இந்தப் பூ 'எந்தச் செடியின் பூ' என்று மாத்திரம் சொல்லுங்கள்.சமீபமாக எங்கள் வீட்டில் நிறைய பூக்கின்றன.
க்ளூ கொடுக் கட் டு மா ! இது பூப்பது அழகுக்காக வைத்த செடியில் இல்லை, சமையலுக்காக வைத்த செடியில் :}
சென்ற வார வெள்ளிக் கிழமை அடித்த சாரலில் ......
'இன்னொரு க்ளூ ப்ளீஸ்' என்பவர்களுக்காக :
முற்றிய செடியைப் பிடுங்கிவந்து காயவைத்து, அடித்து, நாரெடுத்து, கயிறு திரிப்பார்கள். அந்நேரம் இதிலிருந்து சிறு தூசு நம்மேல் பட்டால்கூட அவ்வளவுதான், சுணை பிடுங்கி எடுத்துவிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புளிச்சகீரை செடியில் அதன் பூ எவ்வளவு அழகா இருக்கு பாருங்க ! பதிவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி!
உழவர் சந்தையிலிருந்து வாங்கி வந்த 'புளிச்ச கீரை' குச்சிகளில் இருந்து கீரையை ஆய்ந்துவிட்டு குச்சிகளை மட்டும் நட்டு வைத்ததில் அவை துளிர்த்து, பூத்து, இப்போது காய்களும் வந்திருக்கிறது.
ஃப்ரெஷ் கீரை
விதை வேண்டுவோர் இப்போதே முன்பணத்துடன் ஆர்டர் செய்திடுங்கோ !
எந்த செடியோ தெரியவில்லை.ஆனால் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.தோட்டக் கலையின் மீது ஆர்வம் எல்லோருக்கும் வராது.உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டு
ReplyDeleteஇருக்கிறது சகோதரி.தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்கள்.
anitha shiva,
Deleteஉங்களின் வரவில் மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பூக்களின் நிறமும், வடிவமும்தான் மனதைக் கொள்ளைகொள்கிறது. பெரிய தோட்டம் வைக்க ஆசைதான். ஆனால் இப்போது இருப்பது ரெண்டுமூனு தொட்டிகளில் உள்ள செடிகள்தான்.
வெண்டைக்காய் செடியின் பூக்கள் என்று எண்ணுகிறேன். சரியா தோழி ?
ReplyDeleteதமிழ்முகில்,
Deleteவெண்டைப் பூ இல்லை. ஆனால் இரண்டும் பார்க்க ஒன்றுபோல்தான் இருக்கும்.
okra flower :)))))
ReplyDeleteஇல்லை ஏஞ்சல்,
Deleteதவறான பதிலுக்குத் தண்டனையாக அந்த புஸுபுஸு கன்னத்தைப் பிடித்துக் கிள்ளப் போகி றே ன் :) 'சும்மா' வலையில் பார்த்தது இன்னமும் மறக்கமாட்டேன் என்கிறது.
ஆஆ !! தவறான விடையா !! நீங்க செடி தொட்டியை மாத்தி வச்சிட்டீங்க :)
Deleteஇது உணவில் சேர்க்கும் காய் ..தெரில்லயே அவ்வவ் :))
இதோட காய் விதைக்கு மட்டுமே, இலையைத்தான் சமைச்சு சாப்பிடுவோம். அச்சச்சோ, கண்டு பிடிச்சிருவீங்களோ !
Deleteகோங்கரா :) அந்த சிவப்பு தண்டை சரியா கவனிக்கலை :)இல்லைன்னா கொங்குரான்னு அன்னிக்கே சொல்லியிருப்பேன் :)
Deleteஏஞ்சல், மதிய உணவு சமைச்சுட்டு வர்றேன்.
Deletebhindi flower :)) வெண்டைக்காய் செடியின் அழகான மலர்
ReplyDeleteஇந்தப் பூவும் வெண்டைச் செடியின் பூ மாதிரியேதான் இருக்கும். நீங்க ஒரு செடிய தேடிட்ருக்கீங்களே, அதுவேதான். 'மகி'கூட இதை சமைச்சதே இல்லை.
Deletepulicha keerai flowers !!
Deleteஆமாம் ஏஞ்சல், புளிச்ச கீரையின் 'பூ'வேதான். சில செடிகளில் பச்சைத் தண்டுகூட இருக்கும். "நீங்க தேடும் கீரை"னு க்ளூ கொடுத்திருந்தா எங்கே கண்டு பிடிச்சிருவீங்களோன்னுதான் அப்படி கொடுக்கலை.
Deleteஆனாலும் ரொம்பவே அழகா இருக்கில்ல !!
வெண்டிச் செடியின் பூ போல உள்ளது! சரியா சகோதரி!? ஆனால் பார்க்க மிகவும் அழகாக மனதைக் கொள்ளை கொள்ளும் நிறத்தில் உள்ளது!
ReplyDeleteThulasidharan V Thillaiakathu,
Deleteஇது வெண்டைச் செடியின் பூ இல்லை. இதோ இன்னும் சிறிது நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.
வணக்கம்
ReplyDeleteஅழகிய பூக்கள் அருமையான வினாவை கேட்டுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.
Deleteவெண்டைப்பூ என எண்ணுகிறேன்.
ReplyDeleteமுற்றிய செடியைப் பிடுங்கிவந்து காயவைத்து, அடித்து, நாரெடுத்து, கயிறு திரிப்பார்கள். அந்நேரம் இதிலிருந்து சிறு தூசு நம்மேல் பட்டால்கூட அவ்வளவுதான், சுணை பிடுங்கி எடுத்துவிடும் //
இது அறியா விஷயம். நன்றி சகோ
உமையாள் காயத்ரி,
Deleteஎல்லோருமே 'வெண்டைப் பூ' என்றுதான் சொல்லியிருக்கீங்க. இதன் நிறமும், வடிவமும் அப்படித்தான் தெரியுது.
சீக்கிரமா பதிலைச் சொல்லிடுங்க மேடம், சஸ்பென்ஸ் எவ்வளவு நேரம் தாங்கிக்குறது?
ReplyDeleteஇவ்வளவு நேரம் சஸ்பென்ஸை உடைக்காம இருப்பது இந்த தடவைதான். இதோ சொல்லிடுறேன்.
Deleteமுடிவைச் சொல்லுங்க...
ReplyDeleteதனபாலன்,
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதில் சந்தோஷம். கண்டிப்பா சொல்லிடுறேன்.
அழகான பூ அழகா இருக்கு.பதில் வந்தாச்சு என நினைக்கிறேன் சித்ரா. டிப்ஸா சொன்னவை புதியதா இருக்கு.கேள்விப்படலை.
ReplyDeleteப்ரியசகி,
Deleteபதிலை ஒருத்தர் எழுதி இருந்தாங்க. இப்போ அஞ்சுவுக்கும் தெரிஞ்சு போச்சு.
நான் சின்னவயசுல, கிராமத்துல பார்த்த டிப்ஸ் அது. இப்போ யாரும் அதை செய்யுறதா தெரியல.
pulichai keerai - gongura
ReplyDeleteசரண்யா,
Deleteபுளிச்ச கீரையின் 'பூ'வேதான். எவ்ளோ உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க! நீங்களும் செடிகளை வளர்க்கிறீங்கன்னு நினைக்கிறேன், சரியா !
இரண்டு பேர்கள் வெண்டைக்காய் பூ என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் சமையலுக்கு என்று க்ளூ கொடுத்திருக்கிறீர்கள். அதனால் அந்த விடை தான் சரியாக இருக்கும் போலிருக்கு.
ReplyDeleteஅதென்ன சுணை? பூச்சியா?
ரஞ்ஜனி,
Deleteவாங்க, இன்னும் சிறிது நேரத்தில் என்ன பூ என்று சொல்லிவிடுகிறேன்.
சுணை என்பது ஏதாவது ஒன்றிலிருந்து அதாவது வைக்கோல், அப்புறம் இது மாதிரியான செடிகளில் இருந்து குட்டிகுட்டியா, தூசு மாதிரியே சிறு முட்களுடன்(கண்ணுக்குத் தெரியாது) காற்றில் பறந்துவந்து மேலே ஒட்டிக்கொள்ளும். பிறகு சொரிய வேண்டியதுதான். இதற்கு ஒரே தீர்வு, ஜம்முன்னு ஒரு தலைக் குளியல்.
என்னது ரொம்பப் புதுமையால்ல இருக்கு .
ReplyDeleteவிடை தெரியவில்லையே..?!
This comment has been removed by the author.
Deleteமஹாசுந்தர்,
ReplyDeleteதெரிஞ்ச 'பூ'தாங்க. இதோ விடையுடன் வர்றேன்
yes , we had this plant in our home long back.................... your posts are amazing.
ReplyDeleteஓ,அப்படியா !
Deleteநன்றி சரண்யா !
புளிச்சகீரை பூ - பார்க்கவே நல்லா இருக்கு!
ReplyDeleteகோங்கூரா - விஜயவாடாவில் நிறைய உண்டதுண்டு! இப்போதும் கோங்கூரா அவ்வப்போது சேர்த்துக் கொள்வதுண்டு!
புளிச்சகீரை ஆந்திரா ஸ்பெஷல்னு இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது. எங்க ஊரிலும் நிறைய கிடைக்கும்.
Deleteநம்பினா நம்புங்க..புளிச்ச கீரை பூ-ந்னு பதிவு வந்தோடனே சொல்ல வந்தேன், போன் ஒத்துழைக்கலை! பிறகு வந்து பார்த்த போது நிறையப்பேர் வெண்டிக்கா:)ப்பூ என சொல்லிருந்தாங்க. எனக்கு கன்ஃபூஷன்;) ஆகிடுச்சு! அதனால அமைதியாப் போயிட்டேன்! ஹிஹி..
ReplyDeleteஊரில் வீட்டுப் பக்கத்தில புளிச்சகீரை செடி வளர்த்தாங்க. அது சமையலுக்கு உபயோகப்பட்டதை விட சும்மா அழகுக்கு இருந்தது எனத்தான் நினைக்கிரேன். யாருமே அதைப் பறித்து சமைத்ததா நினைவில்லை. இந்த மஞ்சள் கலர் மற்றும் இன்னொரு கலர், ப்ரவுன் அல்லது குங்குமக்கலர் என நினைக்கிறேன், இரண்டுபூக்களும் ஆல்டர்நேட்டிவா வைச்சிருந்தாங்க, அழகா இருந்தது! :)
நான் இன்னும் இந்தக்கீரையை சுவைக்கலை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்! ;) :)
சமைக்கிறவங்களுக்கு இலை மட்டுமே நினைவில் இருக்கும். இந்தளவுக்கு பூவை ரசிச்சது நினைவிருக்குன்னா .... நம்புறேன் மகி. இதிலும் ரெண்டுமூனு கலர் இருக்கு. பார்ப்பதற்கு வெண்டைப்பூவும் இதுவும் ஒரே மாதிரியாத்தான் இருக்கு.
Deleteஅந்தக் கடைசி வரியைத்தான் க்ளூவா போடலாம்னு நெனச்சேன். ஆனா மகியும் ஏஞ்சலும் எங்கே கண்டுபிடிச்சிருவாங்களோனு போடலை.
புளிச்ச கீடை அதிகம் செய்வதுண்டு! ஆஹா இது புளிச்ச கீரை பூவா....செடிகள் வளர்ப்பதுண்டு...ஆனால் கீரை பார்த்து வாங்குவதுண்டு இச்செடி முழுவதும் பார்த்தது இல்லை....
ReplyDeleteநன்கு முற்றிய செடியில்தான் பூக்கள் வரும். கடையில் நாம் வாங்குவது இளம் கீரைதானே. அதுல பூக்கள் இருக்க வாய்ப்பில்லாததால் தெரிவதில்லை.
Deleteஇந்தப்புளிச்சகீரை கோங்கூரா பச்சள்ளு ஆந்திராஸ்பெஷல். நேபாலில் இதற்கு டோரிஸாக் என்று பெயர். வேலியோரம் வேலிமாதிரி பயிர் செய்வார்கள். அவர்கள் சாப்பிடமாட்டார்கள்.வேலிக்கீரை. நான் அவ்வப்போது செய்வேன். நியூயார்க் காய்கறிக்கடையிலும் பார்த்தேன். புலிச்சக்கீரை. அழகுப்பூ. அன்புடன்
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteஇந்த கோங்கூரா ஆந்திரா ஸ்பெஷல்தான். இதன் பெயரை நேபாளத்திலும் தெரிந்துகொண்டேன். முன்பெல்லாம் நம்மூர் கடையில் மட்டுமே வதங்கிப்போய் கிடைக்கும். இப்போது உழவர் சந்தையில் ஃப்ரெஷ்ஷாவே கிடைக்கிறது.
அடிக்கடி இந்தப் பக்கம் வாங்கம்மா, அன்புடன் சித்ரா.