Sunday, November 16, 2014

அக்கம் பக்கம் _ 1

                 

வழக்கம்போல இந்த‌ வாரமும் உழவர் சந்தைக்குப் போயிருந்தோம். ஒரு கடையில் நான் உட்பட சிலர் காய்கறிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தோம். கடைக்கு எதிரிலேயே தெருவின் நடுவில் ஒரு பெண்ணும் , அவரது அம்மாவும்(அப்படித்தான் இருக்க வேண்டும்) நின்றுகொண்டு சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

நான் ஒட்டுக் கேட்காமலேயே(நெஜமா, நம்புங்க) அவர்களின் வீட்டுக் கதைகள் தானாகவே காற்றில் கரைந்து வந்து என் காதுகளில் விழுந்தன.

அக்கடையில் காய்களை எடுத்துக்கொண்டிருந்த நம்ம ஊர்க்காரர் ஒருவர் திடீரென திரும்பி அவர்களைப் பார்த்து, "லக்ஷ்மி! லக்ஷ்மி! இங்க நெறைய பேரு தமிழ்க்காரங்க இருக்காங்க, மெதுவா பேசு" என்றார் சத்தமாக‌ !

அவர் சொன்னது எனக்குப் புரிந்தும், சிலருக்குப் புரியாமலும் அக்கடையில் இருந்த மொத்த கூட்டமும் அவர் பார்த்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார்கள் .

அப்பெண்ணின் பெயர் 'லக்ஷ்மி' என்பது இப்போது எனக்குத் தெரிந்து  விட்   ட  து.   (ஆனாலும் இங்கே நான் பெயரை மாற்றிப் போட்டுள்ளேன்)

ஆனால் அவர்கள் இவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை. சில நொடிகளிலேயே மீண்டும் சத்தம்போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் நபர். அவர்களையே மிஞ்சிவிடும் அளவில் இப்போது மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து, "லக்ஷ்மி! இங்க நெறைய பேருக்கு தமிழ் தெரியும், இங்க பேச வேண்டாம், எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்க‌லாம்" என்றார்.

ம்ஹூம் ...... அவர்கள் அசரவேயில்லை !

அந்த இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும், உண்மையில் சொல்ல வேண்டுமானால் அந்த நபர் சத்தம்போட்டு சொல்லித்தான் அவர்கள் பேசுவதைக் கவனிக்க வைத்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு விஷயம் கடைசிவரை புரியவே இல்லை. அதாவது அந்த நபர் கடைகடையாகப் போய் காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொண்டிருந்தாரே தவிர, அந்த இரண்டு பேரும் மருந்துக்குக்கூட கடைப் பக்கம் வரவேயில்லை. பேச்சு சுவாரசியத்தில் கடைக்கு வந்ததையே மறந்துவிட்டார்களோ !!

                                                   பன்னீர் கரும்பு & பச்சை மல்லாட்டை

உழவர் சந்தையிலிருந்து வாங்கி வந்த பன்னீர் கரும்பு, பச்சை மல்லாட்டையை சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க !

14 comments:

  1. எப்படியோ கதை கேட்டுட்டு வந்துட்டீங்க.... கடலைக்காய் ஃப்ரெஷ்ஷா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. எழில்,

      கதை வந்து விழுந்தது உண்மைதான். ஆனால் நான்தான் கேட்கவில்லை. ஆமாங்க‌, புது கடலைதான். விலை அதிகமானாலும் கிடைக்கிறதே என வாங்கிவிடுவது.

      Delete
  2. அக்கம் பக்கம் யாருமில்லா...தலைப்பைப்பார்த்து இப்பாடல் ஞாபகம். மல்லாட்டை இதுவா!!!! நாங்க கச்சான் என சொல்வோம். (நிலகடலை,கடலை) இங்கு கரும்பு கிடைப்பது கஷ்டம். மல்லாட்டை அவித்து சாப்பிட நல்ல டேஸ்ட்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      ஆஹா, நல்ல பாடல்தான்! வேர்க்கடலை, நிலக்கடலை என புத்தகத்தில் படிப்போம். ஆனால் கரிச்சான் என கேள்விப்பட்ட‌தில்லை. வருடத்தில் முக்கால்வாசி நாட்களில் இவை உழவர் சந்தைக்கு வரும். விலையைப் பார்த்தால் வேலைக்காகாது என வாங்கிடுவோம். பச்சையாவும், அவித்தும், அவனில் சுட்டும் சாப்பிடுவோம்.

      ப்ச் ... உங்கூர்ல கரும்பு கிடைக்காதா !!

      Delete
  3. அக்கம் பக்கம்.. ஒரே கல்லுல மூணு மாங்காய்...

    இந்தப்பக்கம் கதை...
    அந்தப்பக்கம் காய்கறி
    நம்ம பக்கம் பதிவு...

    கரும்பு ... நிலக்கடலை...சூப்பர்..!!! கடலையைப் பார்த்தவுடன் அவித்து சாப்பிட தோணுது...

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      இங்கு வந்த புதுசுல இதையெல்லாம் பார்க்கவே முடியாது. இப்போ ஒவ்வொன்னா எல்லாமும் கிடைக்கிறது. காய்ந்த கடலையை ஊறவச்சு அவிச்சிட வேண்டியதுதான்.

      Delete

  4. இன்றுக் காலை என்ன ஆச்சுத் தெரியுமா..... குளித்து விட்டுப் பொட்டு வைப்பதற்காக கண்ணடி பார்க்கப் போனேனா?
    நெற்றியில் லேசாக விரிசல் மாதிரித் தெரிந்தது. லேசாக இருந்த விரிசல் நேரமாக ஆக பெரிதாகிக் கொண்டே இருந்தது. இது என்னடா தொல்லை. இந்த ரேட்டில் போனால் நாளை தலை வெடித்து விடும் என்றுத் தோன்றுகிறது. மதுராந்தகம் ஏறி உடையும் போது ஸ்ரீராமர் வந்துக் காப்பாற்றினார். தெரியும் என் தலை இரண்டாக பிளந்தால்....யார் சரி செய்வது சொல்லுங்கள்.......மண்டைப் பிளக்கு முன் காப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. தயவு செய்து நீங்கள் ஒட்டுக் கேட்டக் கதையை அடுத்தப் பதிவில் சொல்லி என் தலையைக் காப்பாற்றி விடுங்கள் சித்ரா . ப்ளீஸ் ..........

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா !! இதோ வந்திட்டேன்ன்ன்ன் !

      ஸாரிங்க, வந்து விழுந்த கதையை நான்தான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உங்கள் ஆர்வத்தைப் பார்த்தால் ... ம்ம் ... 'கேட்டிருக்கலாமோ' என்று தோன்றுகிறது. வேறொரு அக்கம்பக்கத்தில் கதையுடன் வர்றேன்.

      இப்போதுதான் தெரியும் உடைந்த மதுராந்தகம் ஏரியை ஸ்ரீராமர் வந்து காப்பாற்றினார் என்பது.

      Delete
  5. என்னது, அமெரிக்காவில் உழவர் சந்தையா?

    ReplyDelete
    Replies
    1. லேபிளில் உள்ள 'உழவர் சந்தையை' 'க்ளிக்' பண்ணிப் பாருங்க.

      அந்தந்த பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழங்கள், உலர் கொட்டைகள், முட்டை, பால், மீன், மாமிசம், விதவிதமான சாப்பாட்டுக் கடைகள், ம்யூஸிக் என களை கட்டும். சாப்பிடும் பொருள்களில் 'ஃப்ரீ சாம்பிள்'கூட உண்டு. நாங்க இருக்கும் பகுதியிலேயே இரண்டு சந்தைகள் உண்டு.

      Delete
  6. அருமை ! அங்கு உழவர் சந்தைகள் மிகவும் நன்றாக இருக்கும் என்பதும் கேள்விப்பட்டுள்ளோம். இங்கும் சொல்லி ஆரம்பித்தார்கள்...ஒரு சில இடங்களில் மட்டும் தொடர்ந்து உள்ளது....,,படங்கள் அருமை! ஆனால் கதை தான் மிஸ்ஸிங்க்...சரி விடுங்க பாவம் அவங்க கதை நமக்கு எதுக்கு...

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      ஆமாங்க, 'ஐஸ்'ல வைக்காத பொருள்களாக வாங்கி வரலாம். நம்ம ஊர்ல திருவண்ணாமலை உழவர் சந்தைக்குப் போயிருக்கிறேன். அப்போது(2000 ல்) நன்றாக இருந்தது. "நமக்குத் தெரியாத கதையா?" என நான்தான் அவர்களின் கதையை வாங்கிக்கொள்ளவில்லை.

      Delete
  7. கிராமத்துச் சண்டைகள் ஞாபகம் வந்திருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      கிராமத்தில் ரகசியத்தையும் சத்தம் போட்டுத்தானே சொல்வார்கள். இதில் சண்டையைப் பற்றி கேட்கவும் வேண்டுமா ! அம்மாவின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. அன்புடன் சித்ரா.

      Delete