Tuesday, October 1, 2013

நீயும் முந்திரிக்கொட்டைதான்...


நூற்றுக்கும் மேற்பட்ட‌ பயணிகள்
பயணிக்க வேண்டிய இட‌த்தில்
வெறும் ஐம்பத்தெட்டு பயணிகளுடன்
தயார் நிலையில் வானவூர்தி.

"விரும்பிய நண்பர்களுடன்
நண்பர்களாகப் போகிறவர்களுடன்
விருப்பம்போல் அமர்ந்து பயணியுங்கள்" என
விமான ஊழியர் சொல்லுமுன்னே

அவரவர் இருக்கையைத் தெரிவுசெய்து
அமர்ந்து அகமகிழ்ந்தனர் பயணியர்.
இதற்கு நாங்களுமே விதிவிலக்கல்ல‌
இரண்டுமூன்று இருக்கைகள் மாறியாச்சு

'ரோஸ்டட் பீனட்'டும் சேர்த்து கொடுக்காமல்
'ப்ரெட்ஸெல்' மட்டும் கொடுத்து இறக்கிவிட்டனர்
ஆட்களின் எண்ணிக்கை குறைந்ததால்
ஆகும் செலவைக் குறைத்திருப்பார்களோ !

சன்னல் வழியாக விமான எஞ்ஜின், ரஸித்தேன்
கையில் காமிராவை எடுக்கும்வரை
இதுவரை பார்த்து ரஸித்த இது
இப்போது ஏனோ பிடிக்காமல் போனது.

விமானத்தின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
'பின்தங்கிவிடுவாய்' என நினைத்த என்னை
விடாமல் துரத்தி வந்து

படங்கள் எடுக்கவிடாமல்
காட்சிகளை மறைத்துக்கொண்டு
முந்திக்கொண்டு வந்த நீயும்
ஒரு முந்திரிக்கொட்டைதான்...

கீழேயுள்ள காட்சிகளைத்தானே மறைப்பாய் நீ
எளிதாக மேலேயுள்ள நிலாவைப்
பிரியமுடன்
பிடித்துவிட்டேனே !


[பட‌த்தைப் பெரிதாக்கினால் நிலா இருப்பது தெரியும்.
சென்ற வருடம் இதே நாளில் நான் பிடித்த முழு நிலவைக்காண இங்கே 'க்ளிக்'கவும். ]

10 comments:

  1. ;)) ரசித்தேன் நானும். முகிலோடு போட்டியா!

    ReplyDelete
    Replies
    1. நான்தான் குழப்பிட்டேனோ ! முகிலோடு எல்லாம் போட்டியில்லைங்க, சொன்னால் எதுவும் நினைக்கக்கூடாது, சரியா? ஹி ஹி. கூடவே வந்திட்டிருக்கிற, படத்திலுள்ள 'விமான எஞ்ஜின்'தாங்க அது.

      Delete
  2. அட... அருமை... நிலாவை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies

    1. படத்திலுள்ள நிலாவை ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க தனபாலன்.

      Delete
  3. ஆளில்லாத விமானத்தில ஜாலியா பயணித்திருக்கீங்க! :) நிலவு அழகா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. சுமார் 140 பேருக்கு 58 பேர் என்றால்? ஜாலிதானே!

      'நிலவு அழகா இருக்கு!'___ நன்றி மகி.

      Delete
  4. ஆளில்லா விமானத்தில் பயணமா?
    அனுபவியுங்கள்.
    ஆனாலும் இப்படி நீல மேகத்திடம் சண்டைபோட்டிருக்க வேண்டாம்.
    அருமையாய் படம் பிட்டித்திருக்கிரீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சண்டை போட்டது படத்திலுள்ள 'விமான எஞ்ஜினு'டன்தாங்க.இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான் இல்லீங்களா!

      'அருமையாய் படம் பிட்டித்திருக்கிரீர்கள்'_____ பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  5. நீங்கள் விமான என்ஜினுடன் சண்டை போட்டீர்கள்; அதை முந்திரிக்கொட்டை என்று திட்டினீர்கள் எல்லாம் ஓகே. ஆனால் நீங்கள் எங்கு உட்கார்ந்து இருந்தீர்கள் எஞ்ஜின் எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்பதுதான் புரியவில்லை.
    (நீங்கள் தான் எங்களைக் குழப்புவீங்களா...நான் உங்கள குழப்பிட்டேன் பாருங்க!):):)

    ReplyDelete
    Replies
    1. குழப்புவதற்காகத்தானே குழம்பாமல் படமெடுத்தேன்.எஞ்ஜினுக்கு நேராக உள்ளே உள்ள இருக்கையில்தான் இருந்தேன்.எஞ்ஜினுடன் சேர்ந்து இறக்கை முழுவதுமே நன்றாகத் தெரியும்.இறக்கையைத் தவிர்த்து பார்க்கும்போது அதுவும் ஒரு குட்டி விமானம் மாதிரியே இருக்கவும்....படத்தை எடுத்துப்போட்டு... நல்லா குழப்பிட்டேன், ஹா ஹா...

      Delete