Tuesday, February 5, 2013

பரலெ பஞ்ஞானு னுன்னெ...

   
USA வந்த புதிதில் நிறைய காலிங்கார்ட்ஸ்/calling cards வாங்குவேன்.ஊருக்கு எந்நேரமும் ஃபோன் செய்வேன். மரங்களின் இலைகள் பழுத்தாலும் ஒரு ஃபோன்,அதில் ஒன்று கொட்டினாலும் ஃபோன்,பின்பு துளிர்த்தாலும் ஒரு ஃபோன் என என்னுடைய ஃபோன் வருகிறது என்றாலே அவர்கள் அலறிய‌டித்து ஓடும் அளவிற்கு எந்நேரமும் ஃபோனும் கையுமாகத்தான் இருப்பேன்.இப்போதுபோல் வானேஜ்/vonage எல்லாம் கிடையாது. இருந்திருந்தால் அங்குள்ளவர்களின் நிலை என்னவாகியிருக்கும் என  நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருநாள் அது மாதிரி வாங்கிய கார்டுகளில் ஒன்றை பயன்படுத்திப் பார்த்தபோது,அதில் வந்த‌ குரலானது ஆங்கிலத்தில் இல்லாமல் Spanish / ஸ்பேனிஷ்'ஷில்,"பரலெ பஞ்ஞானு னுன்னெ,ப்ரஸுனுனுன்னெ,ஃபார் இங்லெஸ் ப்ரஸ் 2 "என்று வந்தது.முதலில் என்னவென்று புரியவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு 'ப்ரஸ் 2' என்பதை வைத்து 2 ஐ அழுத்தி, மேற்கொண்டு மற்ற கார்டுகள் மாதிரியே இதையும் பயன்படுத்தினேன். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் இந்த வரியைக் கேட்டுக்கேட்டு எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.

அதைவைத்து யாரை ஓட்ட‌லாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது சுந்தர்தான்.அவரிடம் ஒன்றும் சொல்லாமல் ஆஃபீஸ் போகட்டும் என இருந்தேன்.அவரும் கிளம்பிப்போனார்.

என் வீட்டில்(மட்டும்) உள்ளவர்கள் போலவே கொஞ்சம் பேசுவேன் அதாவது மிமிக்ரி செய்வேன்.பிள்ளைகளும்'சித்தி எப்டி சித்தி இதெல்லாம்!அத்த,எப்டி அத்த இதெல்லாம்!"என ஆச்சரியப்படுவர்.அதனால் தைரியமாக செயலில் இறங்கினேன்.சிரித்து சொதப்பாமல் சொல்வதற்கு முயற்சித்தேன்.

ஆஃபீஸுக்கு ஃபோன் செய்தேன்.'ஹலோ' என்றார்.நான் "பரலெ பஞ்ஞானு னுன்னெ..." என்ற இந்த வரியை முழுவதுமாகச் சொன்னேன்.அவர் 'எக்ஸ்க்யூஸ்மீ' என்றார்.நான் மீண்டும் இந்த வரியைச் சொன்னதும் 'ஸாரி' சொல்லி,ஃபோனை வைத்துவிட்டார்.

மீண்டும் டயல் செய்தேன்.எடுத்ததும் அந்த வரியை முழுவதும் சொல்லி முடிக்குமுன்னே மீண்டும் 'ஸாரி' சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

விடுவேனா?'எத்தனை தடவை என்னை ஓட்டியிருப்பார்!மீண்டும் டயல் செய்தேன்.எடுத்தார்.முதல் வார்த்தையைச் சொல்லும்போதே 'ஸாரி' கூட‌ சொல்லாமல் வைத்துவிட்டார்.மீண்டும் இரண்டு முறை டயல் செய்தும் ஃபோனை எடுக்கவில்லை.

ஒரு 1/4 மணி நேரம் கழித்து மீண்டும் டயல் செய்தேன்.எடுத்தார்.நான் அந்த வரியை ஆரம்பிக்க‌வும்,அவர் எதுவுமே சொல்லாமல் பட்டென்று வைத்துவிட்டார். போதும்,இனிமேல் சோதிக்கக்கூடாது என விட்டுவிட்டேன்.

ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது எப்போதும் வீட்டிற்கு ஃபோன் செய்து 'ஏதாவது வாங்கிவர வேண்டுமா?' என்பார்.'வேண்டாம்' என்றாலும் விடமாட்டார்,'யோசிச்சு சொல்லு'என்பார்.எல்லாம் ஒரு பயம்தான், எனக்கில்லீங்க,வீட்டுக்கு வந்தபிறகு போகவேண்டி வந்துவிடுமோ என்றுதான்.

அன்றைக்கும் அப்படியே ஃபோன் செய்தார்.நான் ரிஸீவரை எடுத்தேனே தவிர ஒன்றும் பேசவில்லை. அவரே 'ஹலோ' என்றார்.நான் பதிலுக்கு அந்த வரியைச் சொன்னதும் அவரால் ஏதும் பேச முடியவில்லை,அப்படிச் சிரித்தார்.வீட்டிற்கு வந்தபிறகும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த நிகழ்வை அடிக்கடி நினைத்து சிரிப்போம்.

 ஒருமுறை பள்ளியில்(மகளுக்கு) foreign language  ஒன்று தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலை.அப்போது இவர் 'ஸ்பேனிஷ் எடுத்திடு,ஏதாவது சந்தேகம்னா அம்மாகிட்ட கேட்டுக்கலாம்'என்றாரே பார்க்கலாம்.

26 comments:

 1. Hahaha! Good one Chitra Akka! :))))

  ReplyDelete
  Replies
  1. மகி,உண்மையான சிரிப்பா இது!பாஸ் பண்ணிடுவேனா?

   Delete
 2. சித்ரா,

  hola!

  spanish கற்றுக் கொண்டு விட்டீர்களா?
  நீங்கள். பேசிய வரிக்கு. என்ன தான். அர்த்தம் சொல்லுங்களேன்..
  அதை டாப் சீக்ரெட் ஆக வைத்துள்ளீர்கள்
  நல்ல யதார்த்தமான. பதிவு.
  பாராட்டுக்கள்,
  தொடருங்கள்.
  ராஜி


  Sent from http://bit.ly/itamil

  ReplyDelete
 3. சீக்ரெட் எல்லாம் இல்லைங்க,இன்று வரை அர்த்தம் தெரியாது,அதனால் வந்த சிரிப்புதான்.நான்தான் அந்த வரியைச் சொல்றேன்னு இவரால் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  "பதிவு செய்துள்ள குரல் ஆங்கிலத்தில் வேண்டுமானால் 2 ஐ ப்ரெஸ் செய்யவும்"என நானே நினைத்துக்கொண்டு (அப்படித்தான் என நினைக்கிறேன்)2 ஐ ப்ரெஸ் செய்ததும் மேற்கொண்டு ஆங்கிலத்தில் குரல் வந்துவிட்டது.

  விடிகாலையில் வந்து பின்னூட்டமிட்டு பாராட்டியதற்கு நன்றிங்க‌.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குத்தான் face book ல் friends request invitation அனுப்பியிருந்தேன் என்று நினைக்கிறேன் . வேறு சித்ராவிற்கு அனுப்பிவிட்டேனா ?தெரியவில்லை.

   ராஜி
   Sent from http://bit.ly/itamil

   Delete
  2. ராஜலஷ்மி,

   எனக்கு இன்விடேஷன் வரலிங்க.அதில் எனக்கு அக்கவுண்டும் இல்லை. ஒருவேளை அந்த சித்ராவிற்குத்தான் அனுப்பியிருக்கணும்.

   Delete
 4. 2007-2008-ல நானும் காலிங் கார்ட்தான் யூஸ் பண்ணினேன் சித்ராக்கா..அப்புறம் ரிலையன்ஸ், பிறகு வானேஜ்! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..வந்ததே! :)))

  நீங்க நல்லா மிமிக்ரி பண்ணுவீங்களா? சூப்பரு..ஆனாலும் உங்களவரை இப்படி கலாய்ச்சிருக்கக்கூடாது! ஹஹஹா!

  /பாஸ் பண்ணிடுவேனா?/ இப்படில்லாம் சந்தேகப்படக்கூடாது. வலைப்பூ தொடங்கியாச்சுன்னாலே நீங்க டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிட்டீங்க! கீப் இட் அப்! :))))))

  ReplyDelete
  Replies
  1. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..வந்ததே!"___ஆமால்ல,பத்து நிமி_க்கு மேல பேசக்கூடாதுன்னுட்டு எனக்கு நானே கோடெல்லாம் போட்டு வச்சிட்டு,அதைத் தாண்டிப்போய் 3/4 மணி நேரமாகியிருக்கும். இப்போ வானேஜ் இருப்பதால் தப்பித்தோம்.

   என்னுடைய சகோதரசகோதரிகள் மாதிரி மட்டும் கொஞ்சம்.இது சீக்ரெட், அவங்களுக்கெல்லாம் தெரியாது.

   டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ண விஷயத்த சொன்னதுக்கு நன்றிங்க.

   Delete
 5. பரலெ பஞ்ஞானு னுன்னெ...

  எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த நிகழ்வை அடிக்கடி நினைத்து சிரிப்போம்.

  சிரிப்பை பரவவிட்டதற்கு இனிப்பான பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ராஜராஜேஸ்வரி,

   வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 6. சூப்பர் காமெடி பண்ணியிருக்கீங்க, சித்ரா!
  இன்னொரு வலைத்தளம் ஆரம்பித்ததில் உங்கள் பன்முகத்திறமை எப்படி வெளியில் வரது பாருங்கள்!

  பரலே பஞ்ஞானு னுன்னெ.....!
  கடைசியில் உங்கள் கணவரின் காமென்ட் 'ஸ்பானிஷ் எடுத்திடு..ஏதாவது சந்தேகம்ன்னா அம்மாகிட்டே கேட்டுக்கலாம்...' உங்கள் பதிவுக்கு மகுடம்!

  அகில உலக புகழ் பெற்ற மிமிக்ரி கலைஞராக வளர வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றிங்க.மகி Tr வந்து மார்க்கெல்லாம் கொடுத்திட்டு போனாங்க.HM வந்து அதை உறுதிப்படுத்தியிருக்கீங்க.மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

   நாங்களெல்லாம் வீட்டில் கடை என்பதால் அவர்கள்,பேசுவதைக் கேட்க மட்டுமே முடிந்தது.கேட்டுக்கேட்டு அப்படியே பதிந்தும்விட்டது.வேறு யார் மாதிரியும் வராதுங்க.

   'நோஓஓ பர்ஸனல்' என்றுதான் ஆரம்பித்தேன்.ஆனாலும் அதிலேயே மாட்டிக்கிட்டேன்.எல்லா விஷயத்திலும் சீரியஸா இருந்த என்னைக் கொஞ்சம் மாற்றியதே இவர்தான்.

   Delete
 7. எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html

  ReplyDelete
  Replies
  1. faiza kader,

   அழைப்புக்கு நன்றிங்க.முடிந்தவரையில் போட்டியில் கலந்துகொள்ளப் பார்க்கிறேன்.

   Delete
 8. Replies
  1. gnanaguru,

   its funny to just think about it.

   Delete
 9. ஹாஹாஹா... ;)))))))))

  சூப்பர் சிரிப்பு. ;)

  ReplyDelete
  Replies
  1. இன்று நினைத்தாலும் (பார்த்து அடிபடாமல்) விழுந்துவிழுந்து சிரிப்போம்.

   Delete
 10. epadi irukinga chithrasundar ? hope you and your family members all fine..:)

  ReplyDelete
  Replies
  1. ம் ம் ம்...ஞானகுரு!... எங்கோ கேள்விப்பட்ட பேரா இருக்கே! நாங்க நல்லா இருக்கோம்,விசாரிப்புக்கு நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க?

   நிலையான வேலையும், நல்ல தெளிவான மனநிலையும் அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.

   Delete
  2. im fine chithrasundar..nandri :) enakum romba naal achu en peyarai tamilil parthu ;) nerangal sariya amaivillai...inaiyathiruku vanthu ungal pathivugalai padithu rasika :)

   nilaiyana velai/// athu amaiyavillai, thelivana mananilai/// satru thelivu vanthirkirathu endre kooralam..ungal visaripukum nandri :)

   pin kuripu ;) :
   epavachum vanthu nanga ethachum kirukuvom...posukunu yaaru nu ketrathinga ;) :P

   Delete
  3. சரி, இனி 'யாருன்னுட்டு' யோசிச்சே கேட்கிறேன். முதலில் வேலைதான் முக்கியம். இதை எப்போ வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

   satru thelivu vanthirkirathu endre kooralam ________ மகிழ்ச்சி.

   Delete
 11. முதலில் வேலைதான் முக்கியம்// haha soru than mukkiyam :P ungaludan kalanthuraiyadiyathu enakum mikka makilchi :)

  ReplyDelete
 12. 'soru than mukkiyam' _____ ம் ம் ம் நல்ல்ல்லா வருவீங்க.

  ReplyDelete
 13. அப்பப்பாஆஆ வாசித்து சிரிச்சு வ.வ.வ எனக்கு. இந்த ஆரம்பம் இப்ப நல்லா இம்புரூவ் ஆகி இப்போதைய பதிவுகளில் தெரிகிறது சித்ரா. ப்ளாக் ஆரம்பித்ததால் நகைச்சுவையாக எழுதுவதை சொன்னேன். நல்ல சென்ஸ் ஓப் ஹியூமர். கணவர் சொன்னது செம..

  ReplyDelete
  Replies
  1. இன்றைக்கும் இந்த விஷயத்தைச் சொல்லி சிரிப்போம், ஹா ஹா ஹா !

   இம்ப்ரூவ் ஆகி இருக்கேனா ! பரவாயில்லையே :) நன்றி ப்ரியா.

   Delete