Sunday, July 24, 2016

மஞ்சள் செம்பருத்தி !



என்னமோ தெரியல, திடீர்னு மஞ்சள் நிறப் பூச்செடி வாங்க வேணும்போல் தோனியது. இரண்டு வாரங்களுக்குமுன் கடைக்குப் போனேன், துளுக்கு சாமந்தி ஈர்த்தது. ஆனாலும் வாங்கிவந்து நிழலில் வைத்து காயவைக்க வேணுமா ? பாவம், அது கடையிலேயே இருந்துவிட்டுப் போகட்டும் என வந்துவிட்டேன்.

கடையிலயுமே சரியா தண்ணி விடாம செடிகள் வாடிப்போய் இருந்தன. அதன் பிறகு அந்தக்கடை பக்கமே தலை காட்டல! நிறைய மல்லிச்செடிகள் வந்திருந்தது. சிவப்பு நிறத்திலேயே கொஞ்சம்கொஞ்சம் நிறம் மாறினாற்போல் செம்பருத்தி செடிகளும் இருந்தன.

நேற்று 'ட்ரேடர் ஜோஸ்' போனபோது சிவப்பு நிற செம்பருத்தி செடிகளுடன் இந்த மஞ்சள் நிற செம்பருத்தி செடியும் (நிறைய மொட்டுக்களுடன்) இருந்தது. ஏதோ தைரியத்தில் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் சென்ற வாரம் செக்கிங்'கு வந்த  Apt mgmt ppl, தொட்டிச் செடிகளை வேலியின்மேல் வைத்துக்கொள்ள பச்சைக்கொடி காட்டியதால் வந்த தைரியத்தில்தான்.

காலையில் ஒரு ஐந்து நிமி இடது பக்கமும், மாலையில் ஒரு ஐந்து நிமி வலது பக்கமுமாக வெயில் வரும். இதில் (ஏதோ)பாதுகாப்பு கருதி(யாம்), இடது பக்கம் மட்டுமே வைக்க அனுமதி.

                                         இன்று அதிகாலையில் ஒரு பூ பூக்கத் தொடங்கியது.

                    வாக் போயிட்டு 8 மணிக்கெல்லாம் வந்து பார்த்தால் நன்றாகப் பூத்திருந்தது.

                                        10 மணி வாக்கில் மற்றொன்றும் பூத்துவிட்டது :))
இந்த ரெண்டு பூக்களையும்தான் வளைச்சுவளைச்சு படம் எடுத்து வச்சிருக்கேன் ! இனிமேல் பூப்பதையும் இங்கேயே கொண்டுவந்துவிடுவேன்.

நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை, மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து .... அவ்வ்வ்வளவு அழகு !!

8 comments:

  1. அனைத்து கோணக்களிலும் மஞ்சள் செம்பருத்தி... அழகோ அழகு

    ReplyDelete
  2. அழகு...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்தமைக்கும் நன்றி வெங்கட் !

      Delete
  3. :) வெகு அழகா இருக்கு!! எங்க வீட்டுப்பூ ஒன்லி மஞ்சள்!! ;)

    ReplyDelete
    Replies
    1. நானும் மஞ்சள்னுதான் எடுத்து வந்தேன் மகி, பூத்த பிறகுதான் தெரிந்தது இரண்டு நிறங்கள் இருக்கென !

      Delete
  4. அழகே அழகே. எல்லாம் அழகே...மஞ்சளும் அழகே...பூவும் அழகே...

    புகைப்படங்கள் அழகு....ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      அப்படியே இந்த வரியையும் சேர்த்துக்கோங்க, " கீதாவின் பின்னூட்டமும் அழகே"ன்னு :)

      Delete