இப்படி காய்ஞ்சு போய் கிடக்கே !! கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா ? இல்லாட்டி அப்படியே விட்டுடலாமா ? ஏதாவது ஐடியா சொல்லுங்க !!
**********************************************
இதே மாதிரியான கோடைகாலத்தில்தான் ஏற்கனவே இருந்த அப்பார்ட்மென்டிற்கு குடி வந்தோம். பக்கத்திலுள்ள பார்க்'கிற்கு வாக் போக ஆரம்பித்தபோது குளிர்காலமே வந்துவிட்டது
ஒருசில மரங்கள் & செடிகளைத் தவிர பார்க் முழுவதுமே காய்ந்துபோய் கிடந்தன. அங்கிருந்த மற்ற மரங்கள் & செடிகளை எல்லாம் அளவோடு வெட்டிவிடும்போது இந்த செடியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். கவனக் குறைவால் பிடுங்காமல் விட்டிருப்பார்கள் என நினைத்தேன்.
ஆனால் வசந்தம் வந்ததுமே நம்ப முடியாத அளவிற்கு பச்சைப்பசேல் என துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.
*************************************************
வருகை தந்த அனைவருக்கும் நன்றி !
ஏதோ கூடு கலைத்துப் போட்ட்டது போல் தெரிகிறதே ! எண்ண என்று புரியவில்லையே.....
ReplyDeleteஆமாம், நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன், கூடி கட்டி கலைச்சு போட்டமாதிரி இருக்குன்னு :)
Deleteவருகைக்கு நன்றிங்க. உங்க மெயில செக் பண்ணீங்களா !!
என்ன செடி சித்ரா ? ..அதை அப்படியே கூட்டி வேர் கிட்ட சேர்த்துடுங்க இல்லைன்னா பெருக்கி வேற செடிகளுக்கு மேலே போட்டுடுங்க mulch மாதிரி ..
ReplyDelete
Deleteஎன்ன செடினு தெரியல அஞ்சு. ஆனால் காய்ஞ்சு போச்சேன்னு எந்த செடியையும் பிடுங்கிடக் கூடாதுனு தெரியுது. அப்படித்தான் காய்ந்துபோன எங்க வீட்டு மிளகாய் செடிகளும் இப்போ ஜம்ஜம்னு வந்திருக்கு.
நீங்க சொல்றதுதான் இலைகள் கிளைகளை எல்லாம் பொடியாக்கி மீண்டும் செடிகளுக்கே உரமாக்கிடறாங்க. வருகைக்கு நன்றி அஞ்சு.
என்ன சொல்றது...
ReplyDelete:)
ReplyDeleteவருகைக்கு நன்றி வெங்கட்!
அழகோ அழகு ஸோ குப்பையிலும் மாணிக்கம்! இனிமேல் உங்கள் தோட்டத்துக் குப்பையை அவசரமாகக் கூட்டிக் கழித்து பெருக்கு வகுத்துவிடக் கூடாது அதில் இப்படியும் ஒரு மாணிக்கம் கிடைக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்கள் இல்லையா நாங்களும் தெரிந்து கொண்டோம்...அருமை சகோ/சித்ரா
ReplyDeleteஆமாம் சகோ துளசி & கீதா, முக்கியமா காய்ஞ்சுபோன செடிகளை கொஞ்சம் பொறுத்திருந்துதான் அகற்ற வேண்டும். நன்றி துளசி & கீதா.
Deleteவசந்தத்தின் வர்ணஜாலம்....அழகு...
ReplyDelete
Deleteவசந்தம் ஒரு அழகு என்றால் இங்கே குளிர்காலம் அதைவிட அழகு. நன்றி அனு.
போனால் போகட்டும் பிழைத்துப்போ. வஸந்தமலர் பார்த்து மகிழுங்கள். அன்புடன்
ReplyDeleteஹா ஹா விமோசனம் கிடைத்ததுபோல் உள்ளதே ! நன்றிமா.
Deleteநல்லகாலம் எங்கே கூட்டிபெருக்கி விடுவீங்களோன்னு நினைச்சேன்.. இங்கும் இப்படி இருக்கினம். பார்த்தால் குப்பை போல இருக்கும். ஆனா குப்பை இல்லை. விண்டருக்கு போயிட்டு,சம்மருக்கு வருவினம். பூ பூத்த பின் அழகா இருக்கு
ReplyDeleteநீங்க நெனச்சத கொஞ்சம் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். நான்வேறு அதற்கான உபகரணங்களை கைகாசு போட்டு வாங்கிவந்துவிட்டேன் :))
Deleteநன்றி ப்ரியா !
சருகும் அழகாய் துளிர்த்து மலர்ந்து கண்ணைக் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.
ReplyDeleteஆமாம், அழகான பளிச் நிறத்தில் கண்களைக் கவர்ந்தது. நன்றி முகில்.
Delete