புதன், 30 ஜனவரி, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜின் தொடர்ச்சி_1

                                               ப்ரிட்ஜ் உள்ளே நடந்து செல்வோம்.


                                              இப்போ முதல் டவரைத் தாண்டியாச்சு.
                    .


                    ப்ரிட்ஜிலிருந்து பார்க்கும்போது கீழே தெரியும் ஹைவே.


                         ப்ரிட்ஜைவிட்டு வெளியே வரும்போது தெரியும் ரோடு.


இவ்வளவு நேரம்தான் கஷ்டப்பட்டு வந்தோம்.இனி கடகடவென இறங்கிவிட வேண்டியதுதான்.


இந்தப் பாதை முடியும் இடம்வரை போய் திரும்புவோம்.அங்கே நமக்கு ஏற்கனவே அறிமுகமாகி,பழக்கமான ஒரு குடும்பம் நமக்காக‌ வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.வாங்க போய் அவங்களை மீட் பண்ணுவோம்.


ஹலோ!கொஞ்சம் திரும்புங்க.உங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்,.


 இவை  quail  பறவைகளின் சிலைகள்.கலிஃபோர்னியா மாநிலத்தின் பறவை. முதலில் பார்த்தபோது குண்டுகாகம் என நினைத்தேன்.அருகில் போய்ப் பார்த்து கோழியோ என ஒரு முடிவுக்கு வருவதற்குள்,தலையில் சிறு தோகையுடன் மயில் மாதிரியும் தெரிந்த‌து.காடை மாதிரி இருப்பதாக 'மகி' சொன்னாங்க. கலிஃபோர்னியா காடை.இந்தப் பெயரும் நல்லாருக்கு.குடும்பமாக இருக்கும் இவர்களை மேலிருந்து பார்த்து ரசித்துக்(!!!) கொண்டிருக்கும் கழுகு.


                                                                    Profile please.


                          நேரமாச்சு,வாங்க,வந்த வழியேத் திரும்பிப்போகலாம்.


              டவரின்மேல் சூரிய ஒளிபட்டு,பார்க்கவே அழகா இருக்கு இல்ல!

               அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய்ப் பார்ப்போம்.  
        


14 கருத்துகள்:

 1. தனபாலன்,

  பாராட்டுக்கு நன்றிங்க!

  பதிலளிநீக்கு
 2. படங்களும், விளக்கங்களும் அருமை சித்ரா!
  நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. சின்னதாக ஒரு புகைப்பட கதை சொல்லிட்டிங்க!
  ஜோரான ஆரம்பம்! மேலும் மேலும் வளர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சனி,

   பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   'ஜோரான ஆரம்பம்!'__படங்கள் இருந்ததால் எழுத வேண்டிய வேலை இல்லாமல் தப்பித்தேன்.இனிமேல்தானே இருக்கிறது.

   நீக்கு
 3. ஏதோ காமிக் படித்த உணர்வைக் கொடுத்து விட்டீர்கள் சித்ரா.

  நன்றி பகிர்விற்கு.
  பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜலஷ்மி,

   உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.பாராட்டுக்கும் நன்றிங்க.இப்படியே இனி வரும் பதிவுகளும் இருக்குமாறு முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஞானகுரு,

   அதுக்குள்ள முடிச்சிட்டா எப்படி!திரும்பிப் போக வேணாமா?வருகைக்கு நன்றி.

   நீக்கு
 5. நானும் உங்க கூட ஒரு வாக் வந்துட்டு வந்தாச்சு! கழுகு அழகா இருக்குது! ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "நானும் உங்க கூட ஒரு வாக் வந்துட்டு வந்தாச்சு!"___ஐயையோ, எல்லோருமே இப்படி சொன்னா எப்படி!திரும்பி வருவதாக ஒரு பதிவை தேத்தி வச்சிருக்கேன், அதனால 'வாக்' இன்னும் முடியல,தொடரும்...

   நீக்கு
 6. படங்களுக்கு கதை ரஞ்சனி மேடம் சொன்னமாதிரி நல்லா எழுதும் திறன் இருந்திருக்கு. இப்ப அது நல்ல முன்னேற்றம்.நான் ஆரம்பத்திலிருந்து வராது விட்டேனே.சரி இப்பவாவது படித்து பார்த்துக்கறேன்.
  நல்லதொரு வாக். கழுகு,க.காடை நன்றாக இருக்கு. இங்கு கழுகு சைஸி ல் காகம் இருக்கு. அவ்..வ்..வ்.படங்கள் அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரம்பத்தில் போட்ட பதிவுகள். உங்களால எனக்கு மீண்டும் ஒருமுறை இவைகளைப் பார்க்கும் வாய்ப்பு. நன்றி ப்ரியா.

   நீக்கு