Thursday, September 5, 2013

மறுபடியுமா !!!

வரலாற்றுப் பாடத்தில் இரண்டு முக்கியமான தேதிகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமானவை. முதலாவதை நினைவுகொள்ளும்போது இன்னொன்றும் கூடவே வந்துபோகும்.அவை சுதந்திர தினமும்,குடியரசு தினமும்.

சின்ன வயதில் இரண்டின் வித்தியாசத்தையும் படித்துத் தெரிந்துகொண்டாலும் புரிந்தும் புரியாததாகவே இருந்தன.

இந்த இரண்டில் ஒன்றின் தேதியைக் கேட்டால் இன்னொன்றையும் சேர்த்து நினைக்காமல் தேர்விலோ அல்லது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போதோ பதில் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

ஒருவாறாக இந்தப் பிரச்சினைகளுடனேயே கொஞ்சம் பெரிய வகுப்பில் அடியெடுத்து வச்சாச்சு.

முதல் நாள் வரலாற்று ஆசிரியரின் வருகையை அனைவரும் எதிர்பார்த்து அமர்ந்திருந்தோம். அவரும் வந்தார்."உலக வரலாற்றைப்பற்றி இந்த வருடம் படிக்கப் போகிறோம்,முதல் நாளே பாடம் நடத்தி உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை,அதனால் இதுவரை படித்த நம் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே" என்று சொல்லி சில‌பல கேள்விகளைக் கேட்டார்.

சிலவற்றிற்கு விடை தெரியவில்லை என்றாலும் சிரித்துப்பேசி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது வகுப்பு.

திருஷ்டி வைத்தாற்போல் அமைந்தது இடையே வந்த ஒரு கேள்வி. "இந்தியாவின் சுதந்திர தினத்தை எப்போது கொண்டாடுகிறோம்?" என்பதுதான் அது.

சிலர் தெரியும் என்றனர்.ஒருசிலர் தெரியாது என்றனர்.தெரியும் என்றவர்களிலும் பாதிபேர் குடியரசு தினத்துடன் சேர்த்து குழப்பினர். அன்றுதான் தெரியும் என்னைப் போலவே பலரின் நிலையும் உள்ளதென்று.

அவ்வளவுதான்,அதுவரை அமைதியாக வகுப்பை கொண்டுபோனவருக்கு வந்ததே கோபம்.

"வருடம் முழுவதும் திங்கள் & வெள்ளிக் கிழமைகளில் கொடி ஏற்றுகிறோம், அதில் இரண்டு நாட்களில் மட்டும் கொடியேற்றி மிட்டாய் கொடுத்து விடுமுறை விட்டு வீட்டுக்கும் அனுப்பி வைக்கிறோம், அப்படிகூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நீங்களெல்லாம் எதுக்கு படிக்க வர்றீங்க‌?" என்றார்.

சுதந்திரதினம் பற்றிய என் குழப்பமெல்லாம் அன்றுடன் அடியோடு காணாமல் போனது. சுதந்திரதினம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது.

அடுத்து குடியரசு தினம் __ இதை நினைவில்கொள்ளவும் ஏதாவது விஷயம் நடந்தாக வேண்டுமே. இனி ஆசிரியர் வந்து யாரையாவது திட்டித்தான் நினைவிலிருத்த வேண்டும் என்ற வயதையெல்லாம் கடந்தாச்சு.

நான் நினைக்கவேயில்லை குடியரசு தினத்தை நினைவில்கொள்ளும் முக்கியமான நிகழ்வு என் வாழ்க்கையில் வருமென்று!

ஆமாங்க,திருமண நாள் குறித்தபோது அது எதேச்சையாக ஜனவரி 26 ல் அமைந்துவிட்டது. (இதன்மூலம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ஒவ்வொரு குடியரசு தினத்துக்கும் நீங்க நினைவு வைத்து எனக்கு வாழ்த்து சொல்ல மறந்துவிடக்கூடாது என்பதுதான் அது)

திருமணத்திற்குப் பிறகு சுதந்திர,குடியரசு தினங்களைக் கேட்டவுடன் யோசிக்காமல் டக்கென்று அதன் தேதிகளை சொல்லுமளவிற்கு தேறி வந்து பல வருடங்களாகிவிட்டது.

ஆனால் சென்ற ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி மாலை ஒரு ஃபோன்கால் செய்யப்போய் எதிர்முனையில் வந்தவர் என்னைக் குழப்பியதில் ரொம்பவே குழம்பிப்போனேன்.

நான் எப்போதும் என்னுடைய சகோதர,சகோதரிகளிடம் பேசுவதைவிட அவர்களின் பிள்ளைகளிடம் பேசவே அதிகம் விரும்புவேன்.(வீட்டில் கடைசி என்பதால் பழக்கதோஷத்தில் இன்னமும் என்னை மிரட்டுகிறார்கள், அவ்வ்வ்வ்)

அப்படித்தான் இந்த வருட சுதந்திர தினத்தன்று மாலை (நம்ம ஊரில் அடுத்த நாள் காலை)என் சகோதரியின் மகனிடம் பேச தொலைபேசியில் அழைத்தேன்.

அவனோ ஃபோனை எடுத்தவுடனே 'சித்தி,வெட்டிங்டே எப்படி போச்சு? என்னென்னெ செஞ்சீங்க?',என்று கேட்டான்.{ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன சந்தோக்ஷம்,பரவாயில்லையே உடன் பிறந்தவர்கள்தான் நான் சமைப்பதை நம்ப மறுக்கிறார்கள்,ஆனால் அவர்களின் பிள்ளைகளாவது நம்புகிறார்களே என்று}

"நல்லாதான் போச்சு,ஆனால் என்ன சமைத்தேன் என்பதெல்லாம் நினைவிலில்லை" என்றேன் சற்று குழப்பத்துடன்.ஆறு மாதங்களுக்கு முன் வந்த திருமண நாளைப்பற்றி இப்போது கேட்க வேண்டிய அவசியம் என்ன?

"என்ன சித்தி இன்னிக்கு செஞ்சது அதுக்குள்ள‌ மறந்துபோச்சா?" என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஒருவேளை முக்கியமான ஒருவரின் திருமண நாளை நான் மறந்துவிட்டேனா என நினைத்து "யாருடைய வெட்டிங் டே, எப்ப வந்துச்சு?" என்றேன்.

"என்ன சித்தி மறந்துட்டீங்களா? சுதந்திரதினம் அன்னைக்குதானே உங்க வெட்டிங் நடந்துச்சு? நாங்கல்லாம் ஸ்கூலுக்கு லீவு போடாமலே லீவு கெடச்சுதே" என்றானே பார்க்கணும்.

நான் எனக்குள்,"மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா !!"

12 comments:

  1. மறுபடியும் குழம்ப ஆரம்பித்து விட்டீர்களா?
    இப்ப நான் கேட்கிறேன்.

    சுதந்திர தினம் என்றைக்கு?
    குடியரசு தினம் என்றைக்கு?
    நினைவு வந்து விட்டதா.....இல்லையா?

    இப்ப உங்களுக்கு நன்றாக நினைவில் கொள்ள ஒரு சின்ன ஐடியா கொடுக்கிறேன். உங்கள் கணவர் மிகச் சரியே என்பார் .சொல்லிப் பாருங்கள் .

    என்ன தெரியுமா அது.......
    குடியரசு தினத்தன்று சுதந்திரம் பறி போனது.....
    உங்களுக்கு இல்லை. உங்கள் கணவருக்கு.
    சரி தானே!

    (கோபித்துக் கொள்ள வேண்டாம்.just for joke.)

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று ஆசிரியை வந்து நல்ல வழி காட்டிட்டீங்க.

      "குடியரசு தினத்தன்று சுதந்திரம் பறி போனது.....உங்களுக்கு இல்லை. உங்கள் கணவருக்கு"____ இது தெரியாமத்தானே இவ்வளவு நாளும் கள்ளம் கபடமற்று(!) இருந்தாச்சு.இனி செயல்படுத்திட வேண்டியதுதான்.

      "உங்கள் கணவர் மிகச் சரியே என்பார் .சொல்லிப் பாருங்கள்"____ சொல்லிப் பார்க்கிறேன், ஆனால் பறிபோனது பேச்சு சுதந்திரமும் சேர்ந்துதானே!

      போங்க, இதுக்கெல்லாம் கோச்சுப்பேனா!! ஜாலியா இருக்கு.

      Delete
    2. போச்சுடா......பேசக் கூட விடுவதில்லையா.......பாவம் சுந்தர் சார்.

      Delete
    3. கேட்டால் பேச்சு சுதந்திரம் இல்லாததே நல்லதும்பார்.பின்னே, சலசலன்னு வர்ற தேவையில்லாத‌ கேளிவிகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் தப்பித்துவிடலாமே.

      Delete
  2. Replies
    1. "ஹா... ஹா...."_____ஹை, எனக்கும் நகைச்சுவை வரும்போல!

      Delete
  3. Replies
    1. ஹை, சமீப கவலையை (கவிதை திருட்டு) மறந்து இமா சிரிச்சுட்டாங்க !!

      Delete
  4. :) உங்க குழப்பம் பலருக்கும் இருக்கும் போலிருக்கே! :)

    மலரும் நினைவுகளை நகைச்சுவையா எழுதியிருக்கீங்க. உங்க மகன் மறுபடி ஆரம்பிக்கிறார் குழப்பத்தை! சூப்பரு..

    இப்பத் தெளிவா நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க பார்ப்போம்!
    1. இந்தியாவின் சுதந்திர தினம் எப்ப? & யு.எஸ்.ஏ.-வின் சுதந்திர தினம் எப்ப?
    2. இந்தியாவின் தொழிலாளர் தினம் எப்ப? & யு.எஸ்.ஏ.-வின் தொழிலாளர் தினம் எப்ப?
    3. யு.எஸ்.ஏ.-வின் ப்ரெஸிடெண்ட் டே எப்ப?
    4. யு.எஸ்.ஏ.-வின் தேங்க்ஸ் கிவிங் டே எப்ப?...எப்ப...எப்ப...எப்ப..அப்பப்பா, சித்ராக்கா வரதுக்குள்ள சேஃப்டி ப்ளேஸுக்கு எஸ்கேப் ஆகிரலாம், விடு ஜூஊஊஊஊஊஊஊட்! :))))))

    ஏஏஏஏஏஏஏஏப்பி வீகெண்ட் சித்ராக்கா! :D

    ReplyDelete
    Replies
    1. படிக்கிற வரைக்கும்தான் இந்தப் பிரச்சினை மகி.ஒருவேளை தேர்வு பயத்தால் இருந்திருக்குமோ!

      வேலை செய்த இடத்தில் வருடத்தின் முதல்நாளே list of holidays எடுத்து வந்து ஒட்டுவாங்க.அதில் மத விடுப்பு(2 days) & உள்ளூர் விடுமுறைகூட(3 days) இருக்கும்.அதன் பிறகு எங்களுக்கு முதல் வேலை என்னவாயிருக்கும்னு நென‌க்கிறீங்க!

      மகள் பள்ளியின் மூலமாக இந்த ஊர் விடுமுறையில் ப ன் னி ர ண் டு வருட எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.விட்டால், லீவுலகூட அப்பாவும் பொண்ணும் ஆஃபீஸுக்கும் பள்ளிக்கும் போய்(திரும்பி)வருவாங்க.ஏதோ என்னால தப்பிச்சுட்டு வர்றாங்க.

      இப்படியான‌ என்னப்பாத்து,என்னப்பாத்து....இந்தக்கேள்வியை எல்லாம்.....krrrr.

      Delete
  5. ராஜியின் காமென்ட் அருமை!
    இரண்டு நகைச்சுவை திலகங்களும் சேர்ந்து கலக்கிட்டீங்க!
    //மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா?// காமெடியின் உச்சகட்டம் இதுதான்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. "குடியரசு தினத்தில் சுதந்திரம் போய்விட்டது" __‍___ அவங்க‌ நல்லா ஞாபகப்படுத்திட்டாங்க.

      வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete