Saturday, October 19, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி

சீஸன் சமயத்தில் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிலிருந்து பருப்புகீரை வாங்கி வருவேன். கீரையை ஆய்ந்து எடுத்துக்கொண்டு, தண்டைத் தூக்கிப்போட்டு விடுவேன்.

அப்படித்தான் ஒருசமயம் கீரையை சமைத்துவிட்டு வழக்கம்போல தண்டை தூக்கியெறிய வைத்திருந்தேன். அடுத்தநாள் காலையில் குப்பையில் போடபோனபோது, தண்டு வாடாமல் சில‌  துளிர்கள் வந்திருப்பதைப் பார்த்து, சரி எதற்கும் நட்டுவைத்துப் பார்க்கலாமே என சும்மாவாவது ஒரு தொட்டியில் சில‌ தண்டுகளை நட்டு வைத்து சிறிது தண்ணீர் தெளித்துவிட்டேன்.


அடுத்த நாளே அழகாக ஒருசில துளிர்கள் வந்திருந்தது. ஒரே சந்தோஷம். நான்கைந்து தண்டுகளுள்ள கீரையே இரண்டு டாலருக்கு வாங்குவேன். அதுவே வீட்டிலேயே வளர்ந்தால்......சந்தோஷம்தானே !

 பருப்புகீரையின் படிப்படியான வளர்ச்சி...


################################################################################

ஷ் ஷ்.... சத்தம் போடாதீங்க,எழுந்திடப் போறாங்க. அதிகாலைத் தூக்கம் சுகமானதுதானே !!.


பகலெள்ளாம் 'பளிச்'னு இருப்பாங்க, இரவானதும் தூங்க ஆரம்பிச்சு, அதிகாலைவரை இப்படியேதான் இருப்பாங்க.

#################################################################################


புத்துணர்ச்சியுடன் நண்பகல் வேளையில்....

################################################################################

அறுவடை குறைவுதான். மார்க்கெட்டில் வராத சமயத்திலும் வீட்டிலிருந்து பறித்துக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறித்து விடுகிறேன்.


################################################################################

அறுவடைக்குப் பின்..........


தோட்டமாக இருந்து நட்டு வைத்திருந்தால் நிறைய பரவியிருக்கும். மேலும் சில தண்டுகள் வந்தால் வேறு தொட்டியிலும் கொஞ்சம் வைத்து வளர்க்க எண்ணம்.

################################################################################

பருப்புகீரை சேர்த்த‌ புலாவ், டேஸ்ட் பண்ணிபாருங்க !!.


################################################################################

8 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி... அதை விட அதில் செய்த புலாவ்...!

    ReplyDelete
    Replies
    1. செய்முறையை விரைவில் போடுகிறேன், செய்து கொடுக்கச் சொல்லுங்கள். கருத்துக்கு மகிழ்ச்சிங்க.

      Delete
  2. பார்ப்பதற்கு மெந்திய கீரை போலிருக்கிறதே.அதைத்தான் பருப்பு கீரை என்கிறீர்களோ?
    வீட்டிலேயே செடிகள் வைத்து வளர்ப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமான விஷயம். உங்களுடன் நானும் சேர்ந்து செடிகளைப் பார்த்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெந்தயக்கீரையில் கசப்பு இருக்கும், இலைகள் மென்மையாக இருக்கும். ஹா ஹா இன்னொரு பதிவுக்கு வழி சொல்லிட்டீங்க.

      பருப்புகீரையில் கசப்பு இருக்காது, இலைகள் கொஞ்சம் பருத்து இருக்கும். சாம்பார், கூட்டு என எது செய்தாலும் சுவைதான்.

      ஆமாங்க,நட்டு துளிர் வரும்போதும், மொட்டு வரும்போதும் அதைப் பார்த்து ரசிப்பதில் ஒரு தனி சுகம். நீங்களும் என்னுடன் சேர்ந்து பார்த்து மகிழ்வதில் எனக்கும் அளவிலா மகிழ்ச்சி.

      Delete
  3. சேத்து வயலாடி நாத்து நட்டு , களைஎடுத்து, அறுவடை செய்து புலாவும் பண்ணியாச்சா?
    கீரை புலாவ் ரெசிபி உங்களுடைய இன்னொரு வலையில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்தையும் சேர்த்து ஒரு வரியில சொல்லியிருப்பது நல்லாருக்கு.

      புலாவ்,சாம்பார் என எல்லாமும் செய்தாச்சு. ரெஸிபியை எழுத சோம்பேறித்தனம். விரைவில் போடுகிறேன்.

      Delete
  4. அடடே..கீரை முளைச்சு புலாவும் செய்தாச்சா? சூப்பர்! புலாவ் கலர்ஃபுல்லா அட்ராக்டிவ்-ஆ இருக்கு சித்ராக்கா! கலக்குங்கோ! :)))

    ReplyDelete
    Replies
    1. "அடடே..கீரை முளைச்சு புலாவும் செய்தாச்சா"________ பலமுறை முளைச்சு பல சமையல் முடிச்சாச்சு. இதுல என்ன ஒன்னுன்னா, அறுவடையின் அளவுதான் குறைவா இருக்கு.ஒருவேளை காசு போட்டு செடி வாங்கியிருந்தா நன்றாக படருமோ என்னவோ.

      'அட்ராக்டிவ்'ஆ இருப்பதன் ரகசிய‌ம் ஃபார்மர்ஸ் மார்க்கெட் 'தக்காளி'தான்.

      Delete