எப்போதும் காலையில் வீடு காலியனதும் கடகடவென தெருவில் இறங்கி, அருகில் இருக்கும் பூங்காவுக்கு போய் 'வாக்' பண்ணி முடிந்து திரும்ப குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும். சில மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் போய்க்கொண்டிருந்தேன்.
சிலபல காரணங்களால் இப்போது வெளியில் 'வாக்' போகாமல், " வேண்டாம், சில நாட்கள் போகட்டும் " என 'வாக்' போவதை அப்பார்ட்மென்ட்டிலேயேத் தொடர ஆரம்பித்து போய்க்கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் போரடிக்கும் 'வாக்'தான்.
பார்க் என்றால் நிறைய மனிதர்கள், குழந்தைகள், குளிர்ச்சியாக மரங்கள், பசுமையான புல்வெளி, பறவைகள், அணில்கள் என ஏதோ பிக்னிக் வந்த மாதிரி அலுப்பு இல்லாமல், உற்சாகமாக இருக்கும்.
அப்பார்ட்மென்ட்டிலோ வேலை செய்யும் ஆட்களைத் தவிர்த்து என்னை மாதிரி ஒரு சிலர் மட்டும்தான் நடமாடுவர். வெயில், குளிர் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதலாகவேத் தெரியும். நானும் ஒரு முக்கால் மணி நேரத்திற்குள்ளாகவே நடையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன்.
கொஞ்சம் வெயிட் போட்டிருப்பதும் தெரியுது :)
நீண்ட விடுமுறையில் வீட்டிற்கு வந்த என் பெண்ணிடம் இதைபற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.
"அம்ம்ம்மா, நீ ஒன்னும் கவலைப்படாதே, 1 வீக் சேலஞ்ச், 30 டேய்ஸ் சேலஞ்ச்லாம் இருக்கு. அதுல உன்னை ஒல்லியாக்கிடலாம் " என ஆறுதல் சொன்னாள் பெண் .
.
பெர்சனல் ட்ரெய்னர் கிடைத்த சந்தோஷம் எனக்கு. நான் மறந்தாலும் அவள் என்னை விடப்போவதில்லை
ஒருநாள் காலை எனக்கு எது சரிவரும் என 'யூ டியூப்'ல ஒரு வீடியோவைத் தேடி எடுத்து பயிற்சியை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் தயாரானோம்.
" 30 நாட்களில் ஆங்கிலம் கற்கலாம் மாதிரியா ? " என இவர் கிண்டலடித்துவிட்டு ஆஃபீஸ் கிளம்பிப் போய்விட்டார்.
மதிய உணவுக்கு வந்தபோதுகூட ஆச்சரியமான பார்வை வந்தது இவரிடமிருந்து.
மாலை ஆஃபீஸ் முடிந்து வந்ததும் சாப்பிட சுடச்சுட இட்லியும் சாம்பார் & சட்னியும் எடுத்து வைத்தேன்.
சாப்பிட உட்கார்ந்தவர் பெண்ணைப் பார்த்து, " அம்மா எங்க ? காணோமே !! " என்றார் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு.
" D:< Oh come ஆஆஆஆon " என்றாள் மகள்.
" :)))))))) " _____ இது நான்.
*****************************************************************************
எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் :
ஒருநாள் பயிற்சியிலேயே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகிப் போய்விட்டேனாம் என்பது ஒன்று.
ஒரேநாள் பயிற்சியில் ஆளே காணாமல் போய்விட்டேன் என்பது மற்றொன்று.

புரியவில்லையே அக்கா ????
ReplyDeleteOh, will reply u tomorrow Abinaya !
Deleteஅபிநயா,
Deleteஅன்றைய உரையாடலை அப்படியே எழுதிவிட்டேன் :) இப்போ பதிவைப் பாருங்க, நீட்டித்திருக்கிறேன்.
வருகைக்கு நன்றி அபிநயா !
ஆகா சித்ரா க்கா அப்ப இனிமே எனக்கும் டிப்ஸ் குடுங்க நல்ல ட் ரெய்னர் கிடைச்சுட்டாங்க உங்களுக்கு!!!???
Deleteடிப்ஸ் குடுத்திடலாம், ஒன்னும் பிரச்சினையில்லை.
Deleteஆனால், "எங்க பொண்ணு காணாமப் போனதுக்கு நீங்கதான் காரணம்"னு உங்க வீட்ல இருந்து சண்டைக்கு வந்தால் என்ன செய்வது ? அதான் யோசிக்கிறேன் .
'என்னையும் நம்ப ஒரு ஆள் இருக்காங்களே'ன்னு ரொம்ப சந்தோஷம் :) நன்றி அபிநயா.
தேகப்பயிற்சியில் எழுந்திருக்கமுடியாமல் உடம்பு வலியா அன்புடன்
ReplyDeleteஹா ஹா ஹா :))) காமாஷிமா, எங்களை ஓட்டுவதற்காக அப்படி சொன்னார்.
Deleteவருகைக்கு நன்றிமா, அன்புடன் சித்ரா.
ஹும்.. அப்புறம்....!!
ReplyDelete..:)))
இளமதி,
Deleteபதிவின் கீழ் மீதியைப் போட்டிருக்கிறேன், நேரமிருக்கும்போது பாருங்க. வருகைக்கு நன்றி இளமதி.
சித்ராக்கா ஒல்லியாகி அடையாளமே தெரியாமல் மாறிப் போயிட்டாங்க, அதனால அவருக்கு அடையாளம் தெரியலையாக்கும்!!! :))))
ReplyDeleteமகி,
Deleteஅதே, அதேதான் :))))
நான் என் பதிவில காணாமல் போய் இப்பதான் உங்க பதிவுக்கு வாறன். யோசிக்கமுடியாமல் பதிலும் போட்டாச்சு. ஒரு நாளில் "எப்படி ஒல்லியாகிறது. எனக்கு சொல்லுங்க சித்ரா.!!!
ReplyDeleteப்ரியா,
Deleteசொல்லிட்டாப் போச்சு, ஆனால் ஆகும் செலவைச் சொன்னால் பாதி நாள்லயே காணாமப் போயிடுவீங்க, பரவாயில்லையா :)
நன்றி ப்ரியா !
செமயா இருக்கு ...........
ReplyDeleteபின்னூட்டமும் குட்டியா, சூப்பரா இருக்கு :))))
Deleteநன்றி அனு.
ஹஹஹஹ்ஹ்...ஒரு நாள்லயே காணாமல் போகும் அளவுக்கு அப்படி என்ன பயிற்சியோ....அஹஹஹ் அது சரி பயிற்சி செஞ்சு களைச்சுப் போய் அப்படியே அங்கேயே உக்காந்துட்டீங்களோ....இல்லை செலவை நினைச்சு மயங்கி........ஹஹ்ஹாஹஹ்
ReplyDeleteஇப்ப என்ன கண்ணுல படறீங்கதானே வீட்டுலுள்ளவங்க கண்ணுல...?!!!!
கீதா: அங்கெல்லாம் பார்க் ரொம்ப அழகா இருக்கும்....இங்க மாதிரி இல்ல....நான் ரொம்ப ரசிச்சுருக்கேன்....சின்ன பார்க்குகள் கூட குளம் குட்டையோடுதான் இருக்கும்...அதுல வாத்து ஏதேனும் போய்க்கிட்டிருக்கும்...அமைதியா வேற இருக்கும்...அந்த அனுபவமே தனிதான்...
ஹா ஹா ஹா :)))) நானாவது .... கண்ணுக்குத் தெரியாம நடமாடுறதாவது !!
Deleteசெலவ நெனச்சு மயங்கி விழறதுக்குத்தான் ஆள் இருக்கே :))))
அதையேன் கேக்குறீங்க, வந்த புதுசுல தினமும் ஏதாவது ஒரு பார்க்'குக்கு போவோம். சில பார்க்குகளில் வாத்துக்கூட்டம் இருக்கும். நல்லா இருக்கும். இப்போதும் என்றைக்காவது போவதுண்டு.
ஆமாம், இங்கு வந்துட்டு, ஏன் திரும்பிட்டீங்க ?