Wednesday, October 7, 2015

போலாம் ரைட் !!

புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! சீக்கிரம்சீக்கிரம், இன்னும் மூனே மூனு நாள்தான் பாக்கி இருக்கு, வர்றவங்களாம் வந்து பேருந்துல‌ ஏறுங்க, வலைப்பதிவர் திருவிழாவுக்குப் போகலாம் !!

என‌க்கும் இந்த வண்டியில ஏறி புதுக்கோட்டை போய் இறங்க ஆசைதான், ஒரு முறையேனும் இந்த வாய்ப்பு வராமலா போயிடும் !!


வழக்கம்போல் ஊரில் நடக்கும் வீட்டு விசேஷங்களில் நேரில் சென்று கலந்துகொள்ள இயலாத நிலைதான் இந்த நம்முடைய வலைப்பதிவர் திருவிழாவிலும் ஏற்பட்டிருக்கிற‌து என்னைப்போன்ற ஒருசிலருக்கு. மனதைத் தேற்றிக்கொள்வோம் !

வலையுலகம் முழுவதும் விழா பற்றிய பேச்சாகவே இருப்பதால் விழா ஏகத்துக்கும் களைகட்டியிருப்பது தெரிகிறது.

விழா சிறப்பாக நடைபெற இரவுபகல் பாராமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும், விழா முடியும்வரை இருந்து செய்யப்போகும் விழாக் குழுவினருக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

18 comments:

 1. ரைட்..ரைட் நான் ஏறியாச்சு...!! அய்ய் எனக்கும் இந்த வண்டியில் போக ஆசை. அதுவும் சித்ரா பஸ் சர்வீஸ் ஆச்சே.!!!
  இங்கிருக்கிறவங்களுக்கு சேம் பீலிங் ஆக இருக்கபோகுது 3நாட்களும்..
  இம்முறை நன்றாகவே களைகட்டுகிறது வலைப்பதிவர்திருவிழா. நாம் இங்கிருந்தே மனதார வாழ்த்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா,

   யாரிடமும் சண்டை போட அவசியமில்லை, உங்க ஆசைப்படி ஓரத்து சீட்டு பிடிச்சு வச்சிருக்கேன், ஜம்முன்னு உக்காந்துட்டு வாங்க.

   ஆமாம் ப்ரியா, உள்ளுக்குள் சந்தோஷம் ஒருபக்கம் என்றாலும் தெரிஞ்சவங்க எல்லோரும் ஒன்னா இருக்கும்போது நாம் மட்டும் தனியாக இருப்பது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. எல்லாம் சிறப்பாக நடந்து முடிய இங்கிருந்தே வாழ்த்துவோம்.

   Delete
 2. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 3. அச்சச்சோ.. வண்டி புறப்பட்டிடிச்சா...:!)
  இருங்க நானும் வாரேன்..!. பிரியா அந்தக் கோணர் ஸீட் எனக்கு புடிச்சு வைங்க.. இதோ சன்னல் எல்லாம் சாத்தி, வீட்டைப் பூட்டீட்டன்..
  ஓடி வாரேன்.....................:)

  இப்படியெல்லாம் சொல்ல ஆசையா இருக்கு.. எனக்கும்!
  ம்ஹும்.. இங்கிருந்தே வாழ்த்துவோம்!

  அருமையான சித்ரா பஸ் சேவிஸ்!

  ReplyDelete
  Replies
  1. இளமதி,

   ஓடி வரவேண்டாம், எவ்வளவு நேரமானாலும் நின்று உங்களை ஏற்றிக்கொண்டுதான் இந்த பஸ் கிளம்பும். கார்னர் ஸீட்டும் ரெடி:)

   ஒவ்வொருவர் பெயரையும் ஒவ்வொரு ஸீட்ல எழுத ஆசைதான், இடம் பற்றாக்குறை வந்திடுமோன்னு எழுதலை. இங்கிருந்தே வாழ்த்துவோம் !!

   Delete
 4. உங்களுக்கும் சேர்த்து நாங்க பார்வையிட்டு விவரிக்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் எழில்,

   நீங்க சொல்லப் போகும் கதைகளை எல்லாம் கேட்க இப்போதே ரெடியாகிட்டு வரோம்.

   Delete
 5. எல்லோருமே பதிவர் திருவிழா பற்றி போட்டிருப்பது சந்தோஷமா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அபி,

   ஆமாம், நீங்க எப்போ பதிவெழுதப் போறீங்க ? முதல் பதிவா விழா பற்றி எழுதிடுங்களேன்.

   உங்க பாப்பாவின் படங்களைத் தவறாமல் பார்த்துவிடுகிறேன் :)

   Delete
  2. நான் பதிவெழுதுவதா? எனக்கு தெரிஞ்சு 2,3 வருஷமா ப்ளாக் படிக்கிறேன். ஆனா கமெண்ட் யாருக்குமே போடறதில்லை.
   என்னவர் இவ்ளோ நாளா படிக்கிற 1 கமெண்ட் கூட போட்டதில்லையானு அதிர்ச்சியா கேட்டார்.அப்புறம் தான் எல்லோருக்குமே கமெண்ட் போட்டேன்.கமெண்ட் போட வே யோசிக்கிற நான் பதிவெழுதினா எப்படி இருக்கும்.அதுவும் ஒரு நாள் நடக்கலாம்...)

   Delete
  3. ஹா ஹா ஹா :))) நான் சமையல் பதிவுகள் சில எழுதியும்கூட‌ யாருக்கும் கருத்திடமாட்டேன். போடக்கூடாது என்றில்லை, கொஞ்சம் கூச்சமா இருந்தது. பிறகு ஒவ்வொருவரா தெரியத் தெரியத்தான் பிற வலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். அப்படித்தான், நீங்களும் ஆரம்பிங்க, பிறகு சரியாயிடும் :)

   Delete
 6. வணக்கம்
  புதுக்கோட்டைக்கு போகிற பேரூந்து தயார் நிலையில்இருக்கு எனக்கும்முந்தி ஒரு இடம் பிடியுங்கள்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரூபன்,

   உங்களுக்கும் ஒரு இடம் பிடிச்சு வச்சாச்சு, ஓடிவாங்கோ !!

   Delete
 7. ஆஹா! என்ன உங்க ஊரிலிருந்து பேருந்தா வந்து சேரவே நாட்கள் ஆகிடுமே...ஓ பறந்து வரும் பேருந்தோ...ஹஹஹ நாங்க எல்லாம் கிளம்பியாச்சு....சரி இங்க வந்ததும் சொல்லுங்க கொஞ்சம் சீட் போட்டு வைச்சுக்கோங்க...ஏறிக்கறோம்...ரைட் ஃபிஃபிஃபி...விசில் விட்டாச்சுப்பா...

  ReplyDelete
  Replies
  1. கீதா,

   ஓ, கண்டக்டரும் வந்தாச்சா :))))

   விமானம் இருக்கு, கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு பேர மாத்தணும்.
   எல்லாம் சோம்பேறித்தனம். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே, நாளைக்கே ஒரு விமான சேவையையும் ஆரம்பிச்சிடலாம்.

   Delete
  2. ஆரம்பிச்சுடுவோம்!!!

   Delete