்டதால், மேற்கொண்டு ஆர்டர் பண்ண விரும்புபவர்கள் அடுத்த சீஸன்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதுதான், வேறு வழியில்லை !!  :)

இப்போ செடியெல்லாம் எப்படி இருக்குனு மட்டும் கேட்டுடாதீங்கோ ! போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், குளிரினாலும் இலைகள் கறுத்து, கொட்டிக்கொண்டுள்ளன. ஆனாலும் காய் மட்டும் காய்த்துக்கொண்டுதான் இருக்கிற‌து.

வீடு மாறும்போது movers ல் ஒருவர்(அமெரிக்க இந்தியர்) மிளகாய் செடிகளைப் பார்த்ததும், "இப்படித்தான் எங்க ஊரிலும்(மெக்ஸிகோ) தோட்டத்தில் இருந்து மிளகாயைப் பறித்து அப்படியே சாப்பிடுவோம். அந்த ஞாபகம் வருது" என்று சொல்லிவிட்டு, "ஒரு செடி குடுங்களேன்", என்றார்.

ஏற்கனவே நான், மாறப்போகும் வீட்டில் சூரிய வெளிச்சம் சரியாக விழாது போலிருக்கே, இந்த செடிகள் மடிந்துவிடுமோ என்ற கவலையில் இருந்தேன். அவர் கேட்டதும் இரண்டு குட்டி குட்டி செடிகளைப் பிடுங்கி தனித்தனியாக இரண்டு குட்டிகுட்டி பிளாஸ்டிக் தொட்டிகளில் நட்டு எடுத்துக்கொடுத்தேன்.

அவரோ "வேண்டாங்க, நான் சும்மா கேட்டேன்" என்றார்.

நான் "நெஜமாத்தான் குடுக்குறேன், எடுத்துக்கோங்க" என்றேன்.

பொருட்களை வீட்டில் வந்து இறக்கிவிட்டு அந்த இரண்டு செடிகளையும் சந்தோஷமாக எடுத்துச் சென்றார்.

அந்த இரண்டு குட்டிச்செடிகளிலும் நிறைய பூக்கள் & பிஞ்சுகள் இருந்தன. இந்நேரம் அவர்கள் ஜம்மென்று வளர்ந்து இருப்பார்கள் :)

17 comments:

 1. மிளகாய் - காயும், பழமும்...நன்றாக இருக்கிறது. 2 வெரைட்டி வச்சு இருக்கீங்க போல....விதை தயார்....சூப்பர்.

  அவங்க வீட்டுலயும் உங்களை நினைத்து சாப்பிட்டு இருப்பாங்க. உங்களுக்கு புரையேறுச்சா..இல்லையா....? ஹிஹிஹி....

  ReplyDelete
  Replies
  1. ஓ, ஆமாம், ஒருவேளை அதனாலதான் புரை ஏறுச்சோ :)))

   ஏதோ மிளகாய்களைக் கிள்ளி அதிலுள்ள விதைகளைத் தூவி விட்டேன், அவ்ளோதான் !

   Delete
 2. ஆஹா !உள்ளம் கொள்ளை போனதே !! எனக்கு சட்டியும் வெயிலும் பார்சல் ப்ளீஸ் :)
  இங்கே நல்லா வளரும் பூப்பூக்கும் காயும் காய்க்கும் அதுக்குள்ள விண்டரும் வந்து எல்லாத்தையும் ப்ரீஸ் ஆக்கிடும் அதனாலேயே தக்காளி கீரை உருளை காரட் மட்டும் போடறேன் ..
  பச்சை பசேல்னு சூப்பரா இருக்கு மிளகாயிஸ் :)

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல், தொட்டி செடி அனுப்புறேன், ஆனால் வெயில் ??? இனி யாரிடமாவதுதான் நான் வெயிலைக் கேட்கணும் :(( பேட்டியோவுக்கு வெயில் வரமாட்டேன்றது.

   உங்க ப்ளாக்கைப் பார்த்து நானும் சிவப்பு நிற தண்டுகீரை குச்சி நட்டு, சூப்பரா துளிர்த்து வந்து, இந்த வீட்டுக்கு மாறி வந்ததும் அது அழுகியேப் போச்சு :( எவ்ளோ பத்திரமா பார்த்துப்பார்த்து வளர்த்தேன் தெரியுமா ? வேறொரு பதிவில் அதன் படத்தைப் போடுறேன்.

   ஆமாம் ஆமாம் பச்சை & பழ மிளகாய்களை ரசிச்சு ரசிச்சு பார்த்தாச்சு :)

   Delete
 3. அமோக விளைச்சல் போல் தெரிகிறதே. அறுவடை முழுதும் முடிந்து விட்டதா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஆமாங்க, நானே நெனக்கல இவ்ளோ காய்க்கும்னு. இப்பவும் காய்க்குது, ஆனால் அளவிலும், எண்ணிக்கையிலும் குறைவாக. வெயில் இருந்தால் விடாமல் நன்றாகக் காய்க்கும் என நினைக்கிறேன்.

   Delete
 4. சூப்பரா இருக்கு சித்ராக்கா! வீட்டுக்குள்ள வெயில் வரும்னா அங்ஙன வைங்க செடிகள!! ;) :) செடிங்களுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க..கண்ணு பட்டிருக்கும்! B-)

  ReplyDelete
  Replies
  1. கண்ணெல்லாம் படல மகி, வெயில்தான் படல ! பேட்டியோ முன்னால வரிசையா உயர உயரமா மரங்கள் இருக்கறதால வெயில் வரமாட்டேங்குது. வீட்டுக்குள்ள எல்லாம் வைக்க பிடிக்கல.

   பழைய வீட்டிலும் இப்படித்தான் ஒரு பெரிய மரம் இருந்து வெயில் வராமல் இருந்து, பிறகு ஒருநாள் காத்துல கிளைகள் சில முறிந்து விழுந்ததால, மரத்தையே அடியோடு வெட்டின பிறகுதான் செடிகள் வளர்க்க ஆரம்பித்தேன்.

   Delete
 5. ஆஹா! மிகவும் செழிப்பாக இருக்கே! பொதுவாக திருஷ்டிக் கழிக்க மிளகாயைத் தொங்க விடுவாங்க இல்லையா?!!!! மிளகாய்க்கே மிளகாயா திருஷ்டி கழிக்க!!!!!!!

  நல்ல அறுவடைதான் போங்க!!! சூப்பர். சிவப்பு ரொம்பவே ஈர்க்குது. புகைப்படங்கள் ரசிக்க வைக்கின்றன!!! காரமான பொருள் ஆனால் இனிமையான பதிவு!!!!!

  ReplyDelete
  Replies
  1. அரிசி & உளுந்து கழுவின தண்ணி & வடிகட்டிய டீ தூள் & சின்ன வெங்காயத்தோல் அவ்ளோதான். இதுக்கே சூப்பரா வந்தது.

   பச்சையும் சிவப்புமாய் காய்கள் இருந்தது பார்க்கவே மனதிற்குள் ஒரு சந்தோஷம். வெயில் பிரச்சினை தீர்ந்தால் திருஷ்டி கழித்த மாதிரிதான்.

   உங்களின் கடைசீ வரி ரசிக்க வைத்தது.

   Delete
 6. ஆஹா!!கலர் கண்ணை பறிக்குது... மகி அக்கா சொன்ன மாதிரி சுத்தி போடுங்க.. சட்னி போட்டோ போடாததற்கு ஒரு கர்ர்ர்ர்....
  வத்தல் முயற்சியெல்லாம் பலமா இருக்கும் போலயே? இப்போ எங்களுக்கு விதை வேண்டாம். வத்தல்தான் வேணும்...

  ReplyDelete
  Replies
  1. திருஷ்டி இல்ல அபி, வெயில் பற்றாக்குறைதான். இனிதான் பழுக்க வேண்டும், பழுத்ததும், சட்னி அரைச்சு போடுறேன் :)

   மிளகாயை நல்லா காயவச்சு எடுக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. வெயில் வேற முடியற காலம்வேற நெருங்கவும் பச்சையாவே பறிச்சிட்டேன். அதனால அதனால ....... விதையைவிட வத்தல் விலை ரொம்பவே ஜாஸ்தியாக்கும் :))

   Delete
 7. ஆஹா... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே. பொதுவாகவே வடக்கில் சப்பாத்தி/பராத்தா சாப்பிடும்போது பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது எனக்கும் பழகிவிட்டது! :)

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்திக்கு தயிர், ஊருகாய் எல்லாம் இன்னமும் என்னால நெனச்சே பார்க்க முடியாதபோது பச்சைமிளகாய்னுவேறு இப்போ சொல்லியிருக்கீங்க, ஆச்சரியமா இருக்கு.

   Delete
 8. கர்ர்ர்ர்ர்ர்ர்............
  ஆஹா.. மிளகாய் இப்படி காய்த்திருக்கு. எல்லாரும் சொல்வது மாதிரி சுத்தி போடுங்க. பார்க்க சூப்ப்ப்ப்ப்பரு.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா, உங்க ஊர் வெயில எங்க வீட்டுக்கு கொஞ்சம் திருப்பிவிட்டால் போதும், சமாளிச்சிக்குவேன்.

   ஒரு நாளைக்கு ரெண்டு மூனு மிளகாய்னு சமையலுக்கு பறிச்சும்கூட பழுப்பதை தடுக்க முடியல. பச்சை பசேல் செடியில பழுத்ததும் அழகாதான் இருந்துச்சு.

   Delete
 9. செமயா இருக்கு ...........மிளகாயும் ....படங்களும் ...

  ReplyDelete