Wednesday, April 3, 2013

சித்ராசுந்தருக்கும் அவிங்களுக்குமானத் தொடர்பு

ஒரு சில வருடங்களுக்கு முன்பு இங்கு Form/ஃபாரம் ஒன்று பூர்த்தி செய்யவேண்டி வந்தது.அதில் நம் பெயர்,குழந்தை/குழந்தைகளின் பெயர்,பெற்றோர் பெயர் இவற்றுடன் எங்களின் அம்மா & அப்பா வழி தாத்தா பாட்டிகளின் பெயர்களையும் கேட்டிருந்தனர்.

எங்கள் தாத்தாபாட்டிகளின் பெயர்களைக் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்போது (இல்லாத‌) அவர்களைப் பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடியது.

ஒருவருக்கு அதில் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டு,அது தொலைபேசி மூலமாக சரி செய்யப்பட்டது.

இது முடிந்து சில நாட்களிலேயே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களின் நினைவுகளாக,அவர்களது புகைப்படங்கள்,பெயர், கையெழுத்துப் பிரதிகள்,அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போன்றவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பதுபற்றி பேசினார்கள்.

நாம்தான் சொத்தை தவிர வேறு எதையுமே பொக்கிஷமாக நினைக்கமாட்டோமே என்று மனதிற்குள் சிறு வருத்தம் ஏற்பட்டது.

ஊரில் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு தாத்தாபாட்டியின் பெயர் எளிதில் நினைவில் இருக்கும்.யாராவது ஒருவர் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பர்.அல்லது இன்னார்வீட்டு பேரப்பிள்ளை என்பர்.இவை எதுவுமே இங்கு நடக்கப்போவதில்லை.

எனவே ஒரு முடிவுக்கு வந்தேன்.சித்ராசுந்தர்,சித்ராசுந்தர்ஸ்,சித்ரா_சுந்தர், சுந்தர்_சித்ரா என இப்படியே இனி மெயில் ஐடி ஆரம்ப்பிப்பதற்கு பதிலாக என்னுடைய‌ அப்பாஅம்மா,என் இரண்டு வழி தாத்தாபாட்டிகளின் பெயர்களிலும் மெயில் ஐடி ஆரம்பித்தேன்.

இப்படி வந்தவர்கள்தான் உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான செந்தாமரை & கோ.என் பாட்டியின் பெயர் எவ்ளோஓஓ அழகா இருக்கு!!!

இப்போது  இது நன்றாகவே வேலை செய்கிறது.என் மகளுக்கு தாத்தாபாட்டி மட்டுமல்லாமல் கொள்ளு தாத்தாபாட்டிகளின் பெயர்களும் அத்துபடி.

அவர்களின் பெயர்களை எழுதும்போதும்,சொல்லும்போதும் ஒரு மனநிறைவு வருவது உண்மையே.

12 comments:

 1. அருமை... உண்மையான சந்தோசம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வரவுக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சிங்க‌.

  ReplyDelete
 3. அதெல்லாம் சரி, உங்கள் நிஜப்பெயர் என்னங்க?!

  ReplyDelete
  Replies
  1. "அதெல்லாம் சரி, உங்கள் நிஜப்பெயர் என்னங்க?!"______இப்போ சொன்னா மட்டும் நம்பிடுவிங்களா என்ன!

   மகியின் கேள்வியால் ஒரு பதிவுக்கு வழி கிடைத்ததுபோல,உங்க கேள்வியால் இன்னொரு பதிவுக்கு விஷயம் கிடைத்துவிட்டது.

   இதோ போய் ஐடி ப்ரூஃப் எல்லாம் தேடியெடுத்து ஸ்கேன் பண்ணி அடுத்த பதிவை ஒப்பேத்திடுறேன்.

   Delete

 4. What an idea chitraji!

  இது என்ன உங்கள் பெயர் சித்ரா இல்லையோ? ரஞ்சனி கேட்பதைப் பார்த்தால் நான் எதோ ஒரு பதிவை படிக்காமல் விட்டு விட்டேனோ?
  ஆமாம், அடுத்த பதிவு என்றைக்கு?

  ReplyDelete
  Replies
  1. 'மெயில் ஐடி'யால அவங்களுக்கு சந்தேகம்.நம்பமாட்டிங்கிறாங்க.என் பெயர் 'சித்ரா'தாங்க.

   "அடுத்த பதிவு என்றைக்கு?"______பதிவாக்கிடலாமா? அல்லது நேர்ல போய் நிரூபிச்சிடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.

   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

   Delete
 5. ஹஹா! இதானா அவிங்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு? :)

  நானும் என் தாத்தா-பாட்டிகளின் பேரை நினைவு படுத்தி பார்த்துகிட்டேன். நான் பிறக்கும்போது அவங்க 4 பேருமே இல்லை! :-|

  செந்தாமரை- என்ற ஒரு பேரைத்தான் நான் கவனிச்சேன், செந்தாமரை & கோ - என்று நீங்க சொல்லுவதைப் பாத்தா நானும் சிலவற்றை மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கே? ;)

  ReplyDelete
  Replies
  1. "நான் பிறக்கும்போது அவங்க 4 பேருமே இல்லை!"____சப்போர்ட் பண்ண ஆள் இல்லாமப் போனதில் வருத்தமாக உள்ளது.இந்தப் பதிவால அவங்க நினைவு வந்ததில் சந்தோஷம்.

   செந்தாமரை(பாட்டி) பெயருக்குப் பின்னால் வரும் தாத்தாவை நாங்க யாருமே பார்த்ததில்லை.பித்ருக்களின் மனதைக் குளிர்விக்க வேறுவழி தெரியவில்லை.

   நீங்க எதையும் மிஸ் பண்ணல.நான்தான் தாத்தா பெயரை சுருக்கிப் போட்டு (&கோ) சீக்ரெட்டைக் காப்பாற்றியிருக்கிறேன்.

   வருகைக்கு நன்றி மகி.

   Delete
 6. nalla plan panirukinga..finishing touch arumaiya kudukuringa :P அவர்களின் பெயர்களை எழுதும்போதும்,சொல்லும்போதும் ஒரு மனநிறைவு வருவது உண்மையே// unmai :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.வருகைக்கு நன்றி.

   Delete
 7. அன்பின் சித்ரா சுந்தர் ~செந்தாமரை & கோ

  முதலில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பு தொடரபான மின்னஞ்சல் வந்த போது சற்றே குழம்பினேன். பிறகு சரி சரி - பார்த்துக் கொள்ளலாம் என தேற்றிக் கொண்டேன். இப்[ஓழுது ஒரு குழப்பமும் இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. வாழ்த்துகளுக்கும் , உடனடியான கருத்துக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete