Friday, June 27, 2014

கோடைகாலப் பூக்கள்

இந்த கோடை சீஸனுக்காக எங்கள் குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல நிறங்களில் மனதைக் கொள்ளைகொள்ளும் ஸின்னியா, காஸ்மோஸ், டாலியா பூக்கள்.  இவற்றின் இதழ்கள்  அடுக்கடுக்காக இருப்பது இன்னும் அழகாக உள்ள‌து.

இதோ ... அவை உங்கள் பார்வைக்கும் ! படங்களை 'க்ளிக்' பண்ணி பெரிதாக்கிப் பாருங்க, இவற்றின் இதழ்களும், மகரந்தமும் மனதைக் கொள்ளைகொள்ளும்.

இப்பூக்களில் தேனீக்களைக் காணவில்லை. அதற்கு பதிலாக 'நான் இருக்கிறேனே' என்று போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் எறும்பு.






                   அம்மாவும் பொண்ணுமா இருப்பாங்களோ ? அல்லது தோழிகளா ?




18 comments:

  1. Replies
    1. ஆஹா, என்னவொரு வேகம்! அதிவிரைவான பின்னூட்டத்திற்கு நன்றிங்க.

      Delete
  2. எல்லாப்பூக்களுமே கொள்ளை அழகு. மஞ்சள் பூக்கள் மனதைக்கவருது. நானும் வைத்திருக்கிறேன். நத்தையிடம் பாதுகாப்பது பெரிய வேலை. நல்ல அழகா படம் பிடித்திருக்கிறீங்க சித்ரா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, மஞ்சள் பூக்கள்தான் பளிச்பளிச் என இருந்தன. நான் பூச்செடிகள் எதுவும் வளர்க்கவில்லை. வளர்க்க ஆசைதான்:(

      ஓ, அங்கு நத்தை பிரச்சினையா? படம் எடுத்து போடுங்களேன், உங்க ஊர் நத்தை எப்படி இருக்குன்னு பார்ப்போம். இங்கும் குட்டிகுட்டியா பார்த்திருக்கேன். அவற்றை படம் பிடிக்கும் தைரியமெல்லாம் இல்லை. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  3. வணக்கம்

    பூங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மிக அருமையாக தலையாட்டுகிறது..அழகாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      வருகைக்கும், பதிவிலுள்ள பூக்களை ரசித்ததற்கும் நன்றிங்க.

      Delete
  4. பளீரென அழகான நிறங்களில் உள்ளம் கொள்ளை கொண்டன அழகு மலர்கள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்முகில்,

      வருகைக்கும், பூக்களை ரசித்தமைக்கும் நன்றிங்க.

      Delete
  5. அழகான photography. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மலர்கள். காணப் பகிர்ந்தமைக்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. கீதமஞ்சரி,

      எடுக்க அழகான மலர்களும் உத‌வியுள்ளது. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  6. மிக அழகான பூக்கள்.....

    ஒவ்வொன்றும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ்,

      வருகைக்கும், ரசிப்புக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  7. மலர் கண்காட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது, படங்களின் அழகு

    ReplyDelete
    Replies
    1. ஓ, அப்படியா, பாராட்டுகளுக்கு நன்றிங்க ஆறுமுகம்.

      Delete
  8. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கண்களைக் கவர்கிறது. அழகான மலர்களை அழகாக படம் பிடித்தமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி,

      முதலில் சாப்பாட்டை படம் பிடிச்சு, அப்படியே கொஞ்சம்கொஞ்சமா கொஞ்சம் கத்துக்கிட்டேன். அழகான பூக்களும், சூரியனும் உதவிக்கு வந்ததால் படமும் அழகாக வந்துவிட்டது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  9. Beautiful flowers Akka! They are zinnia & cosmos! Dhaliyas are different I think! You have taken the pictures with perfect sunlight, is it during the evening walk? :)

    ReplyDelete
    Replies
    1. ஓ, அப்படியா !

      ஒருநாள் புதன்கிழமை(வியாழனும்) எக்கச்சக்கத் தொந்தரவு கொடுத்தேனே, அன்னிக்கு டாக்ஸிக்காக வெளியில வெயிட் பண்ணும்போது செடி வைக்கிற இடத்துல புது மண்ணு போட்டுட்ருந்தாங்க. என்ன செடி வைக்கப் போறீங்கன்னு கேட்டப்போ அவங்கதான் சொன்னாங்க. ஹா ஹா இப்போ இந்தப் பேரையும் சேர்த்துட்டாப் போச்சு

      காலையில 8 மணிக்கெல்லாம் லாண்டரி போடும்போது எடுத்தது மகி.

      Delete