Thursday, July 28, 2016

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி !

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்குக் கூவிக்கூவி அழைத்தும், கட்டணத்தைக் காரணம் காட்டி யாருமே எட்டிப் பார்க்காத‌ சூழலில், இழுத்து மூடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

சோகத்துடன் மூடப்போகும்  தருணத்தில் எலி ஒன்று, வந்து, வசமாக சிக்கியது மகள் வடிவத்தில்.

"அம்ம்ம்மா, ஈஸியா இருக்கணும், அதே நேரத்துல‌ சுவையாவும் இருக்கணும், அது மாதிரி ஏதாவது ரெஸிபி இருந்தா லீவுல‌ சொல்லிக்குடும்மா " என்றாள் லீவுக்கு வருமுன்னமே.

ஆறு மாதங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்டாததன் விளைவு இது.

எளிமையான‌ சிலவற்றை வரிசையாக  லிஸ்ட் போட்டோம்.

சாம்பார் _ வேண்டாம் ! பருப்பு வேகவச்சு, காய் கட் பண்ணி .... நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ரிஜெக்ட் ஆன லிஸ்டில் புளிக்குழம்பு, குருமா, கீரை எல்லாம் இருந்தன.

லிஸ்டில் முதலாவதாக எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை மூன்றும் இடம் பிடித்த‌ன.

மகள் சொன்னாள், " அம்மா, நீ ஒரு சூப் வப்பியே, சூப்பரா இருக்குமே, அத கத்துக்கிறேனே" என்றாள்.

நானாவது சூப் வைப்பதாவது ?

"முறுங்க கீரை தண்ணி சாறு வைப்பேனே ...... அத சொல்றியா, நீ இருக்கும் ஊர்ல அது கிடைக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்போதானே லயா வீட்ல செடி வாங்கி வச்சிருக்காங்க‌, அது    வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,  அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.

"அது இல்லம்மா, அதுல கீர எதுவுமே இருக்காது, கொஞ்சம் ப்ரௌன் கலர்ல இருக்குமே, சூப்பராவும் இருக்குமே, அது" என்றாள்.

நெஜமாவே எனக்கு என்னன்னு புரியல, விட்டுட்டேன்

விடுமுறையில் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சாம்பார் முடிந்து ரசம் ஊற்றியதும்,  "இதேதான், இததான் நான் சூப்னு சொன்னேன்" என்றாள்.

இப்போ லிஸ்ட்ல ரசமும் சேர்ந்துகொண்டது.

நல்ல நாள் பார்த்து kitchen boot campஐ ஆரம்பிச்சாச்சு.

முதல் இரண்டு நாட்கள் 'இதை எடு, அதை வை' என ஒரே மிரட்டல்தான் :)) சரியா செய்யாட்டி push ups, sit ups என பனீஷ்மெண்ட்டுடன் முடிந்தது .

எலுமிச்சை சாதம் எந்தவித‌ப் பிரச்சினையும் இல்லாமல் வந்துவிட்டது. முட்டையும் எளிதோ எளிதாகிவிட்டது.

உருளைக்கிழங்கு ? கைவிட்டாச்சு !

ரசம் கற்றுக்கொண்டு mid term testம் வைத்து, finalம் முடிந்துவிட்டது.

ஆனாலும் 'பூச்சி மாதிரி இருக்கு'னு புளியைக் கரைக்காமலும், தக்காளி பிடிக்காது என்பதால் அதைப் பிழியாமல் பொடியாக நறுக்கிப் போட்டதாலும் மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துதான் போனது.

இருந்தாலும் கொத்துமல்லி விதை, மிளகு & சீரகம் இவற்றை வறுத்துப் பொடிப்பதை "ஸோ இண்ட்ரஸ்டிங்", "ரசம் வைப்பதிலேயே இதுதான் ஃபன் பார்ட்" என சொன்னதால் A + கொடுத்தாச்சு.

விடுதிக்குப்போய்  தக்காளியை நறுக்கியோ, புளியைக் கரைக்காமலோ ரசம் வைப்பதும் வைக்காததும் இனி அவள்பாடு, அதை ருசிக்கப் போகும் அவளின் தோழிகள் பாடு  !!

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி சூப்பர் ரசம் வைத்து சாப்பிட்டதாக படத்துடன் வாட்ஸ் அப் சொன்னது.

பார்த்தீங்களா ?  சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி,  மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க‌.

அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்க இன்னும் சில நாள்களே உள்ளன. Summer  சலுகையும் உண்டு. உஷாராகி உடனே பதிஞ்சுக்கோங்க :))))

10 comments:

  1. // சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி, மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க‌.// என்னமோ பொடி வச்சு பேசற மாதிரியே இருக்கு!! அவ்வ்வ்வ்வ்வ்!! ;)

    உருளைக்கிழங்கை ஏன் கை விட்டீங்க? ப்ரெஷ்ஷர் குக்கர்ல வேகவைச்சு தாளிக்க சொல்லலாம்ல? ஜஸ்ட், உப்பு - மிளகாய்த்தூள் மட்டுமே போட்டு புரட்டி எடுத்தா லெமன் ரைஸுக்கு சூப்பரா இருக்குமே!! :p

    வகுப்பு சுவாரசியமாதான் இருக்கு. 103செ.மீ. உயரமுள்ள ஸ்டூடண்ட்டை சேர்த்துப்பீங்கன்னா சொல்லுங்க, அனுப்பி விடறேன்!! ;) :D

    ///வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,/// எச்சூஸ் மீ, இப்பவே புது கொம்பு வளந்தாச்சு, சீக்கிரமா கீரை பறிச்சுரலாம், ஜாக்கிரதை!! B-) B-) :)

    ReplyDelete
    Replies
    1. மஹி, அத 'ஃபன் பார்ட்'னு சொன்னப்போ எனக்கு உங்க பதிவுதான் ஞாபகம் வந்துச்சி :)

      சேர்த்துப்போம் சேர்த்துப்போம் அனுப்பிவிடுங்க. எங்களுக்குத் தேவை அதிகக் கட்டணமும், அதற்கேற்றார்போல பொழுதுபோக்கும் :)

      ஓ, அப்படியா, இங்க கீரை கெடைக்கலன்னா கொஞ்சம் கடனா கேட்டுட வேண்டியதுதான்.

      டெய்லி மேஷ்டு பொட்டடோ சாப்டுசாப்டு போரடிச்சாச்சு. அதனால வேண்டாம்னு சொல்லியாச்சு. அடுத்த தடவதான் உருளை ரெடி பண்னனும்.

      Delete
  2. அட! சித்ரா இப்படி ஒரு தொடர் வேற இருக்கா...சூப்பர்....சூப் நு சொல்ல வந்து சூப்பர் னு வந்துருச்சு . எப்படினாலும் பதிவு செம கிகிகிகிகி...இது வேற ஒண்ணும் இல்ல சிரிப்.....பு!!! கபாலி மகிழ்ச்சி நு சொல்றது போல இதையும் சொல்லிப் பாத்துக்கங்க....ரொம்ப ரொம்ப ரசித்தோம்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      ஹா ஹா கபாலி ஃபீவர் இன்னும் போகலயா :)) சொல்லிப் பார்த்தாச்சுங்க‌ :) ஒரே உற்சாகமா இருக்கறாப்போல தெரியுது :) எனக்கும் 'மகிழ்ச்சி' கீதா !!

      Delete
  3. மகளுக்கு ரசம் வைக்க சொல்லிக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியே ஆரம்பித்தி விட்டீர்கள் போ தெரிகிறது.அதில் சேருவதற்குக் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அதெல்லாம் சீக்ரெட்'டுங்க :))) இங்க‌ வெளிப்படையா சொன்னா அப்புறம் ரெய்டு வந்துடுவாங்க !

      Delete
  4. எங்கள் வீட்டிலும் இந்த க்ளாஸ் நடந்திட்டிருக்கு. டீச்சர்் நான் இல்லை. என் மருமகள். டொமேடோ ரைஸ்,டால், மைக்ரோ அவனில் உருளைக்கறி. தவிர எல்லாம் தாளித்துக் கொட்டி வறுத்த ரவை கொடுத்து விடுகிறோம். வெங்காயம் வதக்கி இரண்டு பங்கு தண்ணீரில் ரவையைக் கலந்து மைக்ரோவேவ் செய்யவேண்டியதுதான். உப்புமா ரெடி. உன்னுடைய ஸ்கூலுக்கு அட்மிஷன் எப்போது.ரஸமானஸ்கூல். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      பதிவின் தலைப்பே இப்படி 'ரஸமான'ஸ்கூல்'னு வச்சிருக்கலாமோனு தோணுது. அவ்ளோ சூப்பரா, பொருத்தமா இருக்கு இந்த வார்த்தை !

      ஓ, உங்க வீட்டிலும் ஆரம்பிச்சாச்ச்சா :)) உப்புமாவே அவசர சமையல், இது அதைவிட ஈஸியா இருக்கும்போலயே :))

      தலைமை ஆசிரியையாக எப்போ வர்றீங்கனு சொல்லுங்க, அப்பவே அட்மிஷனை ஆரம்பிச்சிடலாம் :)) அன்புடன் சித்ரா.

      Delete
  5. மகளுக்கு வகுப்புகள் தொடரட்டும். எங்களுக்கு பதிவுகள் தொடரும்! :)

    மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டு 'மகிழ்ச்சி' வெங்கட் :)

      Delete