Wednesday, March 20, 2013
Saturday, March 16, 2013
Sunday, March 10, 2013
தேன்சிட்டு / Humming bird
சனி & ஞாயிறு 'வாக்' போவதென்றால் எனக்கு ஜாலியோ ஜாலிதான். அப்படித்தான் இன்றும் மாலை 4:00 மணிக்கு வீட்டைவிட்டு வெளியில் வந்தால் அப்பார்ட்மெண்டின் கம்பி வேலியில் அழகான தேன்சிட்டு ஒன்று அமைதியாக உட்கார்ந்திருந்தது.இதுவரை அது உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.
எத்தனையோ முறை முயற்சித்தும் காமிராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை.இன்று வசமாக மாட்டிக்கொண்டது.பலமுறை க்ளிக்கியும் அசையாமல், போஸ் கொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தது.
கம்பியில் மாட்டிக்கொண்டதோ என ஒரு கட்டத்தில் கொஞ்சம் பயம் வந்தது.
Saturday, March 9, 2013
செர்ரி ப்ளாஸம் /Cherry blossom
பெயர்தான் செர்ரி ப்ளாஸமே தவிர இது செர்ரி பழமரம் இல்லை.பூக்கள் பளீர் வெண்மை நிறத்திலும்,சிறிது ப்ரௌன்,மற்றும் பிங்க் நிறத்திலும் பூத்திருப்பதைப் பார்க்கும்போதே ஒரு அழகுதான்.
சென்ற இரண்டு வாரங்களாக இந்த மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரண்டு நாட்களாக பெய்த மழை+காற்றினால் எல்லாப் பூக்களும் கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கின்றன.
நான் எடுத்த சில படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கீழே படத்திலுள்ளது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மரம்.பூக்க ஆரம்பித்த சமயத்தில்...
ஒன்றிரண்டு நாட்கள் கழித்தபிறகு...
மேலும் இரண்டு நாட்கள் கழித்து...
சென்ற வார நிலை...
இன்றைய நிலை...பூக்களின் இதழ்கள் கொட்டிக்கொண்டே ப்ரௌன்+சிவப்பு நிற இளம் துளிர்களுடன்...
சென்ற இரண்டு வாரங்களாக இந்த மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரண்டு நாட்களாக பெய்த மழை+காற்றினால் எல்லாப் பூக்களும் கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கின்றன.
நான் எடுத்த சில படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கீழே படத்திலுள்ளது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மரம்.பூக்க ஆரம்பித்த சமயத்தில்...
ஒன்றிரண்டு நாட்கள் கழித்தபிறகு...
மேலும் இரண்டு நாட்கள் கழித்து...
சென்ற வார நிலை...
இன்றைய நிலை...பூக்களின் இதழ்கள் கொட்டிக்கொண்டே ப்ரௌன்+சிவப்பு நிற இளம் துளிர்களுடன்...
Friday, March 1, 2013
Duck(க்கு)mentary
எங்கள் வீட்டில் கொஞ்சம் rubber ducky கள் உள்ளன.கடந்த மூன்றரை வருடங்களில் ஓவ்வொருவராக எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இப்போதைக்கு எண்ணிக்கையில் 11 இருக்கிறது.கொஞ்சம் தேடிப்பார்த்தால் இன்னும் சிலர் சிக்குவார்கள்.
இனி எங்கு வீடு மாறிப்போனாலும் அவர்களும் எங்களுடனே பயணிப்பார்கள்.அவர்களை நன்றாகக் கழுவித் துடைத்து ஒரு ஸிப்லாக் கவரில் போட்டு பத்திரமாக வச்சாச்சு. தேவைப்படும்போது இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம்.
ரெட் கார்பெட் வரவேற்பு
ஒருசில மாதங்களுக்குமுன் இங்குள்ள பப்ளிக் சானலில் வாத்துகளைப்பற்றி DUCKumentary என்ற தலைப்பில் ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன்.தலைப்பு வித்தியாசமாக இருக்கவும் அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டது.அந்தத் தலைப்பினூடே எங்க வீட்டு டக்குமெண்டரியைக் கொஞ்சம் பார்ப்போமே.
இங்கு High school ல் Marchingband என்ற elective வகுப்பு உண்டு.பிள்ளைகளின் விருப்பம்போல் ஒன்று முதல் 4 வருடங்கள் வரை இந்த வகுப்பில் சேர்ந்திருக்கலாம்.
பள்ளி அமைந்துள்ள ஊர்,அருகிலுள்ள ஊர்களில் நடக்கும் விசேஷங்களில் கலந்துகொண்டு Show,Parade, முதலியவை செய்வார்கள்.மற்ற பள்ளிகளுடன் Competition ல் கலந்துகொள்வார்கள்.நிறைய பள்ளிகள் வந்து செய்யும்போது பார்க்கவே அழகாக இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சிகளும் உண்டு.
இதற்கென சீருடை உண்டு.இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தியபிறகும், நேர்த்தியாக மடித்து வைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் அவர்களுக்கு படத்திலுள்ளதுபோல் ஒரு ரப்பர் டக்கி கிடைக்கும்.பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதற்கு இது ஒரு வழி.பிள்ளைகளுக்கு அது கிடைக்கும்போது அதில் ஒரு ஆனந்தம்.அவர்களின் கடின உழைப்பிற்கான பரிசு இல்லையா!!!
ஒரு வருடம் முழுவதற்குமான சிறப்பு பரிசாக பெரிய டக்கியும்,நான்கு வருடங்களுக்குமாக அதைவிட பெரிய டக்கியும் உண்டு.அந்த இரண்டும் எங்கள் வீட்டிற்கு வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஒவ்வொரு டக்கியின் மேலும்,சுற்றிலும் மகளின் கடின உழைப்பு எப்படி ஜொலிக்குது பாருங்க!எனக்குத் தெரியுது,முயற்சி செய்தால் உங்களுக்கும் தெரியும்.
Subscribe to:
Posts (Atom)




























