வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இன்று ஒருநாள் மட்டும் ...

ஓ ஓ மரங்களே !
ஓரிரு நாள்களின் அசுர வளர்ச்சியில்
உங்களைவிட உயரம் என இறுமாந்திருந்தேன்,
நிதான வளர்ச்சிதான் நிலையானது என‌
ஓங்கி உயர்ந்து உணர்த்திவிட்டீர்கள்.

சித்ராவின் கைவண்ணத்தால் (காமிரா உதவியால்)
இன்று ஒருநாள் மட்டும்
உங்களைவிட உயரமாக
இருந்துவிட்டுப் போகிறேனே, ப்ளீஸ்!!


சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போனபோது அங்கு வாசலில் இருந்த இந்த அழகான நினைவுத்தூண் என்னைக் கவர்ந்தது. அதன் ஒருபக்கம் நின்று பார்த்தால் முதல் படத்தில் உள்ளதுபோலவும், மறுபக்கம் பார்க்கும்போது அதன்மீது சூரியக் கதிர்கள் பட்டு இரண்டாவது படத்தில் உள்ளதுபோல் தகதக & ஜிகுஜிகு என‌ பளபளப்பாக, பல வண்ணங்களில் ஜொலித்தது அழகாக இருந்தது.

8 கருத்துகள்:

 1. அட, அருமையாக இருக்கிறது .
  உங்கள் கவிதை மட்டுமல்ல உங்கள் கேமிராவின் கவிதையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா வார்த்தைகளை மடக்கிப்போட்டுள்ளேன்,அவ்வளவுதாங்க.

   காமிரா வைத்துக்கொண்டு கொஞ்சம் யோசித்தேன்,எப்படி எடுக்கலாமென. இவங்க ரெண்டு பேரும் சீக்கிரம்சீக்கிரம் என அவசரப்படுத்தினர்.ஒருவழியா நினைத்த மாதிரியே (முதல்படம்) வந்துவிட்டது.பாராட்டுக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. அட! கவிதையிலும் கலக்குறீங்க!
  இனி கவிதைகளையும் எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையெல்லாம் இல்லீங்கோ.வரிகளை உடைத்துப் போட்டுள்ளேன், அவ்வளவுதான்.பாராட்டுக்கு நன்றிங்க.

   "இனி கவிதைகளையும் எதிர்பார்க்கலாமா? "____ புது ப்ளாக் ஆரம்பிக்க சொன்னீங்க, அதுல ஏதாவது எழுத சொன்னீங்க, அடுத்து இப்போது கவிதையா? செய்யுளின் இலக்கணமெல்லாம் படித்ததோடு சரி, ஒன்றும் நினைவில்லை.

   நீக்கு