வெள்ளி, 1 நவம்பர், 2013

இலையுதிர் காலம் !


நான் தினமும் 'வாக்' போகும் வழியில் உள்ள ஒரு மரம் ( Maple tree ) இது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் அது தன்னை மாற்றிக்கொள்ளும் அழகைப் பாருங்களேன் !

இப்போது முதலில் நிறம்மாற ஆரம்பித்திருப்பது இந்த வகை மரங்கள்தான். மற்ற மரங்கள் எல்லாம் 'கப்சிப்' என‌ கையை கட்டிக்கொண்டு வரிசையில் .........

 *********************************************************************************

குளிர் காலத்தில்.......


பட்டுவிட்டாயே என
வெட்டிவிட வேண்டாம்
மீண்டும்
வசந்தகாலத்தின்
வளர்ச்சியைப் பார்க்காதவரை.

*********************************************************************************

வசந்தத்தில்.......


********************************************************************************

கோடையில்..........

*********************************************************************************

கொள்ளை அழகுடன் இலையுதிர் காலத்தில்......(தற்சமயம்)


*********************************************************************************

 குளிர்காலத்தில் காய்ந்துபோய், இனி அவ்வளவுதான் என நினைக்கும்போதே, வசந்தத்தில் துளிர்க்க ஆரம்பித்து, கோடையில் குதூகலமாகி, இலையுதிர் காலத்தில் பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில்.....ஒரு காற்றடித்தால் போதும், மரத்திலுள்ள இலைகள் எல்லாம் தரையில்....சோக‌மாய்.....மரத்துடன் சேர்ந்து நாமும்தான்!

**********************************************************************************

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆமாம்,இப்போ பார்க்கவே அழகா இருக்கு.வருடந்தோறும் வருவது என்றாலும் பழகியதுதானே என விடமுடியவில்லை.வருகைக்கு நன்றி மகி.

   நீக்கு
 2. படங்கள் அருமை...

  இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தனபாலன்.

   நீக்கு

 3. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதிதாசன் ஐயா,

   வருகைக்கும்,வாழ்த்திற்கும்,அழகான கவிதைக்கும் நன்றி.உங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.

   நீக்கு