Friday, February 22, 2013

சூரிய அஸ்தமனம்/Sun setting

சென்ற வாரம் ஒருநாள் மாலை,சூரியனின் அஸ்தமன‌க்காட்சி.அடுத்தடுத்து நிறம் மாறிக்கொண்டே இருந்ததால் ஆர்வமாகி எடுத்த காட்சிகள்தான் இவை. எதிரில் இருந்த வீடு மறைத்துக்கொண்டதால் முழுமையான காட்சி கிடைக்கவில்லை.வெளியில் போய் எடுக்கலாம் என்றாலும் நல்ல குளிர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரஞ்சுசிவப்பும்,purple நிறமும் மாறிமாறி வந்ததுதான்.ஒரு கட்டத்தில் அதாவது கடைசியில் purple நிறமே ஆட்கொண்டுவிட்டது.
.
எங்க வீட்டு patio வும்,எதிர் வீட்டுக் கூரையும் போட்டி போட்டுக்கொண்டு காட்சியை மறைத்ததால் மேற்கொண்டு எடுக்க முடியவில்லை.அவ்வ்வ்.ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு மலையின்மேல் ஏஏஏறி!!!நின்று காட்சிகளை பதிவு செய்து வர‌ வேண்டும்.

Tuesday, February 19, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!


எங்ங்கேஏஏ செல்ல்லும்ம் இந்தப்ப் பாஆஆதைஐ!!!...

எனக்குத் தெரியும், பதிவின் முடிவில் உங்களுக்கும் தெரிந்துவிடும்.நடந்து (கடந்து) வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதால் பதிவு செய்து கொள்கிறேன்.

வீட்டிலுள்ளவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க வெளியே கிளம்பியதும் நானும் ஒருமணி நேரம்'வாக்'போக வெளியில் செல்வேன்.வார நாட்களில் ஒரு மணி நேரமும் (சதுர வடிவில்),வார இறுதி நாட்களில் ஒன்றரை மணி நேரமும் (பெரிய சதுரமாகவும்) போவேன்.அந்தந்த சீஸனைப் பொறுத்து நேரத்தையும் மாற்றிக்கொள்வேன். எப்படியிருந்தாலும் அது காலை 7:30 யிலிருந்து 9:30 க்குள் இருக்கும்.

ஒவ்வொரு தெருவிலும் நடப்பவர்களுக்கென sidewalk உண்டு.உடன் யாராவது வந்தால் எவ்வளவு தூரம் நடந்தாலும் நடந்த களைப்பே தெரியாது.

ஒவ்வொரு தெருவும் இப்படித்தான் வளையாமல்,நெளியாமல் நீளமாகப் போய்க்கொண்டே இருக்கும்.நாம்தான் எங்கு வேண்டுமோ அங்கு 'கட்' பண்ணிக்கொள்ள வேண்டும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து நேராக இந்தப் பாதையில் ஒரு 15 நிமி வாக். காலை 9:30 மணி இளம் வெயிலில் பார்க்கவே அழகாக இருக்கும்.


 ஒரு இடத்தில் அப்படியே வலது பக்கம் திரும்பி (நாங்க UPS மாதிரியாக்கும்) ஒரு 15 நிமி 'வாக்'. கீழேயுள்ள இரண்டு படங்களும் ஒரே தெருதான்.இந்தத் தெருவில் மட்டும் வெயில்,நிழலைப் பொறுத்து ஏதாவது ஒரு side walk ஐ  தேர்ந்தெடுத்து நடப்பேன்.                                                
                                                   

             அதேதான் இங்கேயும்.மீண்டும் வலது பக்கம் திரும்பி 15 நிமி 'வாக்'.

மீண்டும் வலது பக்கம் திரும்பி 15 நிமி நடையைக்கட்டினால் வீடு வந்துவிடும்.

தினமும் இவ்வளாவு தூரமெல்லாம் 'வாக்'போய் ஒல்லியா இருப்பேன் என்று நினைத்துப் பொறாமைப்பட்டால்... ஹா ஹா ஹா!!!. ஒருவேளை மருத்துவர் அறிவுரைப்படி 'jogging' போயிருந்தால் அது நடந்திருக்குமோ என்னவோ!

Sunday, February 17, 2013

இயற்கை அழகு!!!


                                            அழகான வெண்மை நிற பூக்கள்!
அதில் ஒன்று!
சூரிய ஒளியில்!
 நிழலில்!
நம்ம ஊர் காகிதப்பூவேதான்!

                                             பூக்களுடன் போட்டிபோடும் செடிகள்!
பூக்களை முழு அளவில் பார்க்க இங்கே கிளிக்கவும்.