Thursday, February 14, 2013

Six Flags



Penguins

   
                                                                                                                                                  

                                                       Dolphins

                                                  

                                                       Walrus

மீதி படங்கள் அடுத்த பதிவில்...

Sunday, February 10, 2013

எங்கள் ஊர் உழவர் சந்தை


உழவர் சந்தைக்குப் போவதாக இருந்தால் சனிக்கிழமை விடியற்காலமே அதாவது 8:00 மணிக்கே எழுந்து டீ,காபி குடிப்பதாக இருந்தால் குடிச்சுட்டு ரெடியாகி 8:45 க்கு கிளம்பிவிட வேண்டியதுதான்.காலையிலேயே போனால்தான் கூட்டம் குறைவாக இருக்கும்.நேரமாக ஆகக் கூட்டம் சேர்ந்துவிடும்.நேரமானபிறகு போனால் எல்லாக் கடைகளிலும் பெரியபெரிய Q ஆரம்பித்துவிடும்.சீக்கிரமே போனால் சின்ன Q வோடு தப்பிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்புவரை முக்கியமான விசேஷங்களின்போது மட்டும் (Thanksgiving,Christmas,Newyear) அந்த சனிக்கிழமை சந்தை இருக்காது.அதை முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்து விடுவர்.ஆனால் இப்போது (rain or shine) வருடம் முழுவதும் உண்டு.

 இதில் சில கடைகள் வருடம் முழுவதும் இருக்கும்.இங்கு பழங்கள், காய்கறிகள்,கீரைகள்,நட்ஸ்,கிழங்குகள்,தேன்,ஃப்ரெஷ் மீன்,மீட் வரை அந்தந்த சீஸனுக்கு ஏற்றார்போல் வரும்.ஒருசில கடைகள் அந்தந்த சீஸனுக்கு மட்டுமே வரும்,சீஸன் முடிந்ததும் காணாமல் போகும்.

தொடர் வாடிக்கையாளர் என்றால் சில சலுகைகள் உண்டு.அதாவது சாதாரணமாகவோ அல்லது விசேஷ தினங்களின்போதோ நாம் வாங்கும் பொருளுடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போட்டுத் தருவர்.சில கடைகளில் விலையைக் குறைத்தும் கொடுப்பர்.வாராவாரம் நலன் விசாரிப்புகளும் நடக்கும்.

ஒருசில புகைப்படங்கள் மட்டுமே போட்டிருக்கிறேன்.சிலபல காரணங்களால் எல்லாப் படங்களையும் போட முடியவில்லை.வேறென்ன,குளோசப் படங்கள்தான்.

வீட்டில் இருந்து கிளம்பி இதுமாதிரி சிலபல சாலைகளைக் கடந்து செல்ல‌ வேண்டும்.

பார்க்கிங் கிடைப்பது கஷ்டம்.எங்காவது தேடிப்பிடித்து போட வேண்டியதுதான்.

நாங்க எப்போதும் தூரத்திலேயே காரை பார்க் செய்வோம்.பிறகு கார்களைக் கடந்து ஊர்ந்து வரவேண்டியதுதான்.

அதோ டெண்ட்டெண்டாகத் தெரிகிறதே அதுதான் உழவர் சந்தை நடைபெறும் இடம்.

காலை 9:00 மணியிலிருந்து 1.00 மணி வரைதான் மார்க்கெட் இருக்கும். இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

                                        9:00 மணிக்கே வந்ததால் கூட்டமில்லை

                                 
 உழவர் சந்தை நடைபெறும் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள கட்டிடங்களில் புக் ஸ்டோர்,துணி,சாப்பாட்டுக் கடைகள் உண்டு.


பார்ப்பதற்கு நல்ல வெயில் அடிப்பதுபோல் இருந்தாலும் குளிரும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது.


                  கூட்டம் கொஞ்சம்கொஞ்சமாக சேரத்தொடங்கிவிட்டது.


        
 ஒருசில கடைகளைப் பார்த்துக்கொண்டே செல்வோமே.அடுத்த முறை காமிராவுடன் போனால் மேலும் சில கடைகளைப் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
 உழவர் சந்தை முழுவதும் பெரும்பாலும் ஆர்கானிக் பொருள்களாகவே இருக்கும்.


இது பாப்கார்ன் கடை.சூடாகப் பொரித்து உப்பு&தேன் டச்சிங்குடன் சூப்பரா இருக்கும்.சிறிய பை $ 3 .நடுத்தர பை $ 5. பெரிய பை $ 8 .நான் எப்போதும் சிறிய பையுடன் நடையைக்கட்டுவேன்.

                   இந்த சாலை  முழுவதும் ப்ரெட்,சாப்பாட்டுக்கடைகள் தான்.

Tuesday, February 5, 2013

பரலெ பஞ்ஞானு னுன்னெ...

   
USA வந்த புதிதில் நிறைய காலிங்கார்ட்ஸ்/calling cards வாங்குவேன்.ஊருக்கு எந்நேரமும் ஃபோன் செய்வேன். மரங்களின் இலைகள் பழுத்தாலும் ஒரு ஃபோன்,அதில் ஒன்று கொட்டினாலும் ஃபோன்,பின்பு துளிர்த்தாலும் ஒரு ஃபோன் என என்னுடைய ஃபோன் வருகிறது என்றாலே அவர்கள் அலறிய‌டித்து ஓடும் அளவிற்கு எந்நேரமும் ஃபோனும் கையுமாகத்தான் இருப்பேன்.இப்போதுபோல் வானேஜ்/vonage எல்லாம் கிடையாது. இருந்திருந்தால் அங்குள்ளவர்களின் நிலை என்னவாகியிருக்கும் என  நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருநாள் அது மாதிரி வாங்கிய கார்டுகளில் ஒன்றை பயன்படுத்திப் பார்த்தபோது,அதில் வந்த‌ குரலானது ஆங்கிலத்தில் இல்லாமல் Spanish / ஸ்பேனிஷ்'ஷில்,"பரலெ பஞ்ஞானு னுன்னெ,ப்ரஸுனுனுன்னெ,ஃபார் இங்லெஸ் ப்ரஸ் 2 "என்று வந்தது.முதலில் என்னவென்று புரியவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு 'ப்ரஸ் 2' என்பதை வைத்து 2 ஐ அழுத்தி, மேற்கொண்டு மற்ற கார்டுகள் மாதிரியே இதையும் பயன்படுத்தினேன். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் இந்த வரியைக் கேட்டுக்கேட்டு எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.

அதைவைத்து யாரை ஓட்ட‌லாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது சுந்தர்தான்.அவரிடம் ஒன்றும் சொல்லாமல் ஆஃபீஸ் போகட்டும் என இருந்தேன்.அவரும் கிளம்பிப்போனார்.

என் வீட்டில்(மட்டும்) உள்ளவர்கள் போலவே கொஞ்சம் பேசுவேன் அதாவது மிமிக்ரி செய்வேன்.பிள்ளைகளும்'சித்தி எப்டி சித்தி இதெல்லாம்!அத்த,எப்டி அத்த இதெல்லாம்!"என ஆச்சரியப்படுவர்.அதனால் தைரியமாக செயலில் இறங்கினேன்.சிரித்து சொதப்பாமல் சொல்வதற்கு முயற்சித்தேன்.

ஆஃபீஸுக்கு ஃபோன் செய்தேன்.'ஹலோ' என்றார்.நான் "பரலெ பஞ்ஞானு னுன்னெ..." என்ற இந்த வரியை முழுவதுமாகச் சொன்னேன்.அவர் 'எக்ஸ்க்யூஸ்மீ' என்றார்.நான் மீண்டும் இந்த வரியைச் சொன்னதும் 'ஸாரி' சொல்லி,ஃபோனை வைத்துவிட்டார்.

மீண்டும் டயல் செய்தேன்.எடுத்ததும் அந்த வரியை முழுவதும் சொல்லி முடிக்குமுன்னே மீண்டும் 'ஸாரி' சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

விடுவேனா?'எத்தனை தடவை என்னை ஓட்டியிருப்பார்!மீண்டும் டயல் செய்தேன்.எடுத்தார்.முதல் வார்த்தையைச் சொல்லும்போதே 'ஸாரி' கூட‌ சொல்லாமல் வைத்துவிட்டார்.மீண்டும் இரண்டு முறை டயல் செய்தும் ஃபோனை எடுக்கவில்லை.

ஒரு 1/4 மணி நேரம் கழித்து மீண்டும் டயல் செய்தேன்.எடுத்தார்.நான் அந்த வரியை ஆரம்பிக்க‌வும்,அவர் எதுவுமே சொல்லாமல் பட்டென்று வைத்துவிட்டார். போதும்,இனிமேல் சோதிக்கக்கூடாது என விட்டுவிட்டேன்.

ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது எப்போதும் வீட்டிற்கு ஃபோன் செய்து 'ஏதாவது வாங்கிவர வேண்டுமா?' என்பார்.'வேண்டாம்' என்றாலும் விடமாட்டார்,'யோசிச்சு சொல்லு'என்பார்.எல்லாம் ஒரு பயம்தான், எனக்கில்லீங்க,வீட்டுக்கு வந்தபிறகு போகவேண்டி வந்துவிடுமோ என்றுதான்.

அன்றைக்கும் அப்படியே ஃபோன் செய்தார்.நான் ரிஸீவரை எடுத்தேனே தவிர ஒன்றும் பேசவில்லை. அவரே 'ஹலோ' என்றார்.நான் பதிலுக்கு அந்த வரியைச் சொன்னதும் அவரால் ஏதும் பேச முடியவில்லை,அப்படிச் சிரித்தார்.வீட்டிற்கு வந்தபிறகும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த நிகழ்வை அடிக்கடி நினைத்து சிரிப்போம்.

 ஒருமுறை பள்ளியில்(மகளுக்கு) foreign language  ஒன்று தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலை.அப்போது இவர் 'ஸ்பேனிஷ் எடுத்திடு,ஏதாவது சந்தேகம்னா அம்மாகிட்ட கேட்டுக்கலாம்'என்றாரே பார்க்கலாம்.

Saturday, February 2, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜின் தொடர்ச்சி_2

ப்ரிட்ஜின் டவர்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டே,ப்ரிட்ஜைக் கடந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.


உயிருள்ள ப்ரிட்ஜ் அதாங்க ஆள் நடமாட்டமுள்ள ப்ரிட்ஜைப் பார்க்கலாம்.
                       
                                   



மீண்டும் கடகடவென வந்த வழியே திரும்பிவிட‌ வேண்டியதுதான்.

முன்பே சொன்னமாதிரி நடைபயிற்சி செய்வதாக இருந்தால் மட்டும் ஒரு 10 முறை திரும்பத்திரும்பப் போய்ட்டு வாங்க‌.மீண்டும் அடுத்த பதிவுடன் வருகிறேன்...



போகும் வழியில் உள்ள புல், பூண்டுகளிடையே 


இந்த மஞ்ச‌ள் & ஆரஞ்சு கலந்த நிற பூக்கள்











ஆங்காங்கே  பூத்திருப்பது அழகாய் உள்ளது.