பேரு & ஊரு இப்படி எதுவுமே இல்லாம வளாகத்தை சூப்பரா சுற்றிக் காட்டுவேன், பயப்படாஆஆம வாங்க!!
நல்ல தாராளமாக இடையிடையே இடம்விட்டு எங்கும் கட்டிடங்கள். இடையிலுள்ள இடங்களில் எல்லாம் புல்,செடிகள்,மரங்கள் என ஜோராக இருந்தது.
பாதி இடங்களை முடித்த நிலையில்,புது கட்டிடங்களுக்கு மத்தியில் வித்தியாசமான,அந்தக்கால கட்டிடம் ஒன்று இருந்தது. கூடவே சுற்றிலும் ஆங்காங்கே பனைமரம் மாதிரியான மரங்களும் கட்டிடத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நீயா? நானா? என கேட்பதுபோல் வளர்ந்திருந்தன.
அதைப் பார்த்தவுடன் blog fever வந்து க்ளிக்கினேன். அப்பொழுதுதான் நினைவு வந்தது,இவ்வளவு நேரமும் படங்கள் எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று.ஒன்மோர் பதிவிலிருந்து தப்பிச்சிட்டீங்க.
இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து இரண்டு ஆப்ரிக்கன்அமெரிக்கன்ஸ் முதன்முதலாக கிபி 1968_ல் நடந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.அவர்களை honor செய்யும் விதமாக அவர்களின் சிலைகளை வைத்துள்ளனர்.தீண்டாமை உச்சத்தில் இருந்த நாட்களில் இது சாத்தியமானது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
படங்கள் படுஜோர்...
ReplyDeleteநன்றி...
நன்றி தனபாலன்!
ReplyDeleteஅழகான புகைப்படத் தொகுப்பு! அப்படியே எதுக்கு பல்கலைக்கழகம் விஜயம் என்றும் சொன்னா நல்லா இருக்கும்! ;) :)
ReplyDelete'ஸீட்'டு குடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டு போனால்,அதை படிக்கிறவங்களுக்குத்தான் தருவாங்களாம்.நானும் போனேன் என்பதற்கு அடையாளமா ஃபோட்டோவுடன் வந்துவிட்டேன்.
Deleteஎங்க பொண்ணுக்காக போனோம் மகி.
எந்த ஊரு, என்ன பேருன்னு சொல்லாம எங்கியோ கூட்டிக்கிட்டுப் போறீங்க!
ReplyDeleteபத்திரமா கொண்டு வந்து வீட்டுல சேர்த்துடுங்க, சரியா?
பல்கலைக் கழகம் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது மைசூர் மானச கங்கோத்ரிதான். நீங்கள் போட்டிருக்கிறீர்கள் மரங்கள் அடர்ந்த வெளிப்புறங்கள்; அங்கங்கே தெரியும் கட்டிடங்கள் என்று, அப்படித்தான் இருக்கும். படிக்க விரும்பாதவர்கள் கூட இந்தச் சூழலில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
புகைப்படங்கள் அருமை.
Delete"பத்திரமா கொண்டு வந்து வீட்டுல சேர்த்துடுங்க, சரியா?"____வீட்ல விசாரிச்சதுக்கு "நீங்க எங்க வேணா கூட்டிட்டு போங்க,ஆனா சீக்கிரமே கொண்டுவந்து விடக்கூடாது'னு கண்டிஷன் போட்டு சொன்னதாக ஞாபகம்!சும்மா ஜாலிக்கு.
நீங்க சொன்ன மானஸ கங்கோத்ரியை கூகுள் இமேஜில் பார்த்தேன், நல்லாருக்கு.அப்படியே வருகைக்கும் நன்றிங்க.
அப்படி அவரு சொன்னாருன்னு தெரிஞ்சுதான் தும்கூர் வந்துட்டேன்!( இதுவும் சும்மா ஜாலிக்குத்தேன்!)
Deleteநம்பிட்டேன்!!
Deleteஇது என்ன பல்கலைக் கழகம் சித்ரா?
ReplyDeleteலேட்டா வந்ததுமில்லாமல் கேள்வி வேறேயா என்று முனுமுனுப்பது கேட்கிறதே. கொஞ்சம் வேலை. என் பேரன் எப்ப நான் லேப்டாப்பைத் திறந்தாலும் அவனும் வந்து தன் பத்து விரலாலும் கீ போர்டை மூடிக் கொண்டு ஒரு பதிவையும் படிக்க விடுவதில்லை.அவன் தூங்கும் நேரம் பார்த்து இதை எழுதுகிறேன்.
நல்ல அருமையான போட்டோக்கள். அதைவிட "நீயா நானா " மாதிரி இருக்கும் captions
எந்த university என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலிருக்கிறதே!
பேரனோடு ஓடிப்பிடிச்சு,கண்ணாமூச்சு எல்லாம் விளையாடாம....பாவம் அவன் என்ன செய்வான்!!!
ReplyDelete"எந்த university என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போலிருக்கிறதே!"____உங்க அவசரம் புரியாம எவ்வளவு மெதுவா வந்து பதில் போடுறேன் பாருங்க!இப்பவும் சொல்லாட்டி நீங்க முனுமுனுக்க ஆரம்பிச்சிருவீங்க."சேன்ஒஸே (San jose)ஸ்டேட் யுனிவர்சிட்டி"ங்க.
" அதைவிட "நீயா நானா " மாதிரி இருக்கும் captions"______அந்த மரமும்,வித்தியாசமான அந்த பழைய கட்டிடமும்தான் என்னை ஃபோட்டோ எடுக்கத்தூண்டியது.வருகைக்கு நன்றிங்க.