Saturday, July 27, 2013

குடை

நாங்கள் 


 மலர்வது,


மழைக்கு மட்டுமல்ல,


நல்ல வெயிலுக்கும் கூடத்தான் !!


Monday, July 22, 2013

Friday, July 19, 2013

கோடை மழை(துளி)


இது இல்லாமல்....... கோடை நிறைவடையுமா சொல்லுங்க‌ !!

இந்த வருடம் கோடை ஆரம்பித்த இரண்டாவது நாளே மேகமூட்டம், அடுத்த‌ நாளே மழை....ஆஹா என்றிருந்தது.

சாதாரண மழை நாட்களிலேயே மழையை விட்டு வைக்க மாட்டேன்.
கோடையில் மழை!, அடுத்தாற்போல் பிசுபிசுக்கும் தூறல் என்றால் சொல்லவா வேண்டும்!

அப்போது எடுத்த கோடை மழைத்துளிதான் இது!



வீட்டு வாசலில், மழையில் குளித்து முடித்து துவட்டிக்கொள்ள அடம்பிடித்த‌ பூக்கள் !!


Wednesday, July 17, 2013

தும்பி / Dragonfly


ஹலோ, பிடிக்க மாட்டேன்னு சொன்னது கையாலதான், காமிராவில் பிடிக்க மாட்டேன்னு சொல்லலையே !!


அட, இது தெரியாமத்தானே வந்து மாட்டிக்கிட்டேன் !!


 சின்ன வயசுல எங்களுக்கு இதுதான் காற்றாடி விமானம் (helicopter).


எல்லா பிள்ளைகளையும்போல எனக்கும் சின்ன வயசுல பட்டாம்பூச்சி , தும்பி இவற்றைப் பிடிக்க (விளையாட, துன்புறுத்த அல்ல) ஆசை. இவற்றின் இறக்கைகளின் மேல் அவ்வளவு விருப்பம். ஆனால் பார்த்து ரசிப்பதோடு சரி, பிடிக்க மாட்டேன்.

பிடிக்காமல் இருந்தது ஏதோ தும்பிக்கும், பட்டாம்பூச்சிக்கும் வலிக்கும் என்பதால் அல்ல, புழு மாதிரியான‌ அவற்றின் உடல் பகுதியைப் பார்த்த பயத்தினால்தான். இன்றும்கூட‌ அப்படியேதான்...

Monday, July 15, 2013

அரளிப் பூ / பட்டிப் பூ


வெள்ளை அரளி...


பிங்க் அரளி...


லைட் பிங்க் அரளி...


செவ்வரளி (அ) சிவப்பரளி


கோடையைக் குளிர்விக்கும் விதமாக கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில், இந்த அரளிப் பூக்கள் இப்போது எங்கும் பூத்துக் குலுங்குகின்றன.

சுவாமிக்கான மாலையில் இந்தப் பூவையும் சேர்த்துவைத்துக் கட்டுவார்கள்.

எங்கள் ஊர் பக்கம் இதை அரளிப் பூ என்றும் பட்டிப் பூ என்றும் சொல்லுவோம். வாசனை இருக்காது. தனி பூவாக‌ தலையில் வைத்துக் கொள்ளமாட்டோம். ஆனால் கதம்பத்தில் வைத்துக்கட்டி விற்கப்படும்போது வாங்கி வைத்துக் கொள்வோம். (இதென்ன லாஜிக்?)

                                   <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்றைக்கு ( 11/16/2013) ......

பூக்களின் எண்ணிக்கை குறைந்து காய்கள் அதிகமாகிவிட்டது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்று (01/31/2014) பார்த்தால்....... செடியில் உள்ள காய்கள் எல்லாம் முற்றிக் காய்ந்து, வெடித்து, உள்ளேயுள்ள விதைகள் எல்லாம் பாராசூட் மாதிரி எங்கும் பறந்துகொண்டிருக்கிறது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

04 / 20 / 14

கடந்த ஒரு வாரமாகவே இங்கே அரளிச் செடியில் மொட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

இன்று இதேபோல் செடி முழுவதும் கொத்துகொத்தாக, கொள்ளை அழகாக‌ பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன.