எனக்கு உண்மையிலேயே coots னு ஒரு பறவை இருப்பதே இதுநாள்வரை தெரியாது. இமா அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அவருக்காகத்தான் இந்த பதிவு.
"அவ்வ்!! மேல அத்தனை coot ஒரே இடத்துல!! ஆசையா இருக்கு பார்க்க"_________ இப்படியெல்லாம் சொன்ன பிறகு நான் எடுத்து வைத்துள்ள coots ன் படங்களைப் போடாமல் இருந்தால் என் கௌரவம் என்னாவது !! இல்லாத அந்த கௌரவத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இந்தப் பதிவு.
Coot ஐத் தமிழ்ப்படுத்தி பார்த்தபோது 'நாமக் கோழி' என்ற அழகான தமிழ் பெயர் கிடைத்தது. முகத்தில் வெள்ளை நிறத்தில் 'நாமம்' மாதிரி இருப்பதால் இந்தப் பெயராக இருக்கலாம்போல் தெரிகிறது.
எங்கள் ஊர் பூங்காவில் உள்ள குளத்தில் coots ஐப் பார்த்தபோது குட்டிவாத்துகள் என்றே நினைத்தேன். ஆனால் அங்கே உள்ள ducklings களுக்கும் இவைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இவை கோழி & வாத்து மாதிரியும் தெரிந்தது.சரி, இது ஒரு வித்தியாசமான வாத்தாக்கும் என 'க்ளிக்'கிக்கொண்டு வந்துவிட்டேன்.
தண்ணீரில் இருக்கும்போது, சாம்பல் நிறம், வில்லன் கணக்கில் சிவந்த கண்கள் & வெண்ணிற அலகு என பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் கருமையாக, நம்ம ஊர் அப்பாவி கோழி மாதிரியே இருக்கிறது.
நீந்துவதற்கு தெம்பு வேண்டுமே, தண்ணீரில் உள்ள புழுபூச்சிகள் போதாமல், மேலே ஏறிவந்து எதையோ தேடித்தேடி கொத்திக்கிளறி சாப்பிட்டுவிட்டு, கூடவே சூரிய ஒளியில் கொஞ்சம் குளிரையும் காய்ந்துவிட்டு, மீண்டும் தண்ணீருக்குள் செல்வதைப் பார்க்கப் பார்க்க.....அது ஒரு அழகு.
(அவருக்கு) வளர்ப்புப் பிராணிகள் மேலுள்ள பாசத்தால் இந்தப் படத்தையும் இணைக்காமல் இருக்க முடியவில்லை.
படத்தில் ஆமையின் ஓடு பெயர்ந்துள்ளது. அது அடிபட்டதாலா அல்லது தோல் உரிந்திருக்கிறதா தெரியவில்லை !!