இளமதி சீக்கிரமா ஓடி வாங்கோ. இனி உங்களைப் பார்த்து எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். உங்களின் அழைப்பை பூர்த்தி செய்துவிட்டேன் என்ற தைரியத்தில்தான் இதெல்லாம்.
மகி, பொருத்தருள்க. ஊருக்குப் போய் வந்த பிறகு உங்களின் அழைப்பான 'என் வீட்டு பொக்கிக்ஷங்களை' எடுத்து வருகிறேன்.
=============================================================
சாய்ஸ் கொடுத்து எழுதச் சொன்னாலே நானாகவே கொஞ்சம் சாய்ஸ் எடுத்துக் கொண்டுதான் எழுதுவேன். இப்படி சாய்ஸே இல்லாமல் 10 கேள்விகளுக்கும் பதிலளிக்கச் சொன்னால் எப்படிங்க ?
1) சரியானதைத் தேர்வு செய்க, 2) கோடிட்ட இடத்தை நிரப்புக, 3)பொருத்துக, 4) சரியா ? , தவறா ? என இருந்திருந்தால் ...... ஹும்......எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் !
சீரியஸான பதில் எல்லாம் இல்லீங்க. நீங்களும் ஜாலியாவே எடுத்துக்கோங்க.
================================================================
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
இப்போது போலவேதான். நான் கொண்டாடியதெல்லாம் இல்லீங்க.
மகளின் முதல் வகுப்பிலிருந்து எனக்காக வாழ்த்து அட்டைகள்(popup cards) தயார் செய்வாள். இந்த வருடம் தயாரித்த வாழ்த்து அட்டை இது :) இந்த வாழ்த்திற்காகவே ஆயிரமாவது பிறந்த நாளைக்கூட கொண்டாட நான் தயார்.
==========================================================
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
இது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
=============================================================
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
வீட்டுக்காரரையும், மகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ? எந்நேரமும் சிரிப்பொலிதான்.
==============================================================
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
இதற்கு வாய்ப்பில்லை. இருந்தால் மின்சாரத்தின் அருமை தெரியவரும்.
ஊரில் என்றால் சகோதர, சகோதரிகளுடன் வெளியில் அமர்ந்து கதைகதையாய் பேசி சிரிப்போம்.
===============================================================
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
பார்த்துதானே வளர்கிறாள், அதனால் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது என்றே நினைக்கிறேன். அப்படியே சொல்ல வேண்டுமானால் உறவின் முக்கியத்துவத்தை சொல்லுவேன்.
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
பசி & கல்வி
================================================================
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
அப்பா, அம்மா:( விற்குப் பிறகு வீட்டுக்காரரிடம்.
================================================================
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இருக்குற பிரச்சினையில "யார்? என்ன சொன்னாங்க?" என தேடிப்போய் பார்க்கும் எண்ணமெல்லாம் இல்லை.
============================================================
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
என்ன சொல்லித் தேற்றுவது ? நான் இயல்பு நிலைக்கு வரவே சில காலம் பிடிக்கும் ...... பிடிக்கவும் செய்தது :(
=========================================================
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
பிடிக்காத ஒன்று தனிமை.
===========================================================
ம்ம்ம்ம் ...... அதுக்குள்ள கேள்விகள் முடிஞ்சு போச்சா ! இதுக்கா இவ்ளோ நாள் இழுத்தடிச்சேன் !
இவ்வளவு நேரமும் பொறுமையா படிச்சதுக்கு இந்தாங்க கரகர மொறுமொறு எல்லடை. சாப்டுட்டே 100/100 மதிப்பெண் போட மட்டும் மறந்துடாதீங்க :)
விருப்பமுள்ளவங்க தொடருங்கோ !!
100/100! :)
ReplyDeleteஎங்கே? ஏற்கனவே நான் போட்ட கமெண்ட் ?
Deleteரொம்பரொம்ப நல்ல்ல்ல டீச்சர்.
சிம்பிள்&சூப்பர் உங்கள் பதில்கள். முதலில் மகளுக்கு என் பாராட்டுக்கள்&வாழ்த்துக்கள். கார்ட் அவ்வளவு அழகாக செய்திருக்கிறாங்க. 10வது பதில் எனக்கும் விருப்பமில்லாததொன்று. ஆனால் இங்கு அதுதான் நிஜம். எல்லடை நன்றாக இருக்கு. நன்றி.
ReplyDeleteப்ரியசகி,
Deleteவாங்க, எனக்குதான் கைவினைகள் எல்லாம் வருவதில்லை. மகளுக்கு மிகுந்த விருப்பம். பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சொல்லிவிட்டேன் :)
ஊரில் நான் பெரியபெரிய கூட்டத்துடனேயே இருந்துவிட்டபடியால் இங்கு வந்த புதிதில் இந்தத் தனிமை முதலில் புரியாத ஒன்றாய்த்தான் அறிமுகமானது. ஊருக்குப் போனால் போதும், அந்தத் தெரு முதல் ஊர் முழுவதுமே தெரிந்தவர்களால் நிறைந்திருக்கும்போது .... "சித்ரா எப்போ வந்த?" என கேட்கும்போது ....... ஆஹா, அது ஒரு இன்பம். இந்த நிஜம் உங்களுக்கும் உண்டு எனும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
பதில்களை மட்டுமல்லாது எல்லடையையும் சுவைத்ததற்கு நன்றிங்க.
அட... அட... அட...! பின்னிட்டீங்க சித்ரா!...:)
ReplyDeleteஅத்தனை கேள்விக்கும் டாண் டாண்ன்னு பதில் சூப்பர்!
மனதைத் தொட்ட, விட்டகலாத நிகழ்வுகள், நினைவுகள் எம்முடன் கூடவே இருக்கும்...
நானும் இன்னும் அவ்வப்போது அவ்வகையிலே கிடந்துழல்கிறேன்.
எதுவும் செய்யவே பிடிப்பில்லாமல் போகிறது.
உங்களைப் பார்த்து நான் கற்றுக் கொள்ள நிறைய உண்டு சித்ரா!..
பதில்கள் அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள்!
அதென்ன கடைசியில் பொன் வண்ண நிறத்தில் கண்களை அங்கே இங்கே
பார்க்க விடாமல் அதிலேயே நிலை குத்தி நிற்ற வைச்சிருக்கீங்க...:)
பெயர் & ரெஸிப்பி பிளீஸ்ஸ்ஸ்...:)
அன்பு நன்றியுடன் வாழ்த்துக்கள் சித்ரா!
இளமதி,
Deleteஉங்களுக்கு ஏற்பட்ட அதே இழப்புதான் மே மாதத்தில் எனக்கும் . அதிலிருந்து வெளியில் வர முடியாமல்தான் உழன்றுகொண்டிருக்கிறேன் :((
அதுவா, 'எல்லடை'. 'தட்டடை'ன்னுகூட சொல்லுவாங்க. அதன் நிறம் மாதிரியே சுவையும் சூப்பரா இருக்கும். ரெஸிபி இங்கே http://chitrasundar5.wordpress.com/2010/09/14/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88/ இருக்கு பாருங்க. செய்துட்டு வந்து சொல்லுங்க.
உங்களின் வெண்பா பதில்களுக்கு முன்னால் இதெல்லாம் சும்மா.
வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிங்க.
தட்டை ரொம்ப நல்லா இருந்தது.... எடுத்து சாப்பிட்டேன்......
ReplyDeleteஅட சொல்ல மறந்துடப் போறேன்! - கேள்விக்கான பதில்கள் நன்று!
தட்டையை சாப்பிட்டுவிட்டு மறக்க்க்காமல் பதிலைப் பற்றியும் கமெண்டியதற்கு நன்றிங்க வெங்கட்.
Deleteஅனைத்து பதில்கள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
தனபாலன்
Deleteபாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
உங்கள் பதில்கள் அழகா தட்டை சுவையா என்று பட்டிமன்றமே நடத்தி விடலாம். அத்தனை சுவையான பதில்கள். அழகான........ சாரி சுவையான தட்டைக்கும் நன்றி சித்ரா.
ReplyDeleteசொல்ல மறந்துட்டேனே. நீங்கள் நூறு வாங்கி விட்டீர்கள் " நான் பாஸ் " செய்தேனா என்று பார்த்து சொல்லுங்களேன் சித்ரா.
வாங்க ராஜலக்ஷ்மி,
Deleteஆஹா, அப்புறமென்ன, நீங்களும் நூறு போட்டுட்டீங்களா ! மகிழ்ச்சி. இருங்க இருங்க அங்கு வரேன், வந்து பாஸ் மார்க் என்ன 100/100 கொடுத்திடுறேன். ஹை இந்த விளையாட்டும் நல்லாத்தான் இருக்கு !
பிடித்தமான நொறுக்ஸ் என்பதால் தட்டை அழகாகவும் வந்துவிட்டது. சுவைத்ததற்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
தங்களின் பதில்களைக் கண்டு மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி .தங்களின்
ReplyDeleteசெல்ல மகளின் கை வண்ணத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் !
வாங்க அம்பாளடியாள்,
Deleteதங்கள் வரவுக்கு நன்றி. பதில்களை ரசித்ததற்கும், வாழ்த்துக்கும், மகளுக்கான பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
சுவையான பதில்கள். நிச்சயம் நூற்றுக்கு நூறு தான்.
ReplyDeleteதட்டை கண்களை விட்டு அகலவில்லை. சுவையும் பிரமாதம். அம்மா இருந்தவரை அவரின் கையால் செய்த தட்டைகளை ஆசை தீர ருசித்திருக்கிறேன்.....:(
ஆதி,
Deleteமுழு மதிப்பெண்ணுக்கு நன்றிங்க.
எளிதான செய்முறைதானே. ஒருதடவ செஞ்சு ருசிச்சுப் பாருங்க. பிறகு நீங்களே திரும்பத்திரும்ப செய்வீங்க பாருங்க.
ஸ்ஸ்ஸ் :) எக்சாமுக்கு படிக்கும்போது இப்படி நொறுக்கு வச்சா ??? :)) கேள்வி பதிலுக்கு முன்னாடி கண்ணை பரிசு இழுக்குது எள்லடை :)
ReplyDeleteஎல்லா பதில்களும் நறுக் கருக் மொறுக் எள்ளடை மாதிரியே :))ருசியா இருக்கு
ஏஞ்சலின்,
Deleteஓ, இப்பத்தான் படிச்சு இனிமேதான் தேர்வை எழுதணுமா ? நான்தான் கடைசின்னு நெனச்சிட்டேன். தேவையான அளவுக்கு நொறுக்கைக் காலி பண்ணிட்டு நல்லா படிச்சிட்டு வந்து வெற்றிகரமா எழுதுங்க.
வருகை தந்து எல்லடையையும் ருசி பார்த்ததுக்கு நன்றிங்க.