Thursday, March 28, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_2

மகள் கடந்த மூன்று மாதங்களாக‌ புது ஆசிரியையிடம் Flute கற்றுக்கொள்கிறாள்.இதில் ஒரு வகுப்பு மட்டும் அனைத்து மாணவர்களுக்குமானது என்பதால் அந்த ஆசிரியை அவரிடம் பயிலும் ஒத்த வயதுடைய மாணவர்களை குழுகுழுவாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லாதவர்கள். அவரவருக்குரிய Notes ஐ தனித்தனியாக அக்குழுவின் முன்னிலையில் வாசித்துக்காட்ட வேண்டும்.

என் மகளுக்கு கடந்த சனிக்கிழமை எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளியில் காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை மாலையே என்னிடம்,"அம்மா,நாளைக்காலை உணவாக எனக்கு ஒரு வாழைப்பழமும்,1/2 கப் பாலும் போதும்மா"என்றாள்.

பரவாயில்லையே,ஆம்லெட்டிலிருந்து வெளியே வந்தாச்சுபோல‌ என நினைத்து சந்தோஷப்பட்டேன்.(ஆம்லெட் எப்படி உள்ளே வந்தது என அடுத்த பதிவில் சொல்கிறேனே.)

"இனிமேல் இதுதான் காலை உணவா", என்றேன்,சமைக்கும் வேலை மிச்சமாச்சே!என்ற சந்தோஷத்துடன்.

"இல்லம்மா,நாளைக்கு மட்டும்",என்றாள்.

"என்ன,திடீர்னு ஒரு நாளைக்கு மட்டும் ",என்றேன்.

"நாளைக்கு மியூஸிக் வகுப்பில் என்னுடய Notes ஐ play பண்ணும்போது நெர்வஸாக/nervous இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்",என்றாள்.

அதற்கும்,வாழைப்பழத்திற்கும் என்ன சம்மந்தம்?ஒன்றும் புரியவில்லை. பொறுத்துப் பார்த்து கேட்டேவிட்டேன்.

"அதாவது music instruments வாசிப்பவர்கள் கூட்டத்தைப் பார்த்து ஒருவேளை நெர்வஸாகலாம்.வாழைப்பழம் சாப்பிடும்போது அதிலுள்ள பொட்டஷியம் தாது கொஞ்சம் நெர்வஸைக் குறைக்கும் என்பதால்தான்", என்றாள்.விடை கிடைத்துவிட்டது.

ஆனாலும் இன்னொன்று புரியவில்லை.

"இவ்வளவு நாளும் வராத நெர்வஸ் இப்போது மட்டும் வர என்ன காரணம்?", என்றேன்.

"இவ்வளவு நாளும் என்னுடைய ஆசிரியர்கள்,பழகிய மாணவர்கள் உடன் இருப்பார்கள்.இப்போது எல்லா மாணவர்களுமே புதியவர்கள்,அவர்கள் முன்னிலையில் நான் நன்றாக செய்ய வேண்டுமே,அதனால்தான்",என்றாள்.

"இது முன்னமே தெரிந்திருந்தால் ஒவ்வொரு பரீட்சைக்கு முன்னும் குலைகுலையாக வீட்டில் பழுத்துக்கொண்டிருந்த‌ வாழைப்பழங்களை ஒருகை பார்த்திருக்கலாமே",என நொந்துகொண்டேன்.
 ______________  _  ____________________  _   _________________  _  __________________

போன பதிவில் வெளியான‌ புகைப்படம் சனிக்கிழமை காலை நாங்கள் போன பள்ளியில் எடுத்தது.அங்கு நுழைந்ததுமே அதுதான் என் கண்ணில் பட்டது.

என் வீட்டுக்காரர் மகளிடம்,'அம்மாவ பாத்துக்கோ,கேமராவோட‌ குதிச்சிடப் போறாங்க'என்றார்.

ஆனாலும் நான் விடுவதாக இல்லை.மகள் வகுப்பிற்கு போனபிறகு போய் படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேனே.

 'மகள் புராணம்'__தொடரும்.நிம்மதிப் பெருமூச்சு விடலாம்,இன்னும் ஒரு பதிவுதாங்க இருக்கு.


12 comments:

 1. :) I am present..will come with tamil later in the evening! :)

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி மகி.

   Delete
 2. சித்ரா,
  இது உண்மையா? மியூசிக் சம்பந்தமான நெர்வஸ் வாழைப்பழம் சாப்பிட்டால் குறையுமா?
  நல்ல செய்தி ஒன்று உங்கள் மகள் மூலமாக கிடைத்திருக்கிறது.
  நன்றி உங்கள் மகளுக்கு ஒரு அருமையான டிப்ஸ் கொடுத்ததற்கு ,
  அதைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி உண்டு.

  ReplyDelete
  Replies
  1. ராஜலக்ஷ்மி,

   இதை எப்போதோ ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.அது இப்போது இவளுக்குத் தேவைப்பட்டிருக்கிறது.அவள் சொன்னபிறகுதான் எனக்கே தெரியும்.ஆனால் உண்மையா எனத் தெரியவில்லை.ஒருவேளை படபடப்பு குறைய அதிலுள்ள பொட்டாஷியம் உதவலாம்.

   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

   Delete
 3. மகளின் புராணம் நன்றாக இருக்கிறது.
  உங்கள் கணவரின் 'நச்' வசனங்கள் சூப்பர்!
  அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மகளின் புராணத்தைப் பொறுமையாகப் படித்ததற்கு நன்றிங்க.

   "அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்"____தெரிவித்த‌தற்கு "அப்படியே அதை (பாராட்டுக்களை)டாலர்ல மாத்திக்கொடுத்திட சொல்லு",என சொல்லியிருக்கிறார்.

   வருகைக்கு நன்றிங்க.

   Delete
 4. புதிய தகவல்....! தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் புதிய தகவல்தான்.தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிங்க.

   Delete
 5. yappa semma...vaalai palathula iruka pottasium nervous ah koraikum...vidai therinthu konden nu ninga sollum pothu siripu varugirathu...payathudane ketpirgal polum :D vaalai maram iruka veetla ? superb :))

  ReplyDelete
 6. ஞானகுரு,

  வாங்க,எப்படி இருக்கீங்க?

  பயமா?எனக்கா?அப்படின்னா?

  வாழை மரங்கள் ஊரில் இருந்தது.இங்கு வாழை மரங்கள்.. ம்ம்.. இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம்.ஆனால் நான் பார்த்ததில்லை.

  ReplyDelete
 7. im ok thank you...how are you ? பயமா?எனக்கா?அப்படின்னா?/// haha padam neraya parpinga ithan moolam purikirathu :P

  ReplyDelete
  Replies
  1. நலம்!விசாரிப்புக்கு நன்றிங்க.இந்த மூன்று வார்த்தைகளை எழுத சினிமா பார்த்தால்தான் முடியுமா?

   Delete