பள்ளி வாழ்க்கையை விட்டு விலகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும், நம் ஊரிலிருந்து எவ்வளவு தொலைவில் சென்று தங்கி இருந்தாலும், இன்னமும் ஏப்ரல் & மே மாதங்கள் இரண்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் மாதம் வந்தாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். தேர்வு நடந்துகொண்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கத் தோணாது.
அதுவும் ஏப்ரல் 10 தேதியானால் அவ்வளவுதான், 'இன்னும் ஒன்றிரண்டு நாட்கள்தான், சித்திரை 1 வந்துவிடும்' என சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.
இப்போது புரிந்திருக்குமே நான் எங்கே வருகிறேன் என்று.
ஆமாங்க நம்ம ஊர் கோடை விடுமுறையைத்தான் சொல்கிறேன். நல்லவேளை அந்நாளில் கோடை வகுப்புனா என்னன்னே தெரியாமல் வளர்ந்தாச்சு. இல்லாட்டி, 'கோடை விடுமுறை ஏன்தான் வருகிறதோ!" என்றே வருத்தப்பட்டிருப்போம்.
இதோ மே மாதம் முடியப்போகும் இப்போதும் எனக்குள் தானாகவே ஒரு சோகம் வந்துவிட்டது. அது அடுத்த வாரம் பள்ளி திறந்துவிடுவார்களே என்றுதான் !
என்னதான் புதுத்துணி, புது நோட்டு, புது புத்தகங்கள் என்றாலும் முகம் மட்டும் கொஞ்சம் வாடிப்போய்தான் இருக்கும்.
ஜூன் 1 திங்கள் கிழமையில் வந்தால் அவ்வளவுதான், 'ஒரு வாஆஆரம் தொடர்ந்து போக வேண்டுமே' என்றிருக்கும்.
அதுவே திங்கள் தவிர்த்து மற்ற எந்த நாட்களில் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை.
செவ்வாய் என்றால் கண்டிப்பாக புதன்கிழமைதான் பள்ளி திறப்பார்கள். ஆரம்பத்திலேயே இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.
மற்ற நாட்களில் ஆரம்பிக்குமானால் பிரச்சினையே இல்லை, இரண்டுமூன்று நாட்கள் பள்ளி, உடனேயே விடுமுறை வந்துவிடும் என ஆயிரம் கணக்கு போடுவோம்.
'வெயில் காரணமாக பள்ளி ஒரு வாரம் கழித்து திறக்கப்படும்' என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது ?
இப்படியெல்லாம் பிள்ளைகள் மட்டுமா கணக்கு போடுவார்கள் ? ....... ஹா ஹா ஹா :))))
*************************************************************************************
(பள்ளியில் படித்த காலங்களில் தோழிகளுக்குள் நாங்கள் பேசிக்கொள்வதுதான் இந்தப்பதிவு)