கோடை விடுமுறையில்(ஜூன் முதல் வாரம்) மகள் வருவதற்கு விமான டிக்கெட் புக் பண்ணியதுமே இதுவரை பிடிக்காமல் இருந்த இந்த வீடு கொஞ்சம் அழகானதுபோல் தோன்றியது.
இன்னும் இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சி வருதுன்னு சொல்றாங்களே, ஒருவேளை நம்ம ராசியை(?) குரு பார்க்கப் போகிறாரோ ! அதனால்தான் திடீரென இந்த வீடு பிடிக்கிறதோ !
இதுவரை கொஞ்சம் மூடினாற் போலவே கிடந்த ஜன்னல்கள், கதவுகள் திறக்கப்பட்டதும் ...... வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் ! நிச்சயம் இது குரு பார்வை வரப்போவதற்கான அறிகுறிகள்தான்.
முன்பு எப்போதோ(மார்ச் ?) ஒருமுறை 'வாக்' போகும்போது வழியில் பார்த்து 'ஹாய்' சொன்ன நம்ம ஊர் தோழியை இரண்டு வாரங்களுக்குமுன் மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தது.
வீட்டிற்கு வருமாறு அழைப்பு. நான்தான் தயங்கினேன். காரணம் அவருடன் துறுதுறுவென வந்திருந்த வளர்ப்பு செல்லம்.
நான் அழைக்கவில்லை. குற்றவுணர்ச்சிதான், வேறு வழியில்லை.
வழியில் பார்கும்போதே பயம். வீட்டுக்குப் போனால் ? அல்லது வீட்டுக்கு வந்துவிட்டால் ?
அடுத்த நாளே மீண்டும் வழியில் சந்திப்பு.
"நீங்க தினமும் வாக் போறீங்கன்னா நானும் வருகிறேனே" என்றார்.
தோழிகளுடன் 'வாக்' போயி பல வருடங்களாகிவிட்டது. எப்போதாவது ஒரு சமயம்தான் இது மாதிரியெல்லாம் வாய்க்கும்.
நான் சொல்லலை ? ஆகஸ்ட் 2 அருகில் வந்துவிட்டதே !
சென்ற வாரம் திங்கள் கிழமை 'வாக்' போகும்போதே வழியில் இருக்கும் அவரது வீட்டிற்கு, "அதெல்லாம் பார்த்துக்கலாம் வாங்க'னு அழைத்துச் சென்றுவிட்டார்.
அவர் வீட்டு செல்லம் புதியவர் வருகையால் குஷியாகி என்னிடம் வரவும், என் வள்ளல் தெரிந்தபடியால், "வேண்டாம்" என்று தோழி சொன்னதும் என்கிட்டே வரவேயில்லை .
'அப்பாடா' என்றிருந்தது.
நானும் பயந்துநடுங்கி ஒரு வழியாக ஓடியே வந்துவிட்டேன்.
ஏனோ தெரியவில்லை, அடுத்த நாள் 'வாக்' முடிந்து நானும் அவர் வீட்டுக்குப் போனேன்.
இன்று செல்லம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, என்னைப் பார்த்ததும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டது.
வெட்கமா ? அல்லது என் நல்ல்ல்ல மனம் அதற்குத் தெரிந்துவிட்டதா ?
"வெளில வா, உன்னைப் பார்க்கணுமாம், யார் வந்திருக்காங்க பாரு ?" என்றார்.
ம்ஹூம் ....
தோழி உள்ளே போய் அழைத்து வந்தார்.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் அதைத் தடவி விடவும் என் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
இங்கே, "விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது" என்ற கீதாவின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் ....... தவிர்க்க முடியவில்லை.
என்னையே என்னால் நம்ப முடியவில்லை. மனதினுள் அவ்வளவு சந்தோஷம் !
யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டாமா ?
வீட்டுக்காரர் ?
இந்த ஒரு விஷயத்தில்தான் எங்களுக்குள் ஏகத்துக்கும் ஒற்றுமை. அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென என் பெண்ணிடம் சொன்னேன்.
ஏற்கனவே "நாய் & பூனை adopt பண்ணி இருவருக்கு லைஃப் கொடு" என என்னை ப்ரெய்ன் வாஷ் செய்துகொண்டிருப்பவள் ஆச்சரியப்பட்டு, "பேர் என்ன வச்சிருக்காங்க ?" என்றாள்.
"குரு" என்றேன்.
"அப்படின்னா உனக்கு குரு பார்வ கெடச்சிடுச்சுனு சொல்லு " என்றாள் :)))
அட....குரு பார்வை கிடைத்து விட்டதே. மகள் பொறாமைப் படுமளவிற்கு குருவிடம் பாசம் காட்ட ஆரம்பித்து விடப்போகிறீர்கள். மகளாய் அலர்ட் செய்ய வேண்டும்.....
ReplyDeleteஇராஜலக்ஷ்மி,
Deleteஓ, இது வேறயா :)) petன்றதால பொறாமை வராதுனே நினைக்கிறேன்.
வருகைக்கும் நன்றிங்க!
ha hah ha!! குரு பார்வை சூப்பர். நீங்க என்ன ராசின்னு சொல்லாமலே எஸ்கேப் ஆகிட்டீங்க!!
ReplyDeleteஎன்னைத்தான் குரு பகவான் கொஞ்சம் வக்கிரமா பாக்குறாரு!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ஆகஸ்ட் 2 ல இருந்தே ஒரே வம்பு...உடம்பு சரியில்லை, தூக்கம் வரதில்லை...!! நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன், குருப்பெயர்ச்சி பலன் பாரு பாருன்னு எல்லாருமா சேர்ந்து என்னை இப்படி பண்ணிவுட்டாங்க மை லார்ட்!! :-| :-| இப்ப என்ன நடந்தாலும் குரு பகவான் லீலையோ என பயமாவே கிடக்கே!!
மகி,
Deleteஇப்போதைக்கு எந்த ராசிக்கெல்லாம் குரு பார்வை இருக்கோ அதுல ஒன்ன செலக்ட் பண்ணிக்க வேண்டியதுதான் :)) ஹி ஹி ... நல்ல பலனா போட்டுருக்குற ராசியை என்னதா நெனச்சுப்பேன் !
கடைசி ராசியைச் சொன்னதா நெனச்சிட்டுத்தான் மெஸேஜ் அனுப்பினேன். இவ்வளவு நாளும் எங்க வீட்டு மக்கள்ஸ் ராசியைப் பார்க்கும்போது அதையும் சேர்த்து பார்த்துவந்தேன். சரி கவலப்படாதீங்க, எப்படியும் குரு சுத்திதானே வந்தாகணும், அப்போ பார்க்க வச்சிடலாம் !
ஓ...குரு பார்வை கிடைத்து விட்டதா...வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி அனு !
Deleteசெம குரு!!!!!.ரசித்தோம்..
ReplyDeleteகீதா ; அந்த கீதா நான்தானே???ஹிஹிஹி......ரொம்ப சந்தோஷமா இருக்கு..எப்படியோ என் கட்சி சிஷ்யை ஆகிட்டீங்க.....விலங்குகள் தரும் மகிழ்ச்சி...கபாலி சொல்லும் மகிழ்ச்சியை விட பல மடங்கு அதிகம்......ரசனையாக எழுதுகிறீர்கள். இது சிறு கதை வடிவமாகவும் உள்ளது. பாராட்டுகள்...இதழுக்கு அனுப்பலாம்...
சந்தேகமேயில்லை, நீங்களேதான் :)) ஹி ஹி .... பதிவை கதைக்கு நகர்த்திவிட்டேன் ! எல்லாமும் கோர்வையாக நடந்தவையே !
Deleteஎங்கே பார்த்தாலும் குரு பெயர்ச்சியைப் பற்றிய செய்திகளாகவே இருக்கவும், அந்நேரம் பார்த்து, "குரு வெளில வாடா"னு அவங்க சொல்லவும், உண்மையான நிகழ்வே கதையாகிவிட்டது. பாராட்டுகளுக்கு நன்றி சகோ துளசி & கீதா!
குரு பார்வை..... குருவின் புகைப்படம் போட்டிருந்தால் எங்களுக்கும் குரு பார்வை கிடைத்திருக்கலாம்! :)
ReplyDeleteஹா ஹா போட்டுட்டாப் போச்சு !
Deleteநன்றி வெங்கட் !
எப்படி குருபார்வையைப் பார்க்காது விட்டேன். அநுபவித்துப் படித்தேன். கதை படிக்கும் உணர்ச்சி வந்தது. கதைகளும் எழுது. அன்புடன்
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteரசித்துப் படித்துப் பாராட்டியதற்கு நன்றிமா ! நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன், அன்புடன் சித்ரா.