ஆஹா, இங்கு ஞாயிறு இரவு நல்ல மழை! நேற்றிரவிலிருந்து மீண்டும் மழை. இப்போதுதான் கொஞ்சம் நின்றிருக்கிறது. மீண்டும் வருமாம். நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.
விழும் மழைத்துளி !
விழுந்து தெறித்த நிலையில் !
இலையில் பட்டு அழகிய முத்தாக !
மேலும் சில முத்துக்கள் !
ஹை, இதில் என் உருவம் விழுந்திருக்கிறது !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலே படத்திலிருப்பதும் மழையோடு நெருங்கியத் தொடர்புடையதுதான். சிறுவர்கள்
மட்டுமல்லாது நம்மைப் போன்றவர்களுக்கும் மிகவும் பிடித்தது. இதைக் கண்டதும்
நமக்கெல்லாம் கால்கள் பரபரக்குமே , ........ என்னன்னு சொல்லுங்க, நானும்
நாளையே வந்து சொல்லிவிடுகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதிவின் நீட்சி :
படங்களை அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே வந்தால் என்ன என்பது தெரிந்துவிடும். வீட்டிலுள்ள அறையின் கண்ணாடி வழியே எடுத்தது.
'கவர்ட் பார்க்கிங்'காக இருந்தாலும் உள்ளே தேங்கிய கொஞ்சம் நீரில்(puddle) பக்கத்து குடியிருப்பின் எங்கேயோ உள்ள மரத்தின் நிழல் பட்டு, காற்றில் தண்ணீர் அசைந்து சில நேரம் மாடர்ன் ஓவியம்போல் மாறுவதும் பின் தெளிவதுமாக இருந்தது அழகாக இருந்தது.
விழும் மழைத்துளி !
விழுந்து தெறித்த நிலையில் !
மேலும் சில முத்துக்கள் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பதிவின் நீட்சி :
படங்களை அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே வந்தால் என்ன என்பது தெரிந்துவிடும். வீட்டிலுள்ள அறையின் கண்ணாடி வழியே எடுத்தது.
'கவர்ட் பார்க்கிங்'காக இருந்தாலும் உள்ளே தேங்கிய கொஞ்சம் நீரில்(puddle) பக்கத்து குடியிருப்பின் எங்கேயோ உள்ள மரத்தின் நிழல் பட்டு, காற்றில் தண்ணீர் அசைந்து சில நேரம் மாடர்ன் ஓவியம்போல் மாறுவதும் பின் தெளிவதுமாக இருந்தது அழகாக இருந்தது.
வணக்கம்
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன் பாடல்தான் நினைவுக்கு வந்தது.... படங்கள் அழகாக உள்ளது இறுதியில் சொல்லிய வினாவுக்கான பதிலை நான் எதிர்பார்க்கிறேன்... மற்ற உறவுகளிடம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Deleteஇரண்டு நாட்களாக அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. தரையில் தேங்கிய நீர்தான் அது. வருகைக்கு நன்றி ரூபன்.
ஆகா...! ரசித்தேன்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்,
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி..வருகைக்கு நன்றி.
மழையும் முத்துக்களும் புகைப்படம் அருமை...நாளை வந்து தெரிந்து கொள்ள ஆவல்...வரட்டா....ஹஹஹா..
ReplyDeleteஉமையாள்,
Deleteபொறுமையாவே வாங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
மழைய என்ஜாய் பண்ணறீங்களா? படங்கள் அழகு!
ReplyDeleteகடைசிப்படம் சைட் வாக்-ல தேங்கியிருக்கும் மழைநீர்க்குளம்..அதில் எட்டிக் குதித்து, தண்ணீர்ல தெரியும் பிம்பத்தைக் கலைத்து.. தண்ணீரைத் தெறிக்க ஆசையா இருக்கோ உங்களுக்கு? ;)
இலங்கை ஷேப்ல அழகா இருக்குது தண்ணி!
மஹி,
Deleteஎங்க 'கார் பார்க்'ல இருந்த சின்னஞ்சிறு நீர்க்குளம்/ஏரிதான் இது. தண்ணியத் தெறிக்க ஆசைதான். பொண்ணு ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை ரெண்டு பேருமே போட்டி போட்டுத்தான் தெறித்துவிடுவோம். இப்போல்லாம் மலரும் நினைவுகளோடு பார்ப்பதோடு சரி.
பார்த்ததும் எனக்கும் இலங்கைதான் மனதில் வந்தது.'அண்டை நாட்டு வரைபடம் மாதிரியே' என்றுதான் ஆரம்பித்தேன். பிறகு கலைச்சுட்டேன்.
வா..வ்!!! எல்லாப்படங்களும் சூப்பரா இருக்கு சித்ரா. மழையென்றால், நனைய எனக்கு ரெம்ப பிடிக்கும். அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க. கடைசியின் கேள்வியின் விடை!!!???
ReplyDeleteப்ரியசகி,
Deleteஉங்களை மாதிரியேதான் நானும், மழையில் நனையப் பிடிக்கும். ஊரில் மழை வந்தால்தான் அதில் நனைந்துகொண்டே ஓடிஒடி வேலை செய்வேன். இங்கே ? ........ அப்போதுதான் லாண்டரி போடப் போவதும், ட்ரேஷ் போடப் போவதுமென ஜாலியாக போகும்.
"அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க" _________ பேடியோவில் புதிதாக முளைத்துள்ள புல்பூண்டுகளில் விழுந்த மழைநீர் இலைகளில் பாதரசம் மாதிரி ஒட்டாமல் ஓடுவதைப் பார்த்தபோது ரசித்து எடுத்ததால் இருக்கலாம்.
இந்நேரம் விடை தெரிந்திருக்குமே !
உண்மையிலே அழகுதான் சித்ரா.என்னே ரசனை உங்களது.கைபேசியா!!! துல்லியமா,அழகா இருக்கு. நானும் இலங்கை என நினைத்தேன். சொல்லவில்லை.பாராட்டுக்கள் சித்ரா.
Deleteப்ரியசகி,
Deleteஉங்களுக்கும் இலங்கைதான் நினைவுக்கு வந்ததா ! அச்சு அசலா அப்படியே இருக்கில்ல ! கைபேசிதான். ஒருமுறை தவறி கீழே போட்டும்கூட (அப்போது கவர் போடவில்லை) சமர்த்தா இருக்கு. மீள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
Excellent photos, really i appreciate for your interest keep posting, i love nature. Enjoy the nature and update photos.
ReplyDeleteIts Pure rain water.
Rgds
Rajesh
ராஜேஷ்,
Deleteஉங்கள் முதல் வருகையில் மகிழ்ச்சி & தொடர்ந்து வாங்கோ. பாராட்டிற்கும் நன்றி.
அருமையான படங்கள்...
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.
Deleteகாமிரா உங்க கையில் தவழ்ந்து குதித்து டான்ஸ் ஆடுது சித்ரா :) அத்தனை படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை அழகு அழகோ அழகு !!
ReplyDeleteஅது தேங்கிய தண்ணீரில் விளையாடுவதுதானே கால் பரபரன்னு :) அப்புறம் காகித கப்பல் விடுவது கூட :)
உங்கூர் மழை அழகு எங்கூர் மழை ஊசியா இறங்கும் கர்ர்ர்
ஏஞ்சலின்,
Deleteஇப்போல்லாம் காமிரா எடுப்பதில்லை. அலைபேசியில்தான் எல்லாமும். ஏஞ்சல் அதேதான், puddles ஐப் பார்த்தால் காலால் ஒரு பச்சக், அவ்வளவுதான், அதுல வர்ற சந்தோஷமே தனிதான். ஊர்ல இன்றைக்கும் நிறைய கப்பல் செஞ்சு விடுவோம்.
ஊசியாய் இறங்கும் என்றால் பனிமழையோ !
இலையில் மின்னும் மழைத் துளி சொல்லும் செய்தி ," என்னைப் போலிரு. வாழ்க்கையில் ஒட்டாமல் , ஆசைகளில்லாமல்.."என்று. எனக்கோ அந்த மழைத் துளியின் மேலேயே ஆசை வருகிறது. அது என் தப்பல்ல. அழகாய் புகைப்படம் எடுத்து வெளியீட்ட சித்ராவின் தவறே !
ReplyDeleteநல்ல கருத்துள்ள விஷயத்தை சொல்லியிருக்கீங்க.
Deleteஉங்க பீன்னூட்டம் அழகான ஒரு கவிதை மாதிரியே இருக்கு. பலமுறை திரும்பத்திரும்ப படிச்சிட்டேன், நல்லாருக்கு.
இலை மேல் விழுந்த மழைத்துளியின் பளீர் படத்தைப் பார்த்தால் கவிதை எழுதவேண்டும் போலிருக்கிறது மேடம்!
ReplyDeleteகவிதையை எழுதியிருக்கலாமே. நாங்களும் வாசித்து மகிழ்ந்திருப்போமே.
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.
எல்லோரும் சொல்லியிருப்பது போல மழைத்துளிகள் கவிதை பாட வைப்பது போலத்தான் இருக்கின்றன. puddle உள்ளே இருக்கும் மாடர்ன் ஓவியமும் அருமை.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு மழையைப் பார்த்ததும் வந்த மகிழ்ச்சிதான் படங்களில் உள்ளது. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
ReplyDeleteநானும் மழியின் ரசிகை தான். பள்ளி கல்லூரி நாட்களில் மழையில் நனைந்து கொண்டே வந்து அம்மாவிடம் திட்டு வாங்வேன்...:))
ReplyDeleteஅழகா படம் எடுத்திருக்கீங்க. ஒவ்வொரு துளியும் அற்புதமாக வந்திருக்கு.
ஆஹா! என்ன அருமையான புகைப்படங்கள்!! நன்றாக எடுத்துள்ளீர்கள் மட்டுமல்ல உங்கள் ரசனையும் அருமை! எங்களை ப் போல....மிகவும் ரசித்தோம்!
ReplyDelete