புதன், 10 டிசம்பர், 2014

கிராமத்து மாலை !


வானுயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு இல்லாத இடத்தில் சூரியனின் மறைவு எவ்வளவு  கொள்ளை அழகாக இருக்கிற‌து ! ஊரில், சகோதரி வீட்டில் இருந்தபோது எடுத்தது.

                                 கிராமம் என்றாலே காக்கை, குருவி இல்லாமலா !

 'இயற்கை ஒழுங்காகத் தன் வேலையை செய்கிறதா' என வேவு பார்க்கும் காக்கைகள் !

         'கொஞ்சம் நீ பாத்துக்கோ' என சொல்லி பறந்துவிட்டதோ ஒரு காக்கா !

                                  ஹா ஹா ! என்னை நம்பி அடுத்தவரும் எஸ்கேப்.

கதிரவனை இங்க அங்கனு எங்கயும் நகரவிடாம‌ எவ்வளவு பத்திரமா பிடிச்சிருக்கேன் பாருங்க !!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிராமத்து மாலை இருந்தால் காலையும் இருக்கும்தானே ! அது அடுத்த பதிவில் !

25 கருத்துகள்:

 1. சித்ரா எனக்கு ஒரு படமும் தெரியல /என் ப்ளாகிலும் இன்னோர் ப்ளாகிலும்அதே ப்ராப்ளம் .நாளைக்கு மீண்டும் வரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஹா ! இப்போ எல்லா படங்களும் அழகா தெரியுது ..

   நீக்கு

  2. தெரியலையேன்னு விட்டுட்டு போகாம மீண்டும் வந்து பார்த்து கருத்திட்டதில் மகிழ்ச்சி ஏஞ்சலின்.

   நீக்கு
 2. வணக்கம்
  படங்களுடன் சொல்லிச் சென்ற விதம் அனைவரின் மனதிலும் இலகுவாக புரியும்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. எனக்கும் இந்த சூரியன் உதிப்பது,மறைவது பார்க்க ரெம்ப பிடிக்கும்.மிக அழகா இருக்கும். இங்கு மலைகள் வேறா.இன்னும் சூப்பரா இருக்கும். உங்க படங்கள், வர்ணனை அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   உங்க கார்த்திகை பிறையைப் பார்த்தபோதே நினைத்தேன் அங்கிருந்து உதயம் & மறைவு எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று. சீக்கிரமே பிடிச்சு போடுங்க ப்ரியசகி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கீதா.

   நீக்கு
 6. நல்ல பதிவு, இயற்கை ரசிக்க அளவே இல்லை, சூரியனின் உதயம்,மறைவு, கடல் அலை, விதையின் துளீர், குயில்களின் இசை, மழைத்துளி இன்னும்,இன்னும்,இன்னும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

  உடல் ஆரோக்கியத்திற்க்கு, இயற்கை மிகப்பெரிய மருந்து ( No BP,Stress ).

  உங்களுடன் நாங்களும் ரசித்தோம், தொடர்ந்து மலரட்டும் இயற்கை எழில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையை ரசிப்பதில் இவ்வளவு நன்மைகளா ! ஆமாங்க‌, இயற்கையில் ஒரு உற்சாகம் உண்டு. வயல் முழுவதும் விதை விதைத்தபின், முக்கியமா இருவித்திலை, அவை ஒன்றாக முளைத்து வரும்போது இருக்கும் அழகே தனிதான்.

   நிச்சயம் பதிவுகள் தொடரும். வருகைக்கு நன்றி ராஜேஷ்.

   நீக்கு
 7. சூப்பருங்கோ...
  கிராமம் அழகு தான் இல்லையா...
  .நானும் அக்டோபரில் 8 வது மாடியில் இருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் புகைப்படம் எடுத்து வைத்து இருக்கிறேன். கட்டடங்களுக்கு இடையில் உதயம். பதிவிட காத்திருக்கிறது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உமையாள்,

   கட்டிடங்களுக்கிடையிலான உதயம் ! அதுவும் ஒரு அழகுதான். சீக்கிரம் போடுங்கோ, நாங்களும் காணும் ஆவலில் காத்திருக்கிறோம்.

   நீக்கு
 8. சூரியனையே கேமிராவிற்குள் சிறைப் படுத்தி விட்டீர்களே. சீக்கிரம் அவர் விடுதலையானதைப் பதிவாக்குங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுவிச்சிடலாம்னு சொன்ன பிறகும் விடுவிக்கலைன்னா எப்படி ? சீக்கிரமே விடுதலையானதைப் பதிவாக்கிடுறேன்.

   நீக்கு
 9. கல்க்குங்க தோழி.
  நீங்க ரசனைக்காரர் மட்டுமல்ல ஒரு நல்ல புகைப்பட கலைஞஉம் கூட.
  அருமை, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனிதா,

   உங்களின் பாராட்டுக்கும், வருகைக்கும் நன்றி.

   நான் முதலில் போட்ட பதிலைக் காணோமே !

   நீக்கு
 10. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 11. அடுத்து அடுத்து இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவுடன் 'காலையும் நீயே, மாலையும் நீயே..!' பாடல் நினைவிற்கு வருகிறது, சித்ரா! ஏ. எம் ராஜாவின் தேன் குரலில் அமுதாக வழியும் இந்தப் பாடல்.
  புகைப்படங்கள் ஏ.ஒன்!

  பதிலளிநீக்கு
 12. அழகான படங்கள். சூரியனை சிறைபிடித்திருப்பது அருமை.

  பதிலளிநீக்கு