இக்கோயிலுக்கு நிறைய 'முதன்முதலில்' என்ற பெருமைகள் உண்டு.
இறைவன் கருவறை விமானத்தின் நிழல் பூமியில் விழாதவாறு கட்டியிருக்கிறார்களாம். இதில் தஞ்சை பெரிய கோவிலின் முன்மாதிரியே இந்தக் கோவில்தானாம்.
முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டதும் இங்குதானாம்.
இறைவன் தேரில் வந்ததால் கோயிலின் அமைப்பு தேர் வடிவில் இருக்கிறதாம். தேர் ஏற்பட்ட வரலாறும் இங்குதானாம்.
சூறைத் தேங்காய் பழக்கமும் இங்குதான் முதன்முதலில் ஏற்பட்டதாம்.
பதினாறுகால் மண்டபம்
நடராஜர் மண்டபம்
திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் இங்கு தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது.
திருநாவுக்கரசரின் சூலை நோய்( வயிற்று வலி) நீங்கப் பெற்றதும் இங்குதான். இவருக்கு அம்மையப்பன் திருமணக் கோலத்தில் காட்சி தந்த தளம் இது என்பதால் இங்கு நிறைய திருமணங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சிவலிங்கத் திருமேனி
63 நாயன்மார்களின் அணிவகுப்பு
இந்தப் பக்கமிருந்து ....
பின்னாளில் 'காரைக்காலம்மையார்' என்றழைக்கப்பட்ட 'புனிதவதி அம்மையார்'.
(தொடரும்)
"கூற்றாயினவாறு தேவாரம் " மறக்கமுடியாது. நந்தி,நாயன்மார்களின் அணிவகுப்பு பார்க்கும் போது தஞ்சைகோவில் நினைவு வருகிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் பற்றிய தகவல்கள் உங்கள் பகிர்வால் அறிய முடிந்தது சித்ரா. நன்றி .
ReplyDeleteப்ரியசகி,
ReplyDeleteதேவாரப்பாடல் நினைவுக்கு வந்துவிட்டதா ! இப்பாடலிலேயே அதிகை, கெடிலம்(ஆறு), வீரட்டானம் எல்லாம் வருது பாருங்க. தஞ்சையின் முன்னோடிதானாம் இந்தக் கோயில். வருகைக்கு நன்றி ப்ரியசகி.
அருமையான படங்கள்... போகத் தூண்டுகின்றன....
ReplyDeleteநெய்வேலிப் பக்கம் வந்தா ஒருஎட்டு போய்ட்டு வாங்க. பேருந்து வசதிதான் நிறைய இருக்கே.
Deleteதஞ்சைக் கோவிலின் முன்மாதிரி, பல முதல்கள் என்று புகைப்படங்களும், கோவிலின் வரலாறும் அருமை.
ReplyDeleteதிலகவதி எழுத்துப் பிழை சற்று சரி செய்துவிடுங்கள், ப்ளீஸ்.
பின்னூட்டத்தைப் பார்த்ததும் எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
Delete