விடுபட்ட இடங்களை நிரப்பிக்கொண்டு வந்திட்டேங்க!!
Glue இல்லாமல் மைதா பசை போட்டு ஒட்டியதால, அது காயாம இருந்ததால, கூடவே விநாயகரைக் கவனிக்க வேண்டி வந்ததால வர தாமதமாகிடுச்சு, ஸாரி, ஸாரி.
ஒரு சமயம் சுந்தர் ஒரு கம்பெனியில் சேர்ந்த முதல் நாள், மாலை வீட்டுக்கு வந்ததும் ஆஃபீஸ் கம்ப்யூட்டர், வேலை சம்பந்தமான முக்கிய பேப்பர்களை எல்லாம் உள்ளே வைத்துவிட்டு, ஒருசிலவற்றை எடுத்துவந்து டேபிளின்மீது வைத்துவிட்டு சென்றார்.
அதிலிருந்த இந்த emoticons அட்டை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவ்வளவுதான், அதிலிருந்து பாதியை பிய்த்தெடுத்துக்கொண்டு அங்கிருந்து நான் எஸ்கேப்.
இவர் வந்து அட்டையைப் பார்த்துவிட்டு "ஸ்டிக்கர்ல பாதியைக் காணோம், Bag லதான் கொட்டியிருக்கணும், என்று சொல்லிக்கொண்டே சாப்பிட வந்தார்.
என்னைப் பார்த்ததும் இவருக்கு சிரிப்பு. "பாப்பா செய்ற வேலைய எல்லாம் நீ செஞ்சுட்டிருக்க" என்றார்.
ஆமாங்க, emoticons ல அவர் காணோம்னு சொன்ன ஸ்டிக்கரை எல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிக்கொண்டிருந்தேன். நான் செய்யும் சில வேலைகளை இன்னமும் அவரால் நம்ப முடியாது & புரிந்துகொள்ளவும் முடியாது.
திரும்பிப்பார்த்து படத்துல இருக்கற மாதிரிதான் சிரித்துவைத்தேன்.
இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மகளது முக்கியமான பள்ளி பேப்பர்களின்மீது round table pizza கடையில் இருந்து வரும் advertisement லிருந்து, dentist இடமிருந்து வரும் ஸ்டிக்கர்வரை fridge ல் ஒட்டி வைத்திருப்பேன். இப்போது அவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு இந்த emoticons தான் இருக்காங்க.
எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள பொருள் எப்படி வந்திருக்குன்னு பார்க்கமாட்டேன். முதல் வேலையாக அதிலுள்ள bubble wrap ஐ எடுத்து பபுள்ஸை எல்லாம் வெடித்துவிடுவேன். சிலசமயம் அடுத்த நாளுக்காக சேமித்தும் வைப்பேன்.
இப்படியான என்னிடம் இவ்வளவு ஸ்டிக்கர்ஸ் உள்ள அட்டை வந்தால் சும்மா இருப்பேனா!!
அன்று இரவு மணி 8:30 ஆனது. மகளிடமிருந்து ஃபோன். அப்பார்ட்மென்ட் வாசலுக்கு விரைந்தேன். ஃபோன் வருவதற்கு முன்பே 8:25 க்கெல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிய ஸ்டிக்கரை எல்லாம் மீண்டும் அதற்குரிய அட்டையிலேயே எடுத்துவந்து வைத்துவிட்டேன். மகளுடன் சேர்ந்து மீண்டும் பிரித்தெடுத்து ஒட்டுவதற்காக.
பள்ளியிலிருந்து அப்பார்ட்மென்ட் வாசல்வரை தனியாக வரும் அவள் உள்ளே வருவதற்கு மட்டும் நான் போய் அழைத்துவர வேண்டும். அவ்வளவு பயம்.
நானும்கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். தோட்டம், தெரு என இரவு வரை ஒரு இடம்கூட விடாமல் ஆட்டம் போடும் என்னால் பகலிலேயே வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் மொண்டு குடிக்க பயம். ஹி ஹி, என்னை மாதிரியே மகளும் இருப்பதை நினைத்து பெருமைதான் எனக்கு !
சமயங்களில் எனக்குமே கொஞ்சம் பயம்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் இருந்து உள்ளே நடந்து வரும் வழி நெடுக ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற மின் விளக்குகள் தரையோடு தரையாக இருந்தால் யாருக்குதான் பயம் வராது?
மகள் உள்ளே நுழைந்ததுமே "ஹை,emoticons, வாம்மா ஃப்ரிட்ஜுல ஒட்டலாம்" என்று கிச்சனுக்குள் போனாள். சலிக்காமல் அதே வேலையை மீண்டும் செய்ய நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், "பாருங்க, பாப்பாவும் என்னை மாதிரியேதான் இருக்கிறாள்" என்று சொல்லிக்கொண்டே.
ஃப்ரிட்ஜில் ஒட்டிய இந்த ஸ்டிக்கர்ஸை எல்லாம் ஒரே இடத்தில் இருக்க விடமாட்டேன். அடிக்கடி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம் மாற்றி வைத்துக்கொண்டே இருப்பேன். இன்று வலது மேல் கோடியில் இருக்கும் இவர்கள் அடுத்த நாளே இடது கீழ் கோடிக்கு இடம் பெயர்ந்திருப்பார்கள்.
ஒரு நாள் கூட்டாமாக இருப்பார்கள்,அடுத்த நாளே தனித்தனியாக்கப்படுவார்கள். இப்படியாக இவ்வளவு நாளும் ஃப்ரிட்ஜை ஆக்கிரமித்திருந்தவர்கள், சென்ற ஜூன் மாதம், முதல் வாரத்தில் இருந்து ஃப்ரிட்ஜில் இருந்து காணாமல் போய்விட்டனர்.
மகளுக்கு பள்ளி முடிந்த பிறகு, ஃப்ரிட்ஜில் இனி பேப்பர் ஒட்டி வைக்கும் வேலை இல்லாததால், எல்லாவற்றையும் எடுத்துவிட்டேன். பார்க்க ஃப்ரிட்ஜ் நீட்டா அழகாக இருக்கவும், கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
இப்போது மீண்டும் இவர்களை தூசுதட்டி, ஃப்ரிட்ஜில் ஒட்டலாம் என பதிவு போட்ட அன்று மகளைக் கூப்பிட்டேன். அவள் "நீயே ஒட்டிடுமா" என்றாள்.
மகள் மாறிவிட்டாளோ !!!
மாறாமல் இருப்பது என்னைப் போன்ற, ஹி ஹி உங்களைப் போன்ற ஒருசிலர்தான் போல.
மழைபெய்து முடிந்த பிறகு உள்ள அந்த ஈரமன்ணில் கோடு கிழித்து ஸில்லு விளையாட, தாயம் & பல்லாங்குழி ஆட, ஊஞ்சல் ஆட, புதிர் விடுவிக்க, ஸ்கிப்பிங் விளையாட, ஓடிப்பிடித்து & கண்ணாமூச்சு ஆட, ........ இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!