இந்த தடவை ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் french purslane என்ற வகை பருப்பு கீரை $ 2:00 க்குக் கிடைத்தது. இதன் இலைகள் கொஞ்சம் சிறியதாகவும், லேசாக சிவந்த தண்டுடனும் இருந்தது.
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை பருப்புக் கீரையை ஆய்ந்துகொண்டு, நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு, தண்டு அத்தனையையும் இரண்டு தொட்டிகளில் நட்டு வைத்தேன்.
துளிர் வருதா பாருங்கோ ......
என்ன அழகு, எத்தனை அழகு ....... !
ஒரு கிண்ண்ணம் கீரை !!
குறைச்சலான விளைச்சல்னு யாரும் நெனச்சிடக்கூடாது பாருங்க, அதனாலதான் கட்டிங் போர்டில் பரப்பி விட்டுள்ளேன்.
மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் ....
பருப்புக் கீரை சாம்பார் வச்சாச்சுங்கோ !! சிக்கன் & பலாக்கொட்டைப் பொரியலுடனும், வாழைக்காயுடனும்(படத்துக்காக பாதி வேகும்போதே எடுத்து வச்சது) சூப்பராவே இருந்துச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை புளிச்ச கீரையிலும் கீரையை ஆய்ந்துவிட்டு, குச்சி முழுவதையும் நட்டு வைத்தேன். இரண்டு வாரம் கழித்து மேலும் ஒரு தொட்டியில் .....
ஒரு பெரிய கிண்ணம் நிறைய கீரை கிடைத்தது.
இதுவும் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் ....
சாப்பிடப் போ றே ன் .... துணைக்கு நீங்களும் வாங்கோ ! பிசைந்து, உருட்டி உருட்டி, உள்ளங்கையில் வைக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை பருப்புக் கீரையை ஆய்ந்துகொண்டு, நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு, தண்டு அத்தனையையும் இரண்டு தொட்டிகளில் நட்டு வைத்தேன்.
துளிர் வருதா பாருங்கோ ......
என்ன அழகு, எத்தனை அழகு ....... !
ஒரு கிண்ண்ணம் கீரை !!
குறைச்சலான விளைச்சல்னு யாரும் நெனச்சிடக்கூடாது பாருங்க, அதனாலதான் கட்டிங் போர்டில் பரப்பி விட்டுள்ளேன்.
மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் ....
பருப்புக் கீரை சாம்பார் வச்சாச்சுங்கோ !! சிக்கன் & பலாக்கொட்டைப் பொரியலுடனும், வாழைக்காயுடனும்(படத்துக்காக பாதி வேகும்போதே எடுத்து வச்சது) சூப்பராவே இருந்துச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை புளிச்ச கீரையிலும் கீரையை ஆய்ந்துவிட்டு, குச்சி முழுவதையும் நட்டு வைத்தேன். இரண்டு வாரம் கழித்து மேலும் ஒரு தொட்டியில் .....
ஒரு பெரிய கிண்ணம் நிறைய கீரை கிடைத்தது.
இதுவும் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் ....
சாப்பிடப் போ றே ன் .... துணைக்கு நீங்களும் வாங்கோ ! பிசைந்து, உருட்டி உருட்டி, உள்ளங்கையில் வைக்கிறேன்.
வீட்டில் பறித்த கீரை, சூப்பர் சுவையில் ......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த இரண்டு கீரைத் தொட்டிகளையும் அடுத்த ஒரு மாதத்துக்கு யார் பார்த்துக்கொள்வது ? பேசாம லண்டனுக்கு ........ முக்கியமா புளிச்ச கீரையை பார்சல் பண்ணிடலாமா !!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வணக்கம்
ReplyDeleteசகோதரி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அப்படியே முகவரி தருகிறேன் அனுப்பிவிடுங்கள்..பாரிசல் வழி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன்,
Deleteசீக்கிரமே பார்சல் வீடு தேடி வரும். 'பாரிசல் வழி' _____ இதுதான் கொஞ்சம் தகராறு செய்கிறது.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
சூப்பர் அக்கா! கீரைகள் அருமையா வந்திருக்கு. நான் புளிச்ச கீரை இதுவரை சுவைத்ததே இல்லை.
ReplyDelete//தொட்டிகளையும் அடுத்த ஒரு மாதத்துக்கு யார் பார்த்துக்கொள்வது ?// பக்கத்தில ஃப்ரெண்ட்ஸ் வீடு இருந்தா கொண்டுபோய் குடுத்திருங்க, 2 தொட்டிதானே! ;) ஆமாம், தக்காளி, வெங்காயம், பூண்டுச் செடிகள்லாம்??! அவ்வ்வ்வ்வ்!!
புளிச்ச கீரையில நல்லெண்ணெய் விட்டு சாதம் கிண்டினா சூப்பரா இருக்கும் மகி.
Deleteமூனாவது வாரமா இங்க பேடியோ வேலை நடக்குது. அப்போ இலைகள் இல்லாத தொட்டி கீழ சாய்ந்து பழுக்க இருந்த ரெண்டு தக்காளியும் ஒடஞ்சு போச்சு. இன்னொன்னுல நாலு தக்காளி, ஒன்னு பழுத்தாச்சு, மத்தது பழுக்கற ஸ்டேஜ்ல. கொஞ்சமே பூக்கள், என செடி அறுவடைடைய முடிச்ச மாதிரி இருக்கு. பூண்டு அறுவடைதான் முடிஞ்சு விதை கூட எடுத்தாச்சே. புது பூண்டு செடி ஒன்னு இப்போ வந்திருக்கு. வெங்காயத் தாள் நல்லாருக்கு. ஏதாவது பண்ணணும்.
புளிச்ச கீரை லண்டனுக்கு பார்சல்....... புரியவில்லை சித்ரா.
ReplyDeleteபருப்புக் கீரையை அப்படியே சாம்பாரில் போட்டு விடுவீர்களா?ஆனாலும் நல்ல கீரை சாகுபடி தான் .
ஓ, அதுவா, புளிச்ச கீரை லண்டன்ல கிடைக்கலன்னு ஒருத்தர் சொன்னதால பதிவிலேயே அனுப்பலாம்னு பார்த்தேன்.
Deleteமுருங்கை கீரைனா புளி ஊத்தாம சாம்பார் இறக்கும்போது போட்டு இறக்கிடுவேன். பருப்பு கீரை கொஞ்சம் திக்கா இருக்கறதால காய் மாதிரி வதக்கி புளி ஊத்தாம எடுத்திடுவேன். நால்ல சாகுபடியுடன் சுவையும் சூப்பரா இருந்துச்சுங்க.
சித்ராக்கா இனிமே யார் வீட்டு விளைச்சலையும் பார்த்து சிரிக்க மாட்டேன் ...காரணம் ..எங்க வீட்ல கொண்ட கடலை அமோக விளைச்சல் ..!!!!!!!!!1 நீங்க சிரிக்க மாட்டேன்னு சொன்னாதான் படம் போடுவேன் ..
ReplyDelete..பருப்பு கீரை பார்க்க குளுமையா இருக்கு ..நானும் சிறு கீரையை நட்டு வச்சிருக்கேன் பாப்போம் :)
btw !! அநியாயத்துக்கு பிளிச்ச கீரையை மிஸ் பண்ணிட்டேன் ஒரு மாதமுன் ..அதுதான் புளிச்ச கீரைன்னு அப்போ தெரில :)
ஏஞ்சலின்,
Deleteநான் இதுவரை கொண்டைகடலை சாகுபடியைப் பார்த்ததே இல்லை. சாகுபடியுடன் அதை வச்சு நீங்க செஞ்ச சென்னா மசாலா, வத்தக்குழம்பு, சுண்டல் என எல்லாத்தையும் சேர்த்துப் போட்டீங்கன்னாதான் நான் சிரிக்காம இருப்பேன், சரியா !
புளிச்ச கீரையை மிஸ் பண்ணினா பரவால்ல விடுங்க, உங்க வீட்டுக்குத்தான் ரெண்டு தொட்டியையும் அனுப்பி இருக்கேன். இந்நேரம் வந்திருக்கணுமே !!
ஹா ஹாஆ :) சித்ரா நீங்க போன வருஷம் ferry யில் அனுப்பின கீரை இந்த வருஷம் வந்து சேர்ந்தது ...குச்சிங்களை நட்டாச்சு ..படம் பகிர்வேன் விரைவில்
DeleteAngelin,
Deleteஹா ஹா :)))) வந்துடுச்சா, அதானே சித்ரா அனுப்பி வராம போகுமா :)
போன கோடையில் ஊருக்குப் போயி வந்து பார்த்தா குச்சி எல்லாம் காய்ஞ்சு போச்சு. போன வாரம்கூட ஃபார்மர்ஸ் மார்க்கெட்ல இருந்து கீரை வாங்கி வந்தேன். மீண்டும் நட்டு வைக்கலாம்னு பார்த்தால் தொட்டி இல்லை, அதனால தூக்கிப் போட்டுட்டேன் :(
படத்தை பார்க்கும் ஆவலில் ......
கீரை விளைச்சல் அமோகமா இருக்கு... ஏஞ்சலின் கொண்டக்கடலை சாகுபடிய போடுங்க. நானும் பார்த்ததே இல்லை.
ReplyDeleteஆதி,
Deleteஆமாங்க, அதுக்குள்ளே பருப்புக்கீரை அடுத்த அறுவடைக்குத் தயாராயிடுச்சு. ஒரு சிறு கொத்து $ 2:00 க்கு வாங்குவேன். இப்போது ஒரு வாரத்திலேயே மீண்டும் அறுவடைக்கு !
ஏஞ்சலின், சீக்கிரமே வந்து எங்க கோரிக்கையை நிறைவேத்துங்க.