சென்ற வருடப் பதிவின்போது இந்தப் பூவின் பெயரை உங்களிடமே கேட்டுத்தான் எழுதினேன். ஆனால் இந்த முறை எங்கள் ஊரில் நாங்கள் சொல்லும் பெயரிலேயே எழுதலாமே என விருப்பம்.
போன தடவை இந்தப் பூவை காமிராவில் பிடிப்பதற்குள் ..... அப்பப்பா.... பெரும்பாடுதான். இந்த முறை அலைபேசியிலுள்ள காமிராவின் உதவியால் கொஞ்சம் எளிதாகவேப் பிடித்துவிட்டேன்.
மொட்டாக ....
பூக்கத் தயாராகும் நிலையில் .....
பூக்க ஆரம்பிச்சாச்சூ .....
பாதி பூத்த நிலையில் .....
முழுவதும் பூத்த நிலையில் ..... என்னவொரு அழகு !!
சின்ன வயசுல மெனக்கெட்டு ஒவ்வொரு பூவாகப் பறித்து, அதிலுள்ள தேனை உறிஞ்சுவது வழக்கம். கொஞ்ச நாள் கழித்து காய் வந்து, பழம் பழுத்ததும் மீண்டும் ஓடிப்போய் பழங்களை சுவைப்பதும் வாடிக்கையான ஒன்று.
தொலைக்காட்சி, கணினி இருந்தால்தானே அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடியிருப்போம். அவை இல்லாத நிலையில் பார்க்கும் எல்லாமும் ரசனைக்குரியதாகவே இருந்தன.
இன்றும் இப்பூவைப் பார்க்கும்போது நாங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி அசை போடாமல் நகர மாட்டோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போன தடவை இந்தப் பூவை காமிராவில் பிடிப்பதற்குள் ..... அப்பப்பா.... பெரும்பாடுதான். இந்த முறை அலைபேசியிலுள்ள காமிராவின் உதவியால் கொஞ்சம் எளிதாகவேப் பிடித்துவிட்டேன்.
மொட்டாக ....
பூக்கத் தயாராகும் நிலையில் .....
பூக்க ஆரம்பிச்சாச்சூ .....
பாதி பூத்த நிலையில் .....
முழுவதும் பூத்த நிலையில் ..... என்னவொரு அழகு !!
சின்ன வயசுல மெனக்கெட்டு ஒவ்வொரு பூவாகப் பறித்து, அதிலுள்ள தேனை உறிஞ்சுவது வழக்கம். கொஞ்ச நாள் கழித்து காய் வந்து, பழம் பழுத்ததும் மீண்டும் ஓடிப்போய் பழங்களை சுவைப்பதும் வாடிக்கையான ஒன்று.
தொலைக்காட்சி, கணினி இருந்தால்தானே அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடியிருப்போம். அவை இல்லாத நிலையில் பார்க்கும் எல்லாமும் ரசனைக்குரியதாகவே இருந்தன.
இன்றும் இப்பூவைப் பார்க்கும்போது நாங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி அசை போடாமல் நகர மாட்டோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
//தொலைக்காட்சி, கணினி இருந்தால்தானே அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடியிருப்போம். அவை இல்லாத நிலையில் பார்க்கும் எல்லாமும் ரசனைக்குரியதாகவே இருந்தன.// உண்மையே. கணினியும் டிவியும் நம் ஆசாகுனர்வையும், ரசனையையும் திருடி எடுத்ஹ்டுக் கொண்டு விட்டுப் போய் விட்டனவே
ReplyDeleteஇவ்வளவு விரைவான பின்னூட்டமா !!!!!
Deleteஆமாங்க, நீண்ட நேரம் கதை பேசுவோம், ஊர் சுற்றுவோம். அப்படி இருந்தும் நிறைய நேரம் மீதமிருக்கும். இப்போது இந்த நேரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல !
ஆஹா....! அற்புதம்...!
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
Deleteநாங்க இதை உன்னிப்பூ என்றழைப்போம் :) பழைய பதிவின் லிங்குக்கும் போய் சொல்லிட்டேன்
ReplyDeleteஇந்த செடி இருந்தா பட்டாம்பூச்சிகளுக்கு கொண்டாட்டம் :)கலர் கலரா வரும்
அந்த செடி இல்லை மட்டும் நம்மளை கொஞ்சம் பதம் பார்க்கும் :)
என்ன விலை அழகே !!! ரசிச்சு +ருசிச்சு படம் புடிச்சீங்கன்னு நினைக்கிறேன் :)
ஏஞ்சலின்,
Deleteநம்ம ஊர்லதான் இந்த செடியில முள் இருக்கும். இங்க அப்படி ஒன்னுத்தையும் காணோம். முதல் படத்துல பாருங்க, செடி எவ்ளோ சாதுவா, ஒன்னுமே தெரியாத மாதிரி இருக்கு. ஒருவேளை இங்க 'தேன் உறிஞ்சுறோம், பழம் பறிக்கிறோம்'னு தொந்திரவு பண்ண நம்மள மாதிரி ஆட்கள் இல்லாததாலகூட முள் இல்லாம இருக்கலாம்.
பட்டாம்பூச்சி வருமா தெரியலயே. இனிதான் கவனமா பாக்கணும். எங்க அப்பார்ட்மென்ட்ல மத்த கலர் செடியையெல்லாம் வெட்டிட்டாங்க. இது மட்டும்தான் தப்பியிருக்கு.
நம்ம ஊர்ல பூக்குற பூவாச்சா, அதான் ரசிச்சு & ருசிச்சு படம் புடிச்சாச்சு. வருகைக்கு நன்றிங்க.
வா..வ் இந்த பூ இவ்வளவு அழகா.உங்க படம் மூலம்தான் இப்படி அருகில் பார்க்கிறேன்.
ReplyDeleteசொன்னா நம்பமாட்டீங்க. ஊரில இந்தபூமரம் கேட்(கவனிப்)பாரற்று இருக்கும். பல வண்ணப்பூக்கள். ஆனால் இங்கோ தலைகீழ். விலையும் அதிகம். அலங்காரசெடிகளாக அலங்கரிக்கிறது. நாங்க இதை காட்டுப்பூ என்போம். ஆனாலும் சும்மா சொல்லேல்ல சூப்பரா இருக்கு சித்ரா உங்க மொபைல் போட்டோ.
ப்ரியசகி,
Deleteமுன்பு எங்க வீட்டுக்குப் பின்னால இருக்குற பெரிய வாய்க்காலின் இரண்டு பக்கமும் கலர்கலரா பூத்துக் குலுங்கும். எந்நேரமும் அவற்றைப் பறிக்கிற வேலைதான். இப்போ இருக்கா என்னன்னு தெரியல. போனாதான் போய் பார்க்கணும்.
இங்கும்கூட அலங்காரமா வச்சிருக்காங்க. ஒரு வீட்ல அடர் குங்கும சிவப்பும், அடிக்கிற மஞ்சள் நிறமும் பக்கத்துல பக்கத்துல வச்சி ..... பார்க்கவே மங்களகரமா அம்மன் வந்தது மாதிரியே சூப்பரா இருக்கும்.
கடைசியா நேற்று படத்துல இருக்குற இந்த செடியையும் காலி பண்ணிட்டாங்க. வருகைக்கு நன்றிங்க.
அழகான படங்கள். படிப்படியாக நல்லா எடுத்திருக்கீங்க. இந்த பூவின் பெயர் எனக்கு தெரியல. ஆனா இதோட பழத்தை நானும் சுவைத்திருக்கிறேன் சிறுவயதில் கோவையில் நாங்கள் இருந்த ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் ரோடில் இந்த செடி இருக்கும். நான் அப்போ குட்டி பாப்பா என்பதால் அதை இங்க் பழம் என்று சொல்வேன்.....:)))
ReplyDeleteஆதி,
Deleteஓ, இது உங்களுக்கும் பழக்கமான பூவா !
நீங்க இங்க் பழம்னு சொன்னதும்தான் ஒன்று நினைவுக்கு வருகிறது. நாங்களும் 'அப்பாவின் செலவைக் குறைக்கலாம்' என்ற நல்ல எண்ணத்தில் 'இங்க் பழம்'னு ஒன்னை பறிச்சு சாறு பிழிஞ்சு டீ வடிகட்டிய வீணாக்கி அம்மாவிடம் திட்டு வாங்கியதெல்லாம் உண்டு.
வருகைக்கும், பழைய நினைவுகளைக் கிளறிவிட்டதுக்கும் நன்றிங்க.
அழகான பூக்கள் - பலரின் நினைவுகளை மீட்டெடுக்க உதவியிருக்கிறது உங்கள் பதிவு! :)))
ReplyDeleteஎனக்குத் தான் இந்தப் பூவினை/பழத்தினை பார்த்த நினைவில்லை!
வேலி ஓரங்களில் நிறைய பூத்திருக்கும், கவனிக்காம விட்டிருப்பீங்க ! இந்தப் பூவை எங்கு பார்த்தாலும் பழைய நினைவுகள் வந்து ஒட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன.
Deleteவருகைக்கு நன்றி வெங்கட்.
சிறுவயதில் எங்கள் ஊரிலும் வேலியாரத்தில் இந்தப் பூச்செடிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதற்கு வேறு என்னவோ பேர் சொல்வார்கள். இப்போது நினைவில்லை. அம்மாவைக் கேட்டு சொல்கிறேன். அழகான புகைப்படங்களின் பகிர்வுக்கு நன்றி சித்ரா.
ReplyDeleteஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் போலும். ம் ம் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள். வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
Deleteமஞ்சள் சிகப்பு வண்ணங்களில் மலர்கள் மனம் கொள்ளை கொள்கின்றன. அழகாக படம் பிடித்துள்ளீர்கள் சகோதரி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க தமிழ்முகில்,
Deleteஇப் பூவைப் பார்த்து உங்கள் மனமும் கொள்ளை போனதா !! வருகைக்கு நன்றிங்க.
அழகான பூக்கள்..கருத்துக்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
ReplyDeleteசெடிகளை வெட்டி விட்டார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி!! சரி விடுங்க..பழையன கழிந்து புதுப் பூக்கள் விரைவில் பூக்கும். :)
பி.கு. எங்க அப்பார்ட்மெண்டில் இந்த ஆண்டு செடிகள் மாற்றப்படவே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்!
வேர் மட்டும் மீதமிருக்கு மகி. எப்படியும் அது துளிர் வந்துடும்னுதான் நினைக்கிறேன். செடிய மாத்தாம சிக்கனமா இருக்காங்களாக்கும் !
Deleteவருகைக்கு நன்றி மகி.