Saturday, April 19, 2014

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் !!


வசந்தகால விடுமுறையில் மகள் வீட்டுக்கு வந்தபோது " இந்த ஊர் சாப்பாடு சாப்பிட்டு போரடிச்சிடுச்சும்மா, அதனால தினமும் இல்லையென்றாலும்,  வாரத்துல ரெண்டு மூனு தடவையாவது நம்ம‌ சாதம் வச்சு சாப்பிடப் போறேன், கோடை விடுமுறையில் சாதம், சாம்பார் & உருளைக்கிழங்கு செய்யச்சொல்லி கற்றுக் கொடும்மா" என்று கேட்டிருக்கிறாள்.

அதனால‌ அடுத்த வருடத்துக்கான ஹவுஸிங் செலக்ட் பண்ணும்போது கிச்சனுடன் கூடிய அப்பார்ட்மெண்ட் செலக்ட் பண்ணியாச்சு.

இந்த இடத்தில் ////////////// "மகளுக்கு காரம் சாப்பிட்டப் பழக்கம் போய்விட்டதா? அதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். நம் உடம்பில் பழகிய காரம் அவ்வளவு எளிதில் போகாது. மறுபடி காரம் சாப்பிட ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள்" //////////////////// என்று ரஞ்சனி அவர்கள் ஏற்கனவே இங்கு சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. உண்மைதான் . ஒரு பெரிய கவலை விட்டது.

இதன்மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், எங்க பாப்புவுக்கு ஜூன் மாதத்தில் சமையல் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

"அதுக்கு இப்போ இன்னாவாம் ?" என்று கேட்கிறீர்களா ! வெயிட் வெயிட் !

சமையல் கத்துக்கணும்னா சும்மாவா ?  அரிசி, பருப்பு & காய்கறி எல்லாம் வாங்க காசு வேணாமா ?  அதுக்குத்தான் இந்த‌ ஐடியா. 'சம்மர்'ல சமையல் வகுப்பு நடத்தலாம்னு இருக்கேன்.

சமையல் வகுப்பில் சேர‌ விருப்பமுள்ளவர்கள் அடுத்த பக்கத்திலுள்ள விண்ணப்பத்தினைப்  பூர்த்தி செய்து அனுப்பலாம். குறைவான எண்ணிக்கையிலேயே இடங்கள் உள்ளதால்,  first come, first served basis ல் தேர்வு செய்யப்படுவார்கள். அதனால‌ முன்கூட்டியே அப்ளை பண்ணுவது நல்லது.

என்னவொன்று, அமெரிக்காவில் வகுப்புகள் நடக்கறதால சிலபல ஆயிரம் (டாலர்கள்) செலவாகும். செலவானாலும் 'கற்றுவிடலாம்'  என்ற‌ நம்பிக்கையுடன் இருக்கலாம்.

வகுப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம். வயது வரம்பெல்லாம் இல்லை. "ஆறு மாதம்தானே முடிஞ்சிருக்கு, எங்க பாப்புவ சேர்த்துப்பாங்களோ ? " என்ற சந்தேகமெல்லாம் வேண்டவே வேண்டாம். கண்டிப்பா சேத்துக்குவேன், ஆனா ஃபீஸ் மட்டும் டபுளா pay பண்ணணும். அம்மா & பொண்ணு ரெண்டு பேருமா சேர்ந்தாங்கன்னா மொத்த கட்டணத்துல 10% சலுகை உண்டு. குடும்பத்தோட வர்றதுன்னா 25% சலுகை வழங்கப்படும்.

இதுமாதிரி நிறைய rules & regulations எல்லாம் இருக்குங்க‌. அதையெல்லாம் பணம் கட்டிய பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

சமைக்கும் பாத்திரத்தை 'டொப்'புன்னு வச்சிங்கின்னா அதுக்கு தனியா ஃபைன். பக்கத்து வீட்டுக்கு காது கேக்குற மாதிரி பேசி 'அப்பார்ட்மெண்ட் ஆஃபீஸ்'ல மாட்டி விட்டுட்டிங்கின்னா அதுக்கு தனியா ஃபைன். சாப்பிடவே முடியாத அளவுக்கு தீச்சிட்டிங்கன்னா அதுக்கு தனியா ஃபைன் ....... இப்படியா பல 'ஃபைன்'க‌ள் இருக்கு.

இவற்றை எல்லாம் வகுப்பினுள் நுழையும்முன் நான்கைந்து பக்கங்களில் படிக்கவே முடியாத பொடீஈஈஈ எழுத்துக்களில் இருக்கும் அந்த தாளில் உங்களை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வைத்துக்கொள்வேன்.

அட, அதுக்குள்ள விண்ணப்பங்கள் மலைபோல குவிஞ்சு கிடக்கே ! உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து, வகுப்பில் இடம் கிடைத்தால் .......... அங்கு உங்களை சந்திக்கிறேன் !! 

13 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்! சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்கு நிஜமாவே நாங்க:) அப்ளை பண்ணிட்டோம் சித்ராக்கா! 10% சலுகைய மறக்காம குடுக்கோணுமாக்கும்! ;)

    கூடவே "வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆறு மாதக் குழந்தை அழுதால் குழம்பையும் சமாளித்து குழந்தையையும் சமாளிப்பது எப்படி?"..."டீ வைக்கும்போதே பொங்கி எழுந்துவிடும் பாப்பாவை வைத்துக்கொண்டு இரவு உணவு சமைப்பது எப்படி?" இது போன்ற ஸ்பெஷல் க்ளாஸுகளும் நடத்தவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்ன்ன்ன்ன்ன்! :))))

    ReplyDelete
    Replies
    1. பால் எப்போ & எப்படி பொங்கி வரும்னே இன்னமும் தெரியல. (இந்த சீக்ரெட்டை யாரிடமும் போட்டு உடைச்சிடாதீங்கோ, வேணுமின்னா கூட 10% சலுகை தர்றேன்). இதுல "பொங்கி எழுந்துவிடும் பாப்பாவை வைத்துக்கொண்டு" ...... சிரிச்சு சிரிச்சு .... முடியல மகி.

      பதிவுக்குத் தலைப்பு என்ன வைப்பதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை உங்க பின்னூட்டத்திலிருந்து 'சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல்'ஐ எடுத்துக்கப் போறேன். தலைப்புக்கு நன்றி மகி. அதனால மேற்கொண்டு 10% ......... ம்ம்ம் ........ இப்படியே போனால் க்ளாஸே ஃப்ரீயாயிடுமோ ? எதுக்கும் யோசிக்கணும் !

      Delete
    2. மகி,

      தாளிக்க முடியாட்டி 'பத்தியக்குழம்பு'ன்னு சொல்லிட வேண்டியதுதான். ம்...அதானே, உங்களுக்கா சொல்லித்தரணும், நீங்கதான் சட்னியையே தாளிக்க மாட்டீங்களே ! ஞாபகம் வந்திச்சே !

      Delete
    3. ஹிஹி...சட்னி மட்டும்தான் தாளிக்க மாட்டேன், ஆனா வ.குழம்புக்கு ஆரம்பமே தாளிதம்தான். தாளிச்சு, கொதிக்க வைச்சு இறக்குவேன். கடைசியா தாளிப்பதில்லீங்கோ! ;)

      Delete
    4. நானும் உங்கள மாதிரிதான் மகி, தாளித்துதான் குழம்பு செய்வேன். கடைசியில் தாளிப்பு என்றால் கொஞ்சம் சோம்பலாகிவிடும்.

      Delete
  2. உங்க வருங்கால ஸ்டூடண்ட் என்னத்தை நறுக்குறாங்க? :) டிரைட் மஷ்ரூம் போல தெரியுது??!! :)

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டா சொல்லிட்டீங்க மகி, அதேதான். 'ஜேப்பனீஸ் குக்கிங்' ப்ராஜெக்டிற்காக சமைத்தபோது எடுத்தது.

      Delete
  3. // பணம் கட்டிய பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்... //

    அது சரி...!

    ReplyDelete
  4. இல்லைங்க.... நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும். டீச்சர் போஸ்ட் இருந்தா சொல்லுங்க... அதை நான் ஏத்த்துக்கறதுக்கு இருபது பக்க கட்டளைகள் இருக்கு அனுப்பி வைக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies

    1. "நமக்கு சமையல் ரொம்பவெ நல்லா தெரியும்" ________ பரவாயில்லையே ! அப்படின்னா முதலில் வகுப்பை எங்க வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்போல !

      வந்து மாட்றவங்க‌ கிட்ட வசூல் பண்ணலாம்னு பார்த்தால், டீச்சர் போஸ்ட் தரச்சொல்லி செலவுக்கு வழி சொல்றீங்க.

      Delete
  5. இது நல்ல ஐடியாவே இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஐடியா நல்லா இருக்குன்னு சொன்னா போதுமா ? யாரும் சேர மாட்டிங்கிறீங்களே !!

      Delete