செவ்வாய், 23 டிசம்பர், 2014

இந்தப் பூ, எந்தப் பூ !! ____ 3


மின்னலடிக்கும் பளீர் வெண்மையில் இருக்கும் இந்தப் பூ ... ஹும் ....எந்தப் பூ'வாக இருக்கும் ?                   

ஒரு சின்ன க்ளூ ..... பூவின் நிறமும் விதையின் நிறமும் எதிர்மாறாக இருக்கும். இந்தப் பூவும் அதிலுள்ள எறும்பும் மாதிரியேதான், இது வெள்ளை என்றால் அது கருப்பு. 

செடி முழுவதுமே பயன்பாட்டில் இருந்தாலும்கூட விதையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.

                    இந்தப் பூவுல‌ தேன் இருக்கும்னு அப்பவே தெரியாமப் போச்சே !!

****************************************************************************** 
                          ஹா ஹா, மஹி சொன்னமாதிரி 'எள்ளுப்பூ'வேதாங்க !!
 .
அம்மா வீட்டுத் தோட்டத்தில் எள்ளைப் புடைத்துப் போட்ட இடத்தில் தப்பி முளைத்த செடிகளில் பூத்திருந்த பூக்கள்தான் இந்த அழகிய எள்ளுப் பூக்கள்.

                                              காய் பிடித்திருக்கும் எள் செடி. 
 இந்த கடைசிப் படம் வீட்டுக்காரரிடம் இருந்து கடனாக வாங்கினேன்.

******************************************************************************

32 கருத்துகள்:

 1. எள்ளுப்பூ நாசி பத்தி பேசிப்பேசி தீராது - என்ற வரியைக் கேட்டப்போ எள்ளுப்பூ எப்படி இருக்கும்னு நினைச்சிருக்கேன். பார்க்கத்தந்தமைக்கு நன்றி சித்ராக்கா! :) செடி முழுவதுமே பயன்பாட்டில் இருப்பது என்பதும் எனக்குத் தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஹி,

   படங்களைப் போடும்போது எனக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. செடியுடன் காயையும் கடன் வாங்கி போட்டிருக்கேன் மஹி. இளம்செடி அல்லது இலைகளைக் கசக்கி(கொழகொழன்னு இருக்கும்) தலையில் பூசி குளித்தால் நல்லெண்ணெய் மாதிரியே குளிர்ச்சியாக இருக்கும் என்பார்கள்.

   நீக்கு
 2. வணக்கம்
  அழகிய மலர்கள் அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

   நீக்கு
 3. ஊஹூம்...தெரியவில்லை. வேறு யாராவது சொல்லுவாங்க அப்ப வந்து பார்க்கிறேன். வெண்மை நிறம் மனதை கவருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க, இந்த எள்ளுப் பூவின் நிறமும், அழகும் மனதைக் கவருவதாகவே இருக்கும்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. மீண்டும் வாங்க வாங்க, வருகைக்கும் நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. திருமதி சித்ரா சுந்தர் சூடும் "வெள்ளைப் பூ"

  இல்லையாயின்,
  இதுதான் விடை; வலைப் பூ

  ஹா! ஹா- ஹா! (சிரிப்பு)

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா, 'வலைப்பூ' இதுவும் நல்லாருக்கே ! பின்னூட்டம் சூப்பரா இருக்குங்க. வருகைக்கும் நன்றி புதுவை வேலு.

   நீக்கு
 6. வலைப் பூ நண்பருக்கு,
  வணக்கம்!
  அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
  பங்கு பெற வாருங்கள்
  குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். உங்க வலைப்பூ பக்கத்திற்கும் வருகிறேன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. அழகிய, வெண்ணிறமான இந்தப்பூ 'எள்ளுப்பூ'தாங்க.

   நீக்கு
 8. அழகான எள்ளுப்பூ.முதல்முறை பார்க்கிறேன்.
  இனிய,கறிஸ்மஸ்,புதுவருட நல்வாழ்த்துக்கள் சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   நீங்களும் இப்போதான் முதன்முதலா பாக்குறீங்களா !

   உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய க்றிஸ்மஸ் & புது வருட வாழ்த்துக்கள் !

   நீக்கு
 9. எள்ளுப்பூவை இப்போ தான் பார்க்கிறேன். முதல் படம் ZOOM பண்ணி எடுத்திருப்பதால் நான் ஊமத்தம்பூவோன்னு நினைச்சேன்...:) க்டன் வாங்கின படமும் நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆதி, யாராவது ஊமத்தம் பூ என்றுகூட‌ சொல்லுவார்கள் என்றே நினைத்தேன். 'எள்'ளைத்தான் கடனாக வாங்கக் கூடாது என்பார்கள். இது படம்தானே என்று வாங்கிவிட்டேன்.

   நீக்கு
 10. சித்ரா :) நீங்க போஸ்ட் போட்ட மூணாம் நிமிஷம் வந்தேன் ...ஒரு ஐடியாவும் வர்ல ஓடிபோயிட்டேன் .முத முறை பார்க்கிறேன் எள்ளுபூ அழகு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சலினுக்குத் தெரியும் என்றுதானே நினைத்தேன். உங்க கிராமத்தில் பார்த்திருப்பீங்கன்னு நெனச்சேன். மென்மையான இந்த வெண்ணிற பூ அழகுதான் ஏஞ்சல் !

   நீக்கு
 11. அழகாக உள்ளது எள்ளுப் பூ.. ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சித்ரா சுந்தர் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹும்ம்ம்ம்ம் , எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கே ! நீண்ட நாட்களுக்குப் பிறகான வருகை. மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஞானகுரு. வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. தமயந்தியை நளனிடம் வர்ணிக்கும் போது இந்த திலத்தின் மலர்போன்றாம் தேன் விழியாள் நாசிகையும் என்கிரது அன்னம்.. திலம் என்றால் எள். இந்தப்பூவை ஒன்றினுள் ஒன்றாகச் சொருகி ஒரு குட்டி மலர் வளையம் செய்யலாம். அழகாக வரும்., கிராமத்து விளையாட்டு . அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாக்ஷிமா,

   செய்யுள் வரியை நினைவு வைத்து எழுதியது ஆச்சரியமா இருக்கு. நீண்ட வருடங்களுக்குப் பிறகு நளன், தமயந்தி, அன்னம் இவர்களைப் பற்றியும், தமிழாசிரியைப் பற்றிய‌ நினைவும் வந்தது.

   ஓ, நீங்க இந்தப் பூவுலதான் மலர் வளையம் செய்வீங்களா ! முன்பே தெரிஞ்சிருந்தா நானும் முயற்சித்திருப்பேன். நாங்க தும்பைப் பூவில் செய்து, மலர் வளையம் பற்றியெல்லாம் தெரியாது என்பதால்'முறுக்கு'னு பேர் வச்சிடுவோம்.

   நீக்கு
 13. எள்ளுப்பூ அள்ளுப்பூவாக மனதைக் கொள்ளை கொண்டது! ம்ம்ம் லேட்டாக வந்ததால் சிந்திக்கும் நேரம் இல்லை...விடை தெரிந்துவிட்டதால்...அருமை சகோதரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி கீதா வரும்வரை விடையை சொல்வதாக இல்லை. என்ன, சரிதானே சகோதரி !

   நீக்கு
 14. "அன்பும் பண்பும் அழகுற இணந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!

  வலைப் பூ சகோதரி!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி யாதவன் நம்பி.

   நீக்கு
 15. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி விச்சு.

   நீக்கு
 16. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆறுமுகம்.

   நீக்கு